இஸ்லாமிய வரலாற்றின் இனிய வேந்தன் உமர் (ரலி)..!

 

இஸ்லாமிய வரலாறு போற்றும் ஒரு மாபெரும் நபராக கிடைத்தவர்தான் உமர் (ரலி) அவர்கள்..!

இஸ்லாமிய வரலாறு போற்றும் ஒரு மாபெரும் நபராக கிடைத்தவர்தான் உமர் (ரலி) அவர்கள்..!

– முகம்மது சுல்தான்

ண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் இஸ்லாமிய அழைப்பின் ஆரம்பக் கட்டத்தில் இருந்போது, மக்காவில் இருந்த நிராகரிப்பாளர்கள் இருவரில் ஒருவருடைய மனத்தை இஸ்லாத்தின்பால் திருப்புமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிந்தார். அவர்தம் பிரார்த்னையை ஏற்றுக்கொண்ட இறைவன், இஸ்லாமிய வரலாறு போற்றும் ஒரு மாபெரும் நபராக கிடைத்தவர்தான் உமர் (ரலி) அவர்கள்..!

இஸ்லாமிய வரலாற்றில் உமர் (ரலி) என்ற பெயருக்கு தனிச் சிறப்பு உண்டு. அவரது ஆரம்ப கால வாழ்க்கை அஞ்ஞானத்தில் ஆரம்பித்தாலும்இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டதன் பின்பு அவர்களது வாழ்வு எந்தளவு தலைகீழ் மாற்றம் பெற்றது என்பது மட்டுமல்லஅவர்களின் தூய வாழ்வு இன்றைய முஸ்லிம்களும் இன்னும் இஸ்லாத்தை கடுமையாக விமர்சிப்பவர்கள் கூட உமர் (ரலி) அவர்களது வாழ்வைப் பற்றியும்ää அவரது ஆட்சி முறைகளைப் பற்றியும் அறிந்து மனதார பாராட்டுகின்றார்கள். அத்தகைய உமர் (ரலி) அவர்களின் வாழ்க்கையை இன்ஷா அல்லாஹ் நாம் இனி தொடராகப் பார்ப்போம்.

ஆரம்ப கால வாழ்வு

உமர் (ரலி) அவர்களின் பிறந்த தேதி பற்றிய சரியான குறிப்புகள் இல்லை எனினும்ää சற்றேறக்குறைய கி.பி.580 ஆம் ஆண்டு பிறந்திருக்கக் கூடும் என்றும்ää இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களை விட 10 வயது இளையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உமர் (ரலி) அவர்கள் மக்கத்துக் குறைஷிகளில் மிகவும் பிரபல்யமான கோத்திரமான அதீ என்ற குலத்தைச் சேர்ந்தவர்களாவார்கள். உமர் பின் கத்தாப் பின் நுஃபைல் பின் அப்துல் உஸ்ஸா பின் ரிஸா பின் ரிபான் பின் குரத் பின் அதீ பின் கத்ப் என்ற பரம்பரைபியில் வந்தவராவார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஒன்பதாவது பரம்பரையினரும்ää அபுபக்கர் (ரலி) அவர்களின் 8 வது பரம்பரையினரும் உமர் (ரலி) அவர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அந்தளவு இவர்களுக்கிடையே தொப்புள் கொடி உறவு என்பது குறிப்பிடத்தக்கது.

உமர் (ரலி) அவர்களின் முன்னோர்களில் ஒருவரான அதீ என்ற கோத்திரத்தவர்கள் மக்காவில் குறைஷிகளிடையே எழக் கூடிய பிரச்னைகளைத் தீர்த்து வைக்கக் கூடிய மத்திஸ்தர்களாகவும் செயல்பட்டு வந்தார்கள். ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களுக்கும்ää ஹர்ப் பின் உமைய்யா அவர்களுக்கும் இடையேää ‘யார் கஃபாவை நிர்வகிப்பது என்ற பிரச்னை எழுந்த பொழுதுää அதனைத் தீர்த்து வைப்பதற்கு உமர் (ரலி) அவர்களுடைய பாட்டனாரான நுஃபைல் தான் மத்தியஸ்தராக இருந்துää அந்தப் பிரச்னையைத் தீர்த்து வைத்தார். அப்துல் முத்தலிப் கஃபாவின் நிர்வாகியாக்கப்பட்டார். உமர் (ரலி) அவர்களுடைய தந்தையார் கத்தாப் அவர்கள்ää பனீ அதி குலத்தவர்களின் மிகவும் பிரபல்யமான நபராகத் திகழ்ந்தார். உமர்(ரலி) அவர்களுடைய வீடு ஸஃபா மற்றும் மர்வாவுக்கு இடையே அமைந்திருந்தது. உமர் (ரலி) அவர்கள் ஆட்சியில் இருந்த பொழுதுää அந்த வீடு அகற்றப்பட்டுää மக்கள் தங்கும் இடமாக மாற்றப்பட்டது.

உமர் (ரலி) அவர்களுடைய தாயார் கந்தமா அவர்கள்ää ஹிஸாம் பின் முகீரா என்பவருடைய மகளுமாவார். இந்த ஹிஸாம் பின் முகீரா பல தடவைகள்ää குறைஷிகளின் படைகளுக்கு தலைமை தாங்கிச் சென்றுள்ளார். இந்த தாய்வழிப் பாட்டனாரான ஹிஸாம் அவர்களும்ää காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தந்தை வலீத் – ம் சகோதரர்களாவார்கள். எனவேää இதன் மூலம் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் உமருடைய தாயாருக்கு மைத்துனர் முறையும்ää உமர் (ரலி) அவர்களுக்கு தாய் வழி சிறிய தந்தையாருமாவார்.

அபூ ஜஹ்ல் என்ற அம்ர் பின் ஹிஸாம் அல் முகீரா – இவர் உமர்(ரலி) அவர்களுடைய தாயாருக்கு சகோதரராவார். எனவேää இதன் மூலம் அபூ ஜஹ்ல் உமர் (ரலி) அவர்களுக்கு தாய் மாமன் உறவுடையவராகின்றார். உமர் (ரலி) அவர்களுடைய தாயாரின் ஒரு தங்கையை – அதாவது உம்மு ஸல்மா (ரலி) அவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மணமுடித்திருந்தார்கள்.

உமர் (ரலி) அவர்களுக்கு பல சகோதரää சகோதரிகள் இருந்தனர். அவர்களில் மிகவும் சிறப்புடையவர்கள் : ஜைத் மற்றும் ஃபாத்திமா ஆகியோர்களாவார்கள். ஜைத் (ரலி) அவர்களும்ää உமர் (ரலி) அவர்களும் ஒரு தகப்பனாருக்குப் பிறந்தää வௌ;வேறு தாய்க்குப் பிறந்த சகோதரர்களாவார்கள். இருப்பினும்ää அந்த மாறுபாடும்ää வேறுபாடும் அறியாத ஒருதாய் மக்களாகவே இருவரும் வளர்ந்தனர். அபுபக்கர் (ரலி) அவர்களுடைய ஆட்சியின் பொழுது நடந்த யமாமா போரில் ஜைத் (ரலி) அவர்கள் உயிர்த்தியாகியாக ஆனதன் பின்புää சகோதரனை இழந்த உமர் (ரலி) அவர்கள் கடுமையான மனவேதனைக்கு ஆளானார்கள். அதன் காரணமாகää ”யமாமா பகுதியிலிருந்து வீசுகின்ற தென்றல் காற்றில் எனது சகோதரனின் சுகந்தத்தை உணர்கின்றேன்””ää என்று அடிக்கடி கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.

ஃபாத்திமா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களுடன் பிறந்த சகோதரியாவார். இவர் ஸயீத் பின் ஜைத் பின் அம்ர் (ரலி) அவர்களுக்கு மணமுடிக்கப்பட்டிருந்தார்கள். இவர் தான் உமர்(ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்வதற்கு முக்கிய காரணகர்த்தாகவாக இருந்தார்.

உமர் (ரலி) அவர்களின் மைத்துனரான ஸயீத் (ரலி) அவர்கள் குறைஷிகளில் மிகவும் மதிக்கத்தக்க ஒருவராகத் திகழ்ந்தார்.

உமர் (ரலி) அவர்கள் மக்கத்துக் குறைஷிகளில் மிகவும் பிரபல்யமான கோத்திரமான அதீ என்ற குலத்தைச் சேர்ந்தவர்களாவார்கள். உமர் பின் கத்தாப் பின் நுஃபைல் பின் அப்துல் உஸ்ஸா பின் ரிஸா பின் ரிபான் பின் குரத் பின் அதீ பின் கத்ப் என்ற பரம்பரைபியில் வந்தவராவார்.

உமர் (ரலி) அவர்கள் மக்கத்துக் குறைஷிகளில் மிகவும் பிரபல்யமான கோத்திரமான அதீ என்ற குலத்தைச் சேர்ந்தவர்களாவார்கள். உமர் பின் கத்தாப் பின் நுஃபைல் பின் அப்துல் உஸ்ஸா பின் ரிஸா பின் ரிபான் பின் குரத் பின் அதீ பின் கத்ப் என்ற பரம்பரைபியில் வந்தவராவார்.

இஸ்லாத்தின் வெளிச்சப் புள்ளிகள் மக்காவைத் தரிசிக்கும் முன்பிலிருந்தே இவரது தந்தையான ஜைத் அவர்கள் சிலை வணக்கத்தை வெறுத்தொதுக்கியவர்ää இன்னும் ஓரிறைக் கொள்கையின் மீது நம்பிக்கை கொண்டிருந்தவர். இவர் சிறந்த புலவரும் கூட. அவரது பாடல் வரிகள் அவரது ஓரிறைக் கொள்கையை எடுத்தோதக் கூடியவையாக இருந்தன :

நான் ஒரு கடவுளை நம்புகின்றேன்

என்னால் ஆயிரம் கடவுள்களை நம்ப முடியாது.

லாத்தையும்  உஸ்ஸாவையும் மறந்தவன் நான்

ஞானமுள்ள மற்றும் அறிவுள்ள மனிதன் இதனை விட வேறு எதனைச் செய்ய முடியும்.

ஸயீத் (ரலி) அவர்களின் தந்தையான ஜைத் அவர்கள் ஓரிறைக் கொள்கையைப் பற்றி பேசியதன் காரணமாகää உமர்(ரலி) அவர்களின் தந்தையான கத்தாப் அவர்கள் ஜைத் அவர்களைக் கொலை செய்து விட்டார்கள். இவர்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தூதுத்துவப் பணிகள் ஆரம்பிக்கு முன்னமேயே கொலை செய்யப்பட்டு விட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை மக்காவில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த அந்த நாட்களில்ää தனது தந்தையைப் போலவே தானும் ஓரிறைக் கொள்கையை உடனே உவந்தெடுத்துக் கொண்டவர் தான் உமர் (ரலி) அவர்களின் மைத்துனரா ஸயீத் (ரலி) அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post