புனித ரமளான் ஐயங்கள்-தெளிவுகள் -4

அஷ்ஷேய்க் முஹம்மத் ஸாலிஹ் அல் உதைமீன் (ரஹ்)

கேள்வி:

ரமழான் பிறை கண்டதை

ரமழான் பிறை கண்டதை

ரமழான் மாதத்தின் முதல் நாள் ரமழான் பிறை கண்டதை அறிவிப்பதற்கு முன்னரே ஒரு மனிதர் தூங்கிவிட்டார். ரமழான் வந்துவிட்டதை அறியாத அவர் காலையில் நோன்பு நோற்கும் நிய்யத்துடனும் தூங்கவில்லை. சூரியன் உதித்த பின்னர்தான் இன்று ரமழானின் முதல் நாள் என்பதை அறிகின்றார். இந்நிலையில் அவர் என்ன செய்வார்? குறித் நோன்பை அவர் கழாச் செய்ய வேண்டுமா? பதில்: இந்த மனிதர் ரமழான் உறுதிப்பட முன்னர் ரமழானின் முதல் நாள் இரவு தூங்கியுள்ளார். பஜ்ர் உதயமானதன் பின்னர்தான் அன்றைய நாள் ரமழானின் முதல் நாள் என்பதை அறிகின்றார். அது ரமழானின் ஒரு நாள் என்பதை அறிந்துவிட்டதனால் நாளின் மீதி நேரத்தில் நோன்பிருப்பது அவருக்குக் கடமையாகின்றது. பெரும்பாலான அறிஞர்களின் கருத்துப்படி அவன் அன்றைய நோன்பைக் கழாச் செய்யவும் வேண்டும். நான் அறிந்த வகையில் இது விடயத்தில் iஷக்குல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் மட்டுமே மாற்றுக் கருத்துக் கொண்டுள்ளார்கள். அவர் இது குறித்துக் கூறும் போது, ‘நிய்யத் என்பது அறிவைப் பின்தொடரக் கூடியதாகும். அவர் (ரமழான் வந்துவிட்டதை) அறியாதவர். எனவே, அவர் மன்னிக்கப்படுவார். ரமழான் வந்துவிட்டதை அறிந்த பின்னர் அவர் நிய்யத்தை விட்டுவிடவில்லை. மாறாக, அவர் ரமழான் வந்துவிட்டதை அறியாதவராக இருந்தார். ‘அறியாதவர் மன்னிக்கப்படுவார்;’ என்ற அடிப்படையில் அந்த நாள் ரமழானுடைய நாள் என்பதை அறிந்ததில் இருந்து அவர் நோன்பு நோற்றாரெனில் அவரது நோன்பு சரியானதுதான். இந்த அடிப்படையில் அதை அவர் கழா செய்ய வேண்டியதில்லை’ இருப்பினும், அதிகமான உலமாக்கள் அவர் அறிந்ததிலிருந்து நோன்பையும் நோற்க வேண்டும். அந்த நோன்பைக் கழாவும் செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். இதற்கான காரணத்தை அவர்கள் கூறும் போது, குறித்த நபர் அந்த நாளின் ஒரு பகுதியை (நோன்பின் சர்த்துக்களில் ஒன்றான) நிய்யத் இல்லாமலேயே கழித்துள்ளார் என்று கூறுகின்றனர். குறித்த அந்த நோன்பைக் கழா செய்வதுதான் பொருத்தமானதாக நான் கருதுகின்றேன். தொகுப்பு: அபூ அப்னான்  &  இளவேனில்

Related Post