பிறமதத்தவர்களிடம் :
இறைதூதர் அவர்களை பிரேதம் ஒன்று கடந்து சென்றது. உடனே நபியவர்கள் எழுந்து நின்றார்கள். உடன் இருந்தவர்கள் அது பிற மதத்தவரின் பிரேதம் என தெரிவிக்கப்பட்டது. அதற்கு மாமனிதரோ “அதுவும் ஓர் உயிரல்லவா?” என பதிலுரைத்தார்கள்.
இஸ்லாத்தை ஏற்காத எனது தாய் வந்திருக்கின்றார். அவரை நான் என்னுடன் வைத்துக்கொள்ளலாமா? என்று ஒரு பெண் இறைத்தூதரிடம் கேட்டபோது, “அவர் உம் தாயல்லவா? அவரை உம்முடன் வைத்துக்கொள்வீர்ராக!” என்றார்கள்.
எதிரியிடத்திலும் நேர்மை :
தான் சாப்பிட்ட இறைச்சியில் விஷத்தை கலந்த யூதப் பெண்ணை, தான் வேதனையை அனுபவித்தபோதிலும் மன்னித்தார்கள்.
போரில் கைப்பற்றப்பட்ட கைபர் பகுதியை தனக்குரியதாக ஆக்கிக்கொள்ளாமல் அங்கு வசித்து வந்த யூத மக்களுக்கே உரிமை கொடுத்தார்கள்.
போர்க் களத்தில் பெண் இறந்து கிடப்பதை கண்ட இறைத்தூதர்… பெண்களையும், சிறுவர்களையும் கொல்லக்கூடாது என கடுமையாக எச்சரித்தார்கள். போரின் போது முகங்களை தாக்கக்கூடாது, இறந்த உடலை சிதைக்கக் கூடாது, நீர்நிலைகள், நிழல் மற்றும் பயன் தரும் மரங்களை சேதப்படுத்தக் கூடாது என கடுமையான விதிகளை விதித்தார்.வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும், ஒவ்வொரு செயல்களிலும் எப்படி வாழ வேண்டும் மக்களுக்கு வாழ்ந்துகாட்டியவர். அறிவுரையோடு
நிறுத்தாது தன்னிலிருந்தே நடைமுறைபடுத்தி, தானும் கடைபிடித்து மக்களையும் கடைபிடிக்க செய்து நல்வழிபடுத்தியவர்!
வாய்ப்புகள் நிறைய இருந்தும் சுகபோகத்தில் வாழாத , அதிகாரம் இருந்தும் சலுகைகள் பெறாத, அரசு சொத்துக்களை தனதாக்கிக்கொள்ளாத, தனது வாரிசுகள் கூட அரசு பணத்தை அனுபவிக்க விடாத, தனக்கான சிறப்பான இடத்தை பயன்படுத்தி மக்களை தனக்குக்கீழ் பணிய வைக்காத, மாற்றுமதத்தவரை மதித்த, பேதம் கடைபிடிக்காத, எல்லாவித மக்களையும் சமமாக பாவித்த, எதிர்களிடத்திலும் நேர்மையைக் கடைபிடித்த, போர்களத்திலும் விதிமுறைகள் வகுத்த, தன் வாழ்நாள் முழுவதையும் வறுமையிலேயே கழித்த, பெண்கள் ஒருபோதும் ஆண்களுக்கு அடிமை அல்ல எனக்கூறி பெண்களை சிறப்பித்த, அப்பழுக்கற்ற, நற்பண்புகள் பொருந்திய இந்த மாமனிதரை . இஸ்லாமிய மக்கள் ஏன் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கின்றார்கள் என்பதை இப்போது உணர்ந்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
நன்றி:இஸ்லாமிய பெண்மணி மனிதர்குல மாணிக்கம் முஹம்மத் (ஸல்)-ஏன்..?-2 மனிதர்குல மாணிக்கம் முஹம்மத் (ஸல்)-ஏன்..?