தொழக்கூடாத இடங்கள்

முஹம்மத் நாஸிருத்தீன் அல்பானி

தொழக்கூடாத இடங்கள்

தொழக்கூடாத இடங்கள்

தொழக்கூடாத இடங்கள்

அல்லாஹ் எந்த ஓர் அருள்வாயிலை மக்களுக்காகத் திறந்துவிட்டாலும், அதனைத் தடுக்கக்கூடியவர் யாருமிலர். மேலும், அவன் அதனை அடைத்துவிட்டால், அதற்குப் பிறகு அதனைத் திறக்கக்கூடியவர் வேறு யாருமிலர். அவன் யாவற்றையும் மிகைத்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.

1. அடக்கஸ்தலம்
அடக்கம் செய்யப்பட்டது ஒரு ஜனாஸாவாக இருந்தாலும் அதுவும் அடக்கஸ்தலமாகும். நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘யூதர்களின் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! அவர்கள் தங்களது நபிமார்களின் கப்ருகளைப் பள்ளிவாசல்களாக எடுத்துக் கொண்டார்கள்’. (புஹாரி, முஸ்லிம்)

2. கப்ருகளின் மீது கட்டப்பட்ட பள்ளிவாசல்கள்
ஆயிஷா ரழியல்லா{ஹ அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள்: ‘உம்மு ஹபீபா, உம்மு ஸலமா ரழியல்லா{ஹ அன்{ஹமா ஆகியோர் ஹபஷாவில் கண்ட உருவப்படங்கள் உள்ள ஓர் ஆலயம் பற்றி நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினார்கள்’. அது குறித்து நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்கள்: ‘அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களில் ஒரு நல்ல மனிதர் மரணித்தால் அவரது கப்ரின் மீது அவர்கள் பள்ளிவாசலைக் கட்டுவார்கள். அதிலே அவரின் உருவப்படங்களை அமைப்பார்கள். மறுமை நாளில் அவர்களே அல்லாஹ்விடம் படைப்பினங்களில் மிக மோசமானவர்கள்’. என்று கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)

3. ஒட்டகம் கட்டும் இடங்கள்
நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘நீங்கள் ஆட்டுத் தொழுவங்களில் தொழுது கொள்ளுங்கள்! ஒட்டகங்கள் கட்டப்படும் இடத்தில் தொழ வேண்டாம்!’ (அஹ்மத்)

4. மலசலகூடங்கள்
நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘பூமி முழுவதும் தொழுமிடமாகும். மலசலகூடத்தையும் அடக்கஸ்தலத்தையும் தவிர’. (இப்னு ஹிப்பான்)

5. ஷைத்தான் ஒதுங்கும் இடங்கள்
மோசமான இடங்கள், காபிர்களின் ஆலயங்கள் போன்ற இடங்களைக் குறிப்பிடலாம்.
அபூ{ஹரைரா ரழியல்லா{ஹ அன்{ஹ அவர்கள் கூறுகின்றார்கள்: ‘நாங்கள் இரவில் நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஓய்வெடுத்தோம். சூரியன் உதயமாகும் வரை நாங்கள் விழிக்கவில்லை. பிறகு நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம்: ‘ஒவ்வொருவரும் தனது வாகனத்தின் – கால்நடை – தலையைப் பிடித்துக் கொண்டு இந்த இடத்தை விட்டும் செல்லட்டும்! ஏனெனில், இந்த இடத்தில் ஷைத்தான் நம்மிடம் வந்துவிட்டான்’ என்று கூறினார்கள். நாங்கள் அவ்வாறே (பயணம்) செய்தோம். பிறகு (சிறிது தூரம் சென்றதும்) தண்ணீர் கொண்டுவரச் சொல்லி வுழூச் செய்து கொண்டார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட பஜ்ர் தொழுவித்தார்கள்’. (முஸ்லிம்)

Related Post