-அல்பாக்கவி
வானவர்கள் மீது நம்பிக்கை..! – 2
நற்செயல் என்பது உங்களுடைய முகங்களைக் கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவதல்ல! மாறாக அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும் ஒருவன் முழுமையாக நம்புவதும் மேலும் (அல்லாஹ்வின் ள்ள நேசத்தின் காரணமாகத்) தமக்கு விருப்பமான பொருளை உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கருக்கும், யாசிப்போருக்கும், அடிமைகளை மீட்பதற்கும் வழங்குவதும், மேலும் தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தைக் கொடுத்து வருவதுமே நற்செயல்களாகும். மேலும், வாக்குறுதி அளித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களும், வறுமை மற்றும் துன்பங்களின் போதும் சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் நடக்கும் போராட்டத்தின் போதும் பொறுமையுடன் நிலைத்து இருப்பவர்களுமே புண்ணியவான்கள் ஆவர்! இவர்களே உண்மையாளர்கள்; மேலும் இவர்களே இறையச்ச முடையவர்கள்.
- மனிதர்கள் வானவர்களாக முடியுமா ?
மனிதர்கள் ஒருபோதும் வானவர்களாக முடியாது. ஆனால் வானவர்கள் விரும்பிய தோற்றத்தில் வரமுடியும்.
- வானவர்கள் இறைவனின் பிள்ளைகளா ?
சில மதத்தவர் வானவர்களை இறைவனின் பிள்ளைகள் எனக் கூறுவதையும் இறைமறை மறுக்கிறது.
‘ உங்கள் இறைவன் உங்களுக்கு ஆண்மக்களை வழங்கிவிட்டு தனக்கு வானவர்களை பெண்மக்களாக ஆக்கிக் கொண்டானா? (17:40) என்ற வசனமும், அவன் பெறவுமில்லை. பெறப்படவுமில்லை என்ற 112:1-4 வசனமும் இதற்கு ஆதாரமாகும்.
- வானவர்கள் பெண்களா ?
أَمْ خَلَقْنَا الْمَلَائِكَةَ إِنَاثًا وَهُمْ شَاهِدُون
வானவர்களை சிலர் தேவைதைகளாகவும் பெண்களாகவும்; சித்தரித்துக்கூறும் பொய்ச் செய்திகளையும் மறுத்து அவர்கள் பெண்களல்ல என இறைவனின் வசனங்கள் 43:19,37:150,53:27 தெளிவுபடுத்துகின்றன.
- வானவர்களின் உருவத் தோற்றம்.
நான் வானவர் ஜிப்ரீலை அவரின் அசல் உருவத்தில் பார்த்தேன். அவருக்கு 600 இறக்கைகள் இருந்தன என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது, ஆதாரம்: புகாரி,தப்ரானி). (அவன்) வானவர்களை இரண்டிரண்டு, மும்மூன்று, நன்னான்கு இறக்கைகள்; கொண்ட தூதர்களாக அனுப்புவான் (அல்குர்ஆன் 35:1)
‘அதன் மேல் (நரகின் மீது)கடுமையும்,கொடுமையும் கொண்ட வானவர்கள் உள்ளனர். 66:6 عَلَّمَهُ شَدِيدُ الْقُوَى ذُو مِرَّةٍ فَاسْتَوَى அழகிய தோற்றமுடைய வலிமைமிக்கவர் (ஜிப்ரீல்) அதைக்கற்றுக் கொடுக்கிறார். (53:5,6). ‘அழகிய தோற்றமுடையவர்’ என 12:31 என்ற வசனமும் தெளிவு படுத்துகிறது. ذُو مِرَّةٍ ‘தூ மிர்ரத்தின்’ என்பதற்கு ‘அழகிய தோற்றமுடையவர்,பெரும் வலிமை மிக்கவர்’ என இப்னு அப்பாஸ் (ரலி) விளக்கமளிக்கிறார்கள்.
- வானவர்களின் உணவு, பானம்
நபி இப்றாஹீம் (அலை) அவர்களிடம் கண்ணியமிக்க விருந்தினர் வந்தபோது அவர்களுக்கு காளைக் கன்றை பொரித்து வைத்ததும் உண்ணாததைக் கண்ட நபியவர்கள் பயந்துவிட்டார்கள். பயப்படாதீர்கள். நாங்கள் உங்களுக்கு நற்செய்தி கூறிவிட்டுச் செல்ல வந்த வானவர்கள்’ என்ற செய்தி 51:26,27 வசனங்கள் எடுத்துரைக்கின்றன. இதிலிருந்து மனதர்களின் உணவை உண்ணவோ, அருந்தவோ மாட்டார்கள் எனத் தெரியவருகிறது.
- வானவர்கள்–வெட்கப்படுவார்கள்.
ஒருமுறை அபூபக்கர் (ரலி) ,உமர் (ரலி) நபிகளாரிடம் வந்தபோது, நபி(ஸல்)தமது ஆடைகளைச் சரி செய்யாத போது, உத்மான் (ரலி) வந்ததும் தமது ஆடையைச் சரிசெய்தார்கள். காரணம் வினவியபோது நபி (ஸல்) கூறினார்கள். ‘வானவர்கள் எவர் விசயத்தில் வெட்கப்படுகிறார்களோ அவர் விசயத்தில் நானும் வெட்கப்படுகிறேன்’ என்றார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல் :முஸ்லிம்:2401)
- வானவர்கள்–வேதனை–அடைகிறார்கள்
இறைவனின் நேசத்திற்குரியவரே மலக்குகளின் நேசத்திற்கும் உரியவர். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘வெங்காயம், பூண்டு (போன்றவற்றை) உண்டுவிட்டு நமது பள்ளிவாசல் பக்கம் வரவேண்டாம். நிச்சயமாக ஆதமின் மக்கள் வேதனை அடையும் (துர்வாடை வீசும்) பொருட்களி லிருந்து வானவர்களும் வேதனை அடைகிறார்கள்.’(அறிவிப்பவர்:ஜாபிர்இப்னுஅப்துல்லாஹ்,நூல் முஸ்லிம்-1655) –