அதிகாலைத் தொழுகையும் நடுத்தொழுகையும்….!

தொகுப்பு: அப்மு

சுப்ஹு மற்றும் அஸர் தொழுகையின் சிறப்பு

சுப்ஹு மற்றும் அஸர் தொழுகையின் சிறப்பு

புத்திசுவாதீனமுள்ள ஒவ்வொரு (ஆண்-பெண்) மனிதர் மீது கடமையாக்கப்ட்ட ஐவேளை தொழுகைகள்தான் இந்த குறிப்பிட்ட நேர தொழுகைகளாகும். ஆவையாவன் ஃபஜ்ர், ளுஹர், அஸ்ர்,மக்ரிப்,இஷா ஆகியனவாகும்.

 சுப்ஹு மற்றும் அஸர் தொழுகையின் சிறப்பு

 அபூமூஸா(ரலி) அறிவிக்கின்றார்கள்:

 ”இரண்டு குளிர்ந்த நேரத் தொழுகைகளை ஒருவர் தொழுதால், அவர் சொர்க்கத்தில் நுழைவார்” என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம் – இரண்டு குளிர்ந்த நேரத் தொழுகைகள் என்பது, சுப்ஹும், அஸருமாகும்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1047)

 அபூசுஹைர் என்ற உமாரா இப்னு ருஅய்பா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

 ”சூரியன் உதயமாகும் முன் உள்ளதையும், அது மறையும் முன் உள்ளதையும் தொழும் ஒருவர், நரகத்தில் நுழையமாட்டார். (அவ்விரண்டும் சுப்ஹு,அஸ்ர் தொழுகைகளாகும்)  என்று நபி(ஸல்)கூறினார்கள்.   (முஸ்லிம்)(ரியாளுஸ்ஸாலிஹீன்: 1048)

 ஜுன்துப் இப்னு சுஃப்யான்(ரலி) அறிவிக்கின்றார்கள்:

 ”சுப்ஹுத் தொழுகையை ஒருவர் தொழுதால், அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளார். ஆதமின் மகனே! கவனம் கொள்வாயாக! அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளவனுக்கு ஏதேனும் (நீ இடையூறு) செய்து, இதனால் உன்னை அல்லாஹ் தண்டித்து விட வேண்டாம்’ என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)(ரியாளுஸ்ஸாலிஹீன்:1049)

 அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்:

 ” இரவிற்குரிய வானவர்களும், பகலுக்குரிய வானவர்களும் என உங்களிடையே (வானவர்கள்) பொறுப்பேற்கிறார்கள். சுப்ஹுத் தொழுகையிலும், அஸர்த் தொழுகையிலும் (அவர்கள் அனைவரும்) ஒன்று சேர்கிறார்கள். பின்பு உங்களோடு இரவு தங்கி இருந்தவர்கள் (வானிற்கு) உயர்கிறார்கள். மக்கள் பற்றி மிகவும் அறிந்தவனான அல்லாஹ் அவர்களிடம் ”என் அடியார்களை  எந்நிலையில் விட்டு வந்தீர்கள்?” என்று கேட்பான். அப்போது ”அவர்கள் தொழும் நிலையில் அவர்களை விட்டு வந்தோம்.

தொழும் நிலையில்

தொழும் நிலையில்

மேலும் அவர்கள் தொழும் நிலையில் அவர்களிடம் சென்றோம்” என்று கூறுவார்கள். இதை  நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)(ரியாளுஸ்ஸாலிஹீன்:1050)

 ஜரீர் இப்னு அப்துல்லாஹ் அல்பஜலீ(ரலி) அறிவிக்கின்றார்கள்:

 ”நபி(ஸல்) அவர்களிடம் இருந்தோம். பவுர்ணமி அன்று நிலவை அவர்கள் பார்த்தார்கள். ”நிச்சயமாக நீங்கள் உங்கள் இறைவனை இந்த சந்திரனைப் பார்ப்பது போல் பார்ப்பீர்கள்” அவனை பார்க்கும் விஷயத்தில் இடையூறு செய்யப்படமாட்டீர்கள். சூரியன் உதயமாகும் முன் உள்ள சுப்ஹு தொழுகையையும், அது மறையும் முன் உள்ள (அஸர்) தொழுகையையும் நீங்கள் கவனக்குறைவாக இல்லாமல் இருக்க இயலுமானால், அதைச் செய்யுங்கள்” என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)(ரியாளுஸ்ஸாலிஹீன்:1051)

 புரைதா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

 ”அஸர் தொழுகையை ஒருவர் விட்டு விட்டால், அவரின்(மற்ற) செயல்கள் வீணாகி விடும்” என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1052)

”ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்;கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபிகள் நாயகம் (ஸல்)”. (நூல்: புகாரி, முஸ்லிம்)

”திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்”

Related Post