சுத்தமே சுகாதாரம்..!

சுத்தமே சுகாதாரம்..!

சுத்தமே சுகாதாரம்..! உலகத்தில் மிக சிறந்த மார்க்கம் இஸ்லாம் மார்க்கம்

சுத்தமே சுகாதாரம்..!
உலகத்தில் மிக சிறந்த மார்க்கம் இஸ்லாம் மார்க்கம்

உலகத்தில் மிக சிறந்த மார்க்கம் இஸ்லாம் மார்க்கம் என்பதை பல சான்றுகளின் மூலம் நிறூபிக்கப்ட்டுள்ளன.

அவற்றில் ஒன்று தான் மனிதனின் ஆரோக்கியமாகும்.

மனிதன் தன் உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக உடல் பயிற்ச்சி முதல் பல விதமான மருந்துகளை பயன்படுத்துகிறான்.

இந்த ஆரோக்கியம் விசயத்தில் இஸ்லாம் அதிகமாக அக்கரை காட்டுகிறது.

அந்த அக்கரையில் ஒன்று தான் சிறுநீர் விசயங்களில் இஸலாம் காட்டக் கூடிய ஒழுங்கு முறையாகும். ஆரோக்கியமும், சிறுநீரும் இரண்டரக் கலந்த அம்சமாகும். சிறுநீர் என்ற அசுத்தத்திலிருந்து தன்னை எப்படி ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பதை இக் கட்டுரை மூலம் நாம் அறிந்து கொள்வோம்.

கத்னா (சுன்னத்) செய்தல்
கத்னா என்றால் மர்ம உறுப்பின் முன் தோலை சிறிதாக வெட்டுதலாகும்.

இஸ்லாம் ஒரு விசயத்தை செய்யும் படி ஏவுகிறது என்றால் அதில் பல உண்மைகள் அடங்கி இருக்கும். சிறு பராயத்திலே ஆண்களுக்கு கத்னா செய்ய வேண்டும் என்று ஏன் இஸ்லாம் சொல்கிறது என்றால், அதில் பல நலன்கள் இருந்தாலும்,

இதனால் சிறுநீர் கழிக்கும் போது சிறுநீர் இலகுவாக வெளிவந்து விடும். கத்னா செய்யா விட்டால் சிறுநீரின் ஓரிரு துளிகள் அந்த தோலுக்குள்ளே இருக்கும் இதனால் தான் அணிந்திருக்கும் ஆடையும் அசுத்தமடைகிறது, மேலும் தோலுக்குள் இருக்கும் ஓரிரு சிறுநீர் துளிகள் மூலம் நோய்கள் ஏற்ப்பட்டு விடும்.

எனவே கத்னாவின் மூலம் மனிதன் ஆரோக்கியம் அடைகிறான் என்பதை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது.

தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர்
‘ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அதில் குளிக்க வேண்டாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 239)

நமது உடம்பை ஆரோக்கியாக வைத்துக் கொள்வதற்காக தான் நீங்கள் குளிக்கும் தண்ணீரும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை மேற்ச் சென்ற ஹதீஸ் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. ஓடக்கூடிய தண்ணீர் என்றால் அதில் சிறுநீர் கழித்தாலும் தண்ணீரோடு, தண்ணீராக சிறுநீர் ஓடிவிடும். ஆனால் தேங்கி நிற்க கூடிய குறைவான தண்ணீரில் சிறுநீர் கழித்தால் அந்த தண்ணீர் அசுத்தமாக மாறிவிடும். எனவே தான் இப்படியான இடங்களில் சிறுநீர் கழிக்க கூடாது என்று ஆரோக்கியத்தை முதன்மை படுத்தி இஸ்லாம் நமக்கு வழிக் காட்டுகிறது. .

சிறு நீர் தரையில் பட்டால்
“ அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு முறை நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தோம். அப்போது கிராமவாசியொருவர் வந்து பள்ளிவாசலுக்குள் நின்று சிறுநீர் கழித்தார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் நிறுத்து! நிறுத்து! என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவர் சிறுநீர் கழிப்பதை) இடைமறிக்காதீர்கள். அவரை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள். எனவே, நபித்தோழர்கள் அவரை விட்டுவிட்டனர். அவர் சிறுநீர் கழித்து முடித்தார்.

பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து இந்தப் பள்ளிவாசல்கள் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்தல் ஆகியவற்றுக்குரிய இடமல்ல.

இவை இறைவனை நினைவுகூர்ந்து போற்றுவதற்கும் தொழுவதற்கும் குர்ஆனை ஓதுவதற்கும் உரியதாகும் என்றோ, அல்லது இந்தக் கருத்திலமைந்த வேறு வார்த்தைகளையோ அவரிடம் கூறினார்கள்.

பிறகு மக்களில் ஒருவரிடம் ஒரு வாளித் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அதை அந்தச் சிறுநீர் மீது ஊற்றச் செய்தார்கள் (முஸ்லிம் 480)

நாம் பயன் படுத்தப்படும் மண் தரையில் சிறுநீர் கழிக்கப்பட்டுவிட்டால் அந்த இடத்தில் தண்ணீரை ஊற்றினால் போதுமாகும்.

அதே நேரம் டையில்ஸ் போன்ற கல் பதித்த பகுதியாக இருந்தால் சிறுநீர் பட்ட இடத்தை தண்ணீரால் துடைத்து எடுக்க வேண்டும் அல்லது தண்ணீரை ஊற்றி கழுவ வேண்டும்,

என்பதை ஆரோக்கியத்தை முதன்மை படுத்தி நபியவர்கள் நமக்கு வழி காட்டுகிறார்கள்.

Related Post