மௌலவி நஷ்மல் (பலாஹி)
இஸ்லாம் ஒரு இயற்கை நெறி! பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட சிந்தனைகளை அது முன்னிறுத்துவதில்லை..! எந்தவொரு அம்சத்துக்கும் உண்மையான பின்னூட்டங்களையும், அழகிய காரண காரணிகளையும் ஆணித்தரமாக முன்வைத்துப் பேசுகின்றது..!பொதுவாக ஸஃபர் மாதத்தை பீடை மாதமாக வருணக்கும் வழமை சலி மூடர்களிடத்தில் உண்டு!
அன்றைய ஜாஹிலிய்யாக் காலம் முதல் இன்றுவரை ஸபர் மாதம் தொடர்பான மூட நம்பிக்கைகளும், அதன் எச்ச சொச்சங்களும்; காணப்பட்டே வருகின்றன. எவ்வாறு அந்தக் கால மக்கள் இம்மாதத்தில் நல்ல காரியங்களை மேற்கொள்வது பீடை என்று கருதினார்களோ அதேபோன்று நமது சமூக மக்களும் இன்று நல்ல விடயங்களை இம்மாதத்தில் தள்ளிப் போடுவதைக்காணலாம்.
‘வல்லமையும் மாண்பும் உடைய அழ்ழாஹ் சொன்னான். ஆதமின் மகன்(மனிதன்) என்னைப் புண்படுத்துகின்றான். ‘காலத்தின் கைசேதேமே!’ என்று அவன் கூறுகிறான். ஆகவே, உங்களில் ஒருவர் காலத்தின் கைசேமே என்று கூறவேண்டாம். ஏனெனில், நானே காலம் (படைத்தவன்) அதில் இரவையும், பகலையும் நானே மாறி மாறி வரச்செய்கிறேன். நான் நாடினால் அவ்விரண்டையும்(மாறாமல்) பிடித்து(நிறுத்தி) விடுவேன். (பூமியைச் சுழல விடாமல் நிறுத்தி விடுவேன்) என்று கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி), நூல்: முஸ்லிம்-4521)
1. ஸபர் மாதத்தில் ஒரு செயலைச் செய்யாது முற்படுத்தல் அல்லது பிற்படுத்தல்.
காலங்களைப்பற்றி அழ்ழாஹ் திருமறையில் குறிப்பிடும் போது, ‘வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அழ்ழாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங் களின் எண்ணிக்கை அழ்ழாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கு இழைத்து விடாதீர்கள்!’(அல்குர்ஆன் 09:36)
1. ஸபர் மாதத்தில் ஒரு செயலைச் செய்யாது முற்படுத்தல் அல்லது பிற்படுத்தல்.
(ஹஜ் பயணத்தில்) ஒட்டகங்களின் முதுகிலுள்ள சுமைகளின் வடு காய்ந்து மறைந்து ஸஃபர் மாதமும் கடந்துவிட்டால் உம்ரா செய்ய நாடுபவருக்கு உம்ரா செய்வது கூடும் என்று கூறிவந்தனர்.’ (ஹதீஸின் சுருக்கம்) (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி), நூல்: புஹாரி-1564)
’அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், தொற்று நோய்கிடையாது. ஸஃபர் மாதப் பீடை கிடையாது, ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது என்று சொன்னார்கள்.’ (ஹதீஸின் சுருக்கம்) (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி), நூல்: புஹாரி-5717)
ஸபர் மாதங்களில் என்னவெல்லாம் நடக்க வேண்டுமென அழ்ழாஹ் ஏற்படுத்தியுள்ளானோ அதேபோல் ஏனைய மாதங்களிலும் அழ்ழாஹ் ‘கழாகத்ர்’ என்ற வகையில் ஏற்படுத்தி வைத்திருப்பான். இவ்வாறு ஸபர் மாதத்தை தவிர்க்கின்ற மக்கள் ஈமானின் முக்கிய தூணான ‘கழாகத்ர்’ என்ற பகுதியை சரியாக விசுவாசிக்காததன் காரணத்தினாலேயே இவ்வாறு செய்கின்றனர்.
ஸபர் மாதத்தின் இறுதிப் புதன்கிழமையைப் பீடை எனக் கருதுவதால் ‘ஒடுக்கத்துப்புதன்’ என்ற பேரில் நமது சமுதாய மக்கள் பீங்கான்களிலும், வாழை இலைகளிலும் ‘இஸ்ம்கள்’ எழுதி கண்ணூறு கழிக்கின்றனர்.
கால நேரங்களை எவ்வளவோ திட்டமிட்டு பயனுள்ள வழிகளில் கழிக்க வேண்டிய எம்மக்கள் இத்தகைய பிற்போக்குத் தனமான செயல்களைச் செய்து, நன்மைகளை அழித்து வழிகேட்டை உருவாக்குகின்றனர்.
இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் மிகக்குறைந்த அளவில் சில கால, நேரங்களில் சில அம்சங்களைச் செய்யக் கூடாது எனத்தடை வந்துள்ளதே தவிர நாமாக எமது மனோ இச்சைப் பிரகாரம் எதையும் ஹலால், ஹராம் எனத் தீர்மானிப்பது மிகவும் பாரதூரமானதாகும். அது அழ்ழாஹ்வின் தனித்துவப் பண்புகளில் பங்கு போடுவதாகும்.
இதனை அழ்ழாஹ் ‘இது அனுமதிக்கப் பட்டது, இது விலக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அழ்ழாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறாதீர்கள்! அழ்ழாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள்.’ (அல்குர்ஆன் 16:116) எனக் கூறுகின்றான்.
இவை எல்லாவற்றையும் விட ஆச்சரியம் என்னவென்றால், இம்மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் பல யுத்தங்களையும் மேற்கொண்டுள்ளார்கள். அவற்றில் ‘ஹஸ்வத்துல் அப்வாஉ’ என்ற யுத்தத்தில் தாங்களே கலந்து கொண்டர்கள். அதே போல் ஹிஜ்ரி 3ம் ஆண்டு ஒரு கூட்டத்தினர் நபிகளாரிடம் வந்து தாங்கள் இஸ்லாத்தை ஏற்றதாக் கூறி மார்க்கத்தை தங்களுக்கு கற்றுத் தருமாறு வேண்டிய போது ‘மர்தத்’ என்பரை தலைவராகக் கொண்ட ஒரு குழுவினரை நபி(ஸல்) அவர்கள், அவர்களுடன் அனுப்பி வைக்க, அக்கூட்டத்தினர் அவர்களை அழைத்துச் சென்று சதி செய்து கொலை செய்த சம்பவமும் இம்மாதத்தில்தான் நடைபெற்றது.
ஹிஜ்ரி 4ம் ஆண்டு ஸபர் மாதத்தில் பிஃரு மஊனாப் போரும், கைபர் வெற்றியும், ஹிஜ்ரி 9ல் ஹஸ்அம் கோத்திரத்தாருக்nதிராக ‘குத்பத் இப்னு ஆமிர்’ என்பவரது தலைமையில் படைப்பிரிவு அனுப்பி வைக்கப்பட்ட நிகழ்வும் இம்மாதத்தில்தான் நடைபெற்றது.
இது தவிர இட்டுக்கட்டப்பட்ட சில செய்திகளும் இம்மாதத்தை மக்கள் ஒதுக்குவதற்கு காரணமாக அமைகின்றன. உதாரணமாக, ‘ஸபர் மாதம் சென்று விட்டதை யார் எனக்கு நற்செய்தி சொல்கின்றாரோ அவருக்கு நான் சொர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்கின்றேன்.’ என்பதைக் குறிப்பிடலாம். இஸ்லாம் சில நேரங்களில் தொழக்கூடாது எனத் தடைவிதிக்கின்றது. சில நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது எனத் தடை விதிக்கின்றது. ஏழு நாட்களுள் வெள்ளிக் கிழமையை அமலைக் கொண்டு விஷேடமாக சிறப்பிக்க கூடாது என்கின்றது தவிர எல்லா நாட்களும் இஸ்லாத்தில் நல்ல நாட்களே ஆகும்.