இஸ்லாத்தை அறிந்துகொள்ளுங்கள்!

ஒரு இயந்திர வாகனத்தை உருவாக்க எத்தனையோ பாகங்கள் தேவை! அதேபோல் இந்த உலகத்துக்கு எத்தனையோ விதமான மனிதர்கள் தேவை! மனிதர்கள் பல்வேறு சமூகத்தவராக,இனத்தவராக,மொழியினராக படைக்கப்பட்டிருப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? அனைவரும் ஒரே விதமாக ஏன் படைக்கப்படவில்லை?

ஒரு இயந்திர வாகனத்தை உருவாக்க எத்தனையோ பாகங்கள் தேவை! அதேபோல் இந்த உலகத்துக்கு எத்தனையோ விதமான மனிதர்கள் தேவை! 

– மு.அ.அப்துல் முஸவ்விர்

ரு இயந்திர வாகனத்தை உருவாக்க எத்தனையோ பாகங்கள் தேவை! அதேபோல் இந்த உலகத்துக்கு எத்தனையோ விதமான மனிதர்கள் தேவை! மனிதர்கள் பல்வேறு சமூகத்தவராக,இனத்தவராக,மொழியினராக படைக்கப்பட்டிருப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? அனைவரும் ஒரே விதமாக ஏன் படைக்கப்படவில்லை?
ஆம்! அது ஒரு நியாயமான கேள்வியே!!
சற்று சிந்தித்துப் பாருங்கள்! மனிதர்கள் அனைவரும் ஒரே விதமாகப் படைக்கப்பட்டிருந்தால், பரஸ்பர அறிமுகத்துக்கும், பல்வேறுபட்ட வாழ்க்கை வழிமுறைகளுக்கும் இடம் கிடைத்திருக்குமா, என்ன?
ஆகவே, மனிதர்கள் பரஸ்பரம் ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டே இவ்வாறு படைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது வெளிப்படை! இவ்வாறு படைக்கப்பட்ட மனிதனின் வாழ்வு எப்படி அமைய வேண்டும். ஒரு மோட்டார் வாகனத்தின் பல்வேறு பாகங்கள் வெவேறு விதமாக இருப்பினும் அவையனைத்தும் ஒரே விதமான இயக்கவரைவோடு – (Mechanism) இயங்குகின்றன. அந்த மோட்டார் வாகனத்தை ஒழுங்காக இயக்க வைக்க வேண்டும் என்பதே அந்த வரைவு!
எனவே, உலகம் பலவிதமான மனிதர்களைக் கொண்டிருந்தாலும் அதன் ஒழுங்கான இயக்கத்துக்கு ஒரேவிதமான வாழ்க்கை வழிமுறை அவசியம். ஒரேயொரு ஓட்டுநர் மட்டுமே அந்த மோட்டார் வாகனத்தை சரியாக இயக்கிச் செல்ல முடியும்.அதேபோன்று, இந்த வாழ்க்கையும் அதனை இயக்கத் தெரிந்த தனித்த – ஒரேயொரு ஆற்றலால் மட்டுமே ஒழுங்காக இயங்க முடியும்.
அந்த இயக்க வரைவே இஸ்லாம்! அதனை வரைந்தவனே இறைவன்!!
ஆனால், அந்தோ, அத்தகைய ஒரு சிறப்பு வாய்ந்த வரைவுத்திட்டமான இஸ்லாத்தை இன்று பழமைவாதம், அடிப்படைவாதம் எனும் பெயரால் மக்களைவிட்டும் அந்நியமாக்கச் செய்ய, பலமுனைகளில் இருந்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குறிப்பாக, செப்டம்பர் 11, 2001 – உலக வர்த்தக மைய தாக்குதலுக்குப் பிறகு, அந்த வரைவுத்திட்டம் பல்வேறு பழிச் சொல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது. தகவல் தொடர்பு ஊடகங்களும், தொலைதொடர்பு சாதனங்களும்கூட இதனை படுகச்சிதமாக செய்து வருகின்றன.
எனவே, இஸ்லாத்தைக் குறித்து தவறான அபிப்ராயங்களைக் களைவது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கின்றது. இப்பணியை செவ்வனே நிறைவேற்றி, முஸ்லிம் அல்லாதவர்கள் – ஏன், ஒரு முஸ்லிமிடத்தில்கூட தோன்றும் ஐயப்பாடுகளைக் களைந்து இஸ்லாம் குறித்த உண்மையான விளக்கத்தை முன்வைப்பதே இந்நூலின் முக்கிய அம்சமாகும்.
வாசக அன்பர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் இஸ்லாம் குறித்த ஐயப்பாடுகளுக்கு வினா-விடை பாணியில் விளக்கம் தரப்பட்டிருக்கின்றது! இறைவன், இறைத்தூதர், இறைஇல்லம், திருக்குர்ஆன், இயேசு கிறிஸ்து, போர், ஜிஹாத், பெண், குடும்பம், உறவுமுறை என்று அனைத்துத் துறை சார்ந்த வினாக்களுக்கும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நூலைப் படிக்கும் ஒரு வாசகர், எவ்வித முன் அனுமானமுமின்றி அதனைத் தெளிவான கண்ணோட்டத்துடன் அணுகினால், இஸ்லாம் குறித்து ஒரு சரியான முடிவுக்கு வருவது திண்ணம்!
இந்நூலைக் குறித்தும், இஸ்லாம் குறித்த இன்ன பிற ஐயப்பாடுகளுக்கும் விளக்கம் பெற இந்நூலின் இறுதியில் தரப்பட்டுள்ள விலாசங்களில் தொடர்பு கொள்ளலாம்;
வல்ல இறைவன் மனித சமூகம் முழுவதும் சாந்தியும் சமாதானமும் பெற்று நேர்வழியில் நடைபோட பேரருள் புரிவானாக!
இஸ்லாம்!
இது ஒரு புதிய மதமோ, தத்துவமோ அல்ல! மாறாக, ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைவன் தனது இறைத்தூதர்கள் மூலமாக அனுப்பி அருளிய சத்திய வாழ்க்கை நெறியே அது!உலகில் வாழும் மக்களில் ஐவரில்
ஒருவருக்கு இஸ்லாம் ஒரு மார்க்கம் மட்டுமல்ல,
மாறாக, அவர்களின் முழுமையான வாழ்க்கை வழிமுறையுமாகும்.
இறைவனால் முஸ்லிம்கள் என சிறப்பிக்கப்பட்ட மக்கள் பின்பற்றும் மார்க்கமான இஸ்லாம் அமைதியும், அருளும் கொண்ட மிக உன்னத இறை மார்க்கமாகும். பாவமன்னிப்பும் பரஸ்பர அன்பும் பாராட்டும் வாழ்வியல் நெறியும் ஆகும்.
இதை விடுத்து மற்றவர்கள் தமது நம்பிக்கையுடன் இணைத்துள்ள ஏனைய வழிமுறைகள், செயல்பாடுகள் எதுவொன்றுக்கும் இஸ்லாத்துடன் எந்த தொடர்பும் இல்லை!

Related Post