அணிந்துரை

தமிழில்: ஸினூஃபா அன்ஸார்

அணிந்துரை

சங்கை மிக்க சகோதரிகளே..!

அணிந்துரை

அணிந்துரை

இஸ்லாமிய நிலையம் -IPC வெளியிடும் இந்த நூல் ஒரு சாதாரண இதழ் அல்ல.
மாறாக, குவைத்தியர் வீட்டில் பணிச்சேவை ஆற்றும் காலமெல்லாம் இந்த நூல் எம்
இல்லப் பணிச் சகோதரிகளுக்கு சிறந்த வழிகாட்டியாய்.., நல்ல அறிவுரை பகரும்
உன்னத சாதனமாய்.., அவர்தம் பணிச்சேவைகளை இலேசாக்கி வைக்கும் நல்ல
தோழியாய் அமையும் என நம்புகின்றேன்.
ஆம்..! பணியாளர்களின் பண்புகளும்.., மாண்பு பெறும்..! குணநலன்களும் சீர்
பெறும்..!!
இலங்கை,இந்தியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ்,எத்தியோப்பியா போன்ற
பலநாட்டு மண் பிரசவித்த சகோதரிகள், பணிச்சேவை நிமித்தம் குவைத் மண்ணில்
தடம் பதிக்கின்றனர்.அவர்கள் சிலர் புனித இஸ்லாத்தை சார்ந்தவர்களாக
இல்லாதிருக்கின்றனர்.
எனினும்கூட அவர்கள், நேர்வழியை நுகர.., குவைத்திலுள்ள எமது இஸ்லாமிய
அழைப்பகத்துக்கு எப்போதும் காலாரலாம்.
மேலும், முக்கிய பொருளடங்கிய.., உங்கள் தேவைக்கான அம்சங்கள்..,
பல்வேறு தலைப்புக்களில் இந்த வெளியீட்டில் இடம்பெற்றுள்ளன.அவையனைத்தும்
பணிச்சேவையாளர்களுக்கு மிக அத்தியாவசியமானவையே..!
காலம் அவர்களைக் கச்சிதப்டுத்தி.., அவர்தம் பணிச்சேவைகளையும்
அழகுபடுத்தி இல்லத்தினருடனான உறவையும் மரியாதைப்படுத்தி.., வாழ்வாங்கு
வாழச் செய்ய இறையருள் துணை நிற்கப் பிரார்த்திக்கின்றேன்.
மேலாளர்
அழைப்பகப் பிரிவு
மகளிர் தலைமை கிளை
இஸ்லாமிய நிலைம் -IPC
ரவ்தா

Related Post