நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்..!

குடும்பம் என்பதே, ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் கோப்பு ஆகும். குடும்ப வாழ்க்கை தழைத்தால்தான், சமூகம் வளரும், நாடு சுபிட்சம் பெறும், உலகம் தழைக்கும்..!

குடும்பம் என்பதே, ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் கோப்பு ஆகும். குடும்ப வாழ்க்கை தழைத்தால்தான், சமூகம் வளரும், நாடு சுபிட்சம் பெறும், உலகம் தழைக்கும்..!

-மு.அ.அப்துல் முஸவ்விர்

குடும்பம் என்பதே, ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் கோப்பு ஆகும். குடும்ப வாழ்க்கை தழைத்தால்தான், சமூகம் வளரும், நாடு சுபிட்சம் பெறும், உலகம் தழைக்கும்..! அத்ததைகய குடும்ப வாழ்வின் உன்னத தாத்பர்யங்களை அழகாய் வடிவமைத்திருக்கின்றது. அதனை பேணி நடைமறைப்படுத்தக்கூடிய வழிமுறைகளையும் தனது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலமாகக் காட்டித் தந்துள்ளது..!

மனிதர்களே, உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும், எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ, அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள்! மேலும், இரத்தபந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள்! திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான். 4:2 அநாதைகளுக்கு அவர்களுடைய உடைமைகளைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள்! நல்ல பொருளுக்குப் பதிலாக தீய பொருளை மாற்றாதீர்கள்; மேலும், அவர்களின் பொருள்களை உங்களின் பொருள்களோடு கலந்து உண்ணாதீர்கள்; திண்ணமாக இது பெரும் பாவமாகும். 4:3 அநாதைகளுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள். ஆனால் (அவர்களிடையே) நீதமாக நடந்திட முடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணை மட்டும் மணமுடித்துக் கொள்ளுங்கள்; அல்லது உங்கள் கைகள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையே மனைவியாக்கிக் கொள்ளுங்கள். நீதி தவறாமலிருப்பதற்கு இதுவே மிக நெருக்கமானதாகும். 4:4 மேலும், பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹ்ரை (கடமையெனக் கருதி) மனமுவந்து அளித்துவிடுங்கள்! ஆயினும், அந்த மஹ்ரிலிருந்து ஒரு பாகத்தை அவர்கள் உங்களுக்கு மனமுவந்து விட்டுக் கொடுத்தால், அதனை நீங்கள் தயக்கமின்றி அனுபவிக்கலாம். 4:1-4

இது விஞ்ஞான யுகம். வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் நவநாகரிகம் வளர்ந்தோங்கிக் கொண்டே செல்கின்றது. இந்த நாகரிக மாற்றம் காரணமாக மனித வாழ்க்கை பெரிதும் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறது. தொழில் வளர்ச்சியும், நுகர்பொருள் கலாச்சாரமும் மேல்நாடுகளில் மிதமிஞ்சிய முக்கியத்துவத்தைப் பெற்றுத் திகழ்கின்றன. இதன் விளைவாகத் தனிமனித நலனும் லாப நோக்குமே முதன்மையாகிவிட்டன.

சமூக நீதி என்பது இன்றைக்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. சமூகம் என்று வருகிறபோது குடும்பம் அதில் சிறப்பிடம் வகிக்கிறது, சமூகத்தின் அடிப்படை அமைப்பு குடும்பமேயாகும். சமுதாய அமைப்பின் தொட்டில் குடும்பம் எனலாம்.

இன்று மேலை நாடுகளில் தலைவிரித்தாடும் தனிமனித நலனும் லாப நோக்கும் குடும்ப இயல் என்னும் அடிப்படை அமைப்பைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. இதன் விளைவாக வருங்காலத்தில் குடும்பம் என்ற அமைப்பு நிலைத்திருக்குமா? இருக்காதா? என்ற சந்தேகங்கள் தலையெடுக்கத் தொடங்கிவிட்டன.

குடும்பக் கட்டுமானத்தின் இன்றியமையாத அங்கமாகிய திருமணம் என்பதெல்லாம் காலத்துக்கு ஒவ்வாத காரியங்கள் என அறிவு ஜீவி’கள் சிந்திக்கத் தலைப்பட்டு விட்டனர். ஓர் ஆணும், ஒரு பெண்ணும் கணவன் மனைவியாகக் கூடிவாழ்வதுதான் இல்லறமாகிய குடும்பமாகும் என்னும் சித்தாந்தத்திற்கு இப்போது ஆபத்து வந்து விட்டது. ஓர் ஆண் இன்னொரு ஆணுடன் கூடிக்கலந்து வாழ்க்கை நடத்துவதும் ஒரு பெண் இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து குடும்பம் நடத்துவதும் இல்லற அமைப்பேயாகும் என்றெல்லாம் நவீனக்கோட்பாடுகள் பிதற்றப்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்கள் ஒரு பெண்ணோடு கூடி வாழ்தலையும் ஏன் குடும்பம் எனச் சொல்லக்கூடாது? என்ற விபரீத வினாக்களுக்கெல்லாம் தாக்குப் பிடிக்க முடியாமல் இன்று குடும்பம் என்னும் சமுதாய அமைப்பு சிதைவுப்பட்டு நிற்றலைக் காண்கிறோம்.

இக்காரணங்களினால் இன்று மோலை நாடுகளில் குடும்பம் என்னும் உன்னத அமைப்பு ஆட்டம் கண்டு கிடக்கிறது. குடும்ப அமைப்புப் பற்றி யாரும் பொருட்படுத்தத் தேவையில்லை என்னும் மனோபாவம் மேனாடுகளில் நவநாகரிக ஆண்-பெண்களிடம் மேலோங்கிக் காணப் படுகின்றது. போகிற போக்கில் தோன்றுகிறபோது தோன்றுகிறவர்களுடன் இன்ப நுகர்ச்சியை நடத்தி முடித்துவிட்டு அதன் பின்விளைவு பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருப்பது தான் கட்டுப்பாடற்ற சுதந்திர வாழ்க்கை என்ற எண்ணம் வேகமாகப் பரவி வருகின்றது.

இதனால் பள்ளிப் பருவத்திலேயே சின்னஞ் சிறுமிகள் பல முறை கருக்கலைப்புக்கு ஆளாகின்றனர், இதையும் மீறிப் பிறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. இத்தகைய விபரீத உறவு காரணமாகப் பிறக்கும் குழந்தைகளின் பராமரிப்புக்காக ஆண்டுக்கு 29மில்லியன் டாலர் தொகையை அமெரிக்க அரசு செலவிட்டு வருகின்றது.
பொருள் வளத்திலும், விஞ்ஞான வளர்ச்சியிலும் மேம்பட்ட நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் குடும்ப அமைப்புச் சிதைந்து வரும் அதே வேளையில், விபச்சாரமும் வன்முறைக் கலாச்சாரமும் அதன் தீய விளைவுகளும் பெருகி வரக் காண்கிறோம்.

திருமணம், வீடு, குடும்பம் என்பனவெல்லாம் பெண்களை நிரந்தரமாக அடிமைத் தனத்தில் வைத்திருக்கும் ஒரு சாபமேயன்றி வேறில்லை” என்று மார்க்ஸ், ஏங்கல்ஸ் போன்ற கம்யூனிசத் தலைவர்கள் ஒங்கி முழங்கினர். இதே கருத்தைத்தான் தமிழ்நாட்டின் ஈ.வெ.ரா. பெரியாரும் கொண்டிருந்தார்.
உலகம் போற்றும் இந்த மகான்கள்’ எடுத்துரைத்த கருத்துக்கேற்ப மனிதர்கள் வாழத் தலைப்பட்டமையினால் மேனாடுகளில் குடும்ப அமைப்பு நசிந்துகொண்டே வருகிறது. இது மட்டுமின்றி, பெண்ணுரிமை பேசுவோராலும் இன்று புதிய ஆபத்துக்கள் புறப்பட்டு வருகின்றன.

பெண்ணுரிமை வேண்டும், பெண் விடுதலை வேண்டும் என முழங்குவோர் ஆங்காங்கே உலக அரங்குகளில் கூடிப் பேசுவதையும் கேட்க முடிகின்றது. கெய்ரோ, பெய்ஜிங் போன்ற இடங்களில் சமீப காலங்களில் பெண் விடுதலை மாநாடுகள் கூட்டப்பட்டன.

கருக்கலைப்புச் சுதந்திரம், செக்ஸ் சதந்திரம், ஆண் பெண் பாலியல் நட்புரிமை, மதுபானம் போன்ற போதைப் பொருள்களை நுகரும் சுதந்திரம் முதலியவை எங்களுக்கு வேண்டும். இத்தகைய எங்களது உரிமைகளில் தலையிடுகின்ற அதிகாரம் எவருக்கும் இருக்கக் கூடாது என்றெல்லாம் இந்த விடுதலை விரும்பிகள் கோஷங்களை முன் வைத்துள்ளனர்.

‘கண்டதே காட்சி கொண்டதே கோலம்’ என்ற மிருக வாழ்க்கைத் தரத்திற்கு மனிதன் தாழ்ந்து கொண்டிருப்பதை இதுபோன்ற நிகழ்ச்சிகள் நிரூபித்து நிற்கின்றன. குடும்ப அமைப்பின் சிதைவுக்கும் கலாச்சாரச் சீரழிவிற்கும் சில அரசுகள் கூடத் துணைபோயுள்ளன. ஒரினச் சேர்க்கை யாளர்கள் இணைந்து வாழ்வதும் குடும்பமே’ என்று கூறுமளவுக்குச் சில மேனாடுகளில் அரசு அங்கீகாரங்கள் கூட வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற எல்லாவகையான வழிகேடுகளுக்கும் வாசல் திறந்து விட்டு, குடும்பம் – சமூகம் என்னும் அமைப்புக்களைச் சீர்குலைய வைத்துவிட்டது மேனாட்டு நவ நாகரிகம். இப்போது இதனால் ஏற்பட்டுள்ள தீமைகளை மெல்ல உணரத் தலைப்பட்டுள்ளனர் இவர்கள்.

அரசாங்கமே மதுபானக் கடைகளையும் நடத்திக் கொண்டு குடியின் தீமையையும் பிரச்சாரம் செய்கிறதன்றோ? இதுபோல் எல்லாச் சமூகக் கேடுகளையும் அங்கீகரித்துவிட்டு, அவற்றினால் உருவாகும் தீமைகளுக்கு எதிராகவும் மேனாட்டினர் பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
மிதமிஞ்சிய பொருள் வேட்கை, மிதமிஞ்சிய இன்ப நுகர்ச்சி இவைகளை மட்டுமே தலையாய நோக்கமாகக் கொண்ட மக்களால் குடும்பம் என்னும் அடிப்படை அமைப்பு சிதைந்து வருதல் கண்கூடு. இந்நிலை இப்படியே நீடிக்குமானால் வருங்காலத்தில் குடும்பம் என்னும் சமுதாயக் கட்டுமானம் இல்லாமலே போய்விடக்கூடும். குடும்ப அமைப்பு நின்று நிலைபெற்றிருந்தால் தான் வருங்காலச் சமுதாயம் உருப்படும் என்ற உண்மை இப்போதுதான் சிலருடைய புத்திக்கு உறைக்கத் தொடங்யிருக்கின்றது.

இதன் காரணமாக 1994-ஆம் ஆண்டினை சர்வதேசக் குடும்பநல ஆண்டு என உலகச் சுகாதார அமைப்பு அறிவிப்புச் செய்தது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் மே மாதம் பதினைந்தாம் நாள் சர்வதேசக் குடும்ப நாள் என அனுஷ்டிக்கப்படுகிறது. குடும்ப அமைப்பில்தான் உலகின் வருங்காலம் தங்கியுள்ளது என்பது தான் இந்நாளில் எடுத்துரைக்கப் படுகின்ற கொள்கை முழக்க வாசகமாகும்.

குடும்பம் என்பது ஒரே கூரையினால் இணைக்கப்பட்ட இதயங்களின் இணைப்பேயாகும். அன்பு, பரிவு, பாசம், ஒருங்கிணைப்பு, பாதுகாப்புணர்வு, சகிப்புத் தன்மை முதலிய நல்லியல்புகளெல்லாம் குடும்ப அமைப்பிலிருந்தே பூத்துக் குலுங்கி, சமுதாய வாழ்விற்கு மணமூட்டுகின்றன. இத்தகைய நல்லியல்புகளின் உறைவிடமான குடும்ப இயல் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?

மனிதன் இயல்பிலேயே நூறுபேரோடு கூடிவாழும் இயல்பினையுடையவன். பொதுவாக எந்த மனிதனும் தனித்து வாழ்வதை அவ்வளவாக விரும்புவதில்லை. இதுமட்டுமின்றி மனிதனுக்குப் பலவகையான தேவைகள் உள்ளன. இந்தத் தேவைகளைத் தனி ஒருவராகவே யாராலும் நிறைவேற்றிக் கொள்ள முடியாது. ஒருவரோடு ஒருவர் சேர்ந்து வாழ்வதன் வாயிலாக மனிதனுடைய தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. இந்த வகையில் மனிதனை, குடும்ப அமைப்பிலும் சமுதாயச் சசூழ் நிலையிலும் வாழ்வதற்கேற்ற வகையிலேயே இறைவன் படைத்துள்ளான்.

கணவன் மனைவி, பெற்றோர் பிள்ளைகள், உற்றார் உறவினர் ஆகிய பலதரப்பினரும் ஒருவருக்கொருவர் கொண்டும் கொடுத்தும் மகிழ்ச்சியாக வாழும் வாழ்க்கையே குடும்ப வாழ்க்கையாகும். குடும்பம் என்பதற்கு இஸ்லாம் திட்டவட்டமான வரையறையை வகுத்துக் கூறியுள்ளது.
குடும்ப அமைப்பு, மூவகை உறவுநிலைகளைக் கொண்டு இயங்குவதாக இஸ்லாம் இயம்புகின்றது. ஒன்று இரத்தக் கலப்பில் ஏற்படும் வம்சாவளி உறவு முறையாகும். மற்றொரு உறவுநிலை, திருமணத் தொடர்பினால் ஏற்படுவது, மூன்றாவது பால் குடியினால் ஏற்படுவது. இந்த மூன்று வகையிலுமல்லாத வேறு எந்த விதமான நிலையிலும் மனித உறவுகள் குடும்பமாக உருவாவதை இஸ்லாம் விரும்பவில்லை.

தத்தெடுத்துக் கொள்ளுதல், பரஸ்பர ஒப்பந்தங்களின் அடிப்படையில் அன்னியரைக் குடும்ப உறவுபோல ஆக்கிக் கொள்ளுதல், பாலுறவுக்காகவும் வேறு தேவைகளுக்காகவும் நிக்காஹ்” அல்லாத முறையில் சின்ன வீடு” வைத்துக் கொள்ளுதல் முதலிய எதுவாயிருப்பினும் அவை இஸ்லாமியக் குடும்பக் கட்டுமானத்திற்குள் அடங்குவது கிடையாது.

மேலும் அவன் (அல்லாஹ்) தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு (இரத்தக் கலப்பின் அடிப்படையிலான)

குடும்பம் என்பதே, ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் கோப்பு ஆகும். குடும்ப வாழ்க்கை தழைத்தால்தான், சமூகம் வளரும், நாடு சுபிட்சம் பெறும், உலகம் தழைக்கும்..!

குடும்பம் என்பதே, ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் கோப்பு ஆகும். குடும்ப வாழ்க்கை தழைத்தால்தான், சமூகம் வளரும், நாடு சுபிட்சம் பெறும், உலகம் தழைக்கும்..!

வம்சாவளியையும், (திருமண உறவின் அடிப்படையில்) சம்பந்தங்களையும் ஏற்படுத்துகின்றான்.
அல்குர்ஆன் 25:54

இருவகை இயல்பிலான குடும்ப உறவு பற்றித் திருமறை குர்ஆன் இங்ஙனம் எடுத்துரைத்துள்ளது.

உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்,,, உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய் மார்களும். உங்கள் பால்குடிச்சகோதரர்களும்,,, ஆவர், அல்குர்ஆன் 4:23

பால்குடி உறவு பற்றி இவ்வாறு திருக்குர்ஆன் கூறுகின்றது, இரத்தபந்தம், திருமண உறவு. பால்குடி உறவு ஆகிய உறவுகளே உறுதியானவை, கட்டுக்குலையாதவை, குடும்பத் தொடர்பு அற்றுப்போகாமல் வழிவழித் தொடர்ந்து வருபவை.

இயற்கையோடு இயைந்ததும், தக்க முகாந்தி ரங்களோடு கூடியதும், ஒருவருக்கொருவர் பாதுகாப்பு அரணாக நின்று நிலவக் கூடியதும் இத்தகைய உறவு நிலைகளேயாகும். இவை அல்லாத ஏனைய தொடர்புகள் ஒரு மனிதனுடைய சோதனையான காலகட்டத்தில் காணாமல் போய்விடக்கூடியவை.

உடன் பிறவாச் சகோதரி ஏற்பாடுகளும், வளர்ப்பு மகன் போன்ற செயற்கைப்பந்தங்களும் அஸ்திவாரமில்லாத கட்டிடத்தைப் போன்று ஆட்டம் காணக்கூடியன. துன்பங்கள் சசூழும்போது இத்தகைய செயற்கை உறவுகள் சிலந்தி வலை போன்று இருக்குமிடம் தெரியாமல் சிதறி மறைந்து விடுகின்றன. ஆனால் வம்சாவளி, பால்குடி, திருமணத் தொடர்பானது இரும்புச்சங்கிலிபோல் சந்ததி தோறும் தொடர்ந்து உறுதி பெறுகிறது.
துன்பங்களும் துயரங்களும் நெருக்குகிறபோது ஒரு மனிதனை அரண் போலிருந்து காப்பாற்றுவது அவனுடைய குடும்பஅமைப்பேயாகும். நபிமார்கள் வாழ்க்கையிலும் இத்தகைய குடும்ப அரவணைப்பினைக் காணமுடிகின்றது. நபிமார்கள் ஏகத்துவத்தை எடுத்துரைத்தபோது குடும்பத்திலிருந்தே எதிர்ப்புகளும் கிளம்பின. குடும்ப உறுப்பினர்களின் எதிர்ப்பு கண்டு நபிமார்கள் கவலை அடைந்ததும் உண்டு.

நபி(ஸல்) அவர்கள் முதல் முதலாக இறைத்தூதினை எடுத்துரைத்து ஏகத்துவப் பிரச்சாரம் செய்தபோது அவர்களின் குடும்பத்தினர் சிலருடைய எதிர்ப்பைச் சந்திக்க நேர்ந்தது. இருப்பினும் மிக முக்கியமான குடும்ப உறுப்பினர்களின் அரவணைப்பினால் நபி(ஸல்) அவர்களுடைய ஏகத்துவப் பிரச்சாரம் எங்ஙனம் வலுவடைந்தது என்பதை அன்னாரின் வரலாறு தெரிவிக்கின்றது.

இறைவன் நபி(ஸல்) அவர்களைத் தன் தூதராகத் தேர்ந்தெடுத்தான். அவர்கள் வாயிலாக ஏகத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைக்கச் செய்தான். முதன் முதலாகத் தூதுச் செய்தியைப் பெற்றுக் கொண்ட நபி(ஸல்) அவர்கள் நடுநடுங்கிப் போனார்கள். அப்போது நபிகளாருக்குப் பக்கத்துணையாயிருந்து அவர்களுக்கு ஆறுதல் கூறி, ஊக்கப்படுத்தி, அவர்களை உறுதிப்படுத்தியவர் அன்னை கதீஜா அவர்களேயாவார்.

வீட்டுக்கு உள்ளே நபி(ஸல்) அவர்களின் அருமைத் துணைவியார் கதீஜா நாயகியின் அரவணைப்பு இருந்தது போல, சமுதாய அரங்கில் நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு அரண்போன்ற பாதுகாப்பினை நல்கியவர் அபூதாலிபு ஆவார். இங்ஙனம் நபி(ஸல்) அவர்களின் துணைவியாரும் பெரிய தந்தையும் நபிகளாரின் ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு உற்ற துணையாயிருந்து ஆற்றிய பங்கு அளவிடற் கரியதாகும்.

அபூபக்கர்(ரலி) போன்ற ஆருயிர்த் தோழர்கள் நபி(ஸல்) அவர்களுக்காக உடல், பொருள், உயிரையும் கொடுப்பதற்குத் தயாராக இருந்தார்கள். என்றாலும் நபி(ஸல்) அவர்களின் 50ஆம் வயதில் அபூதாலிபும் கதீஜா நாயகியும் அடுத்தடுத்துக் காலமாகிவிட்டபோது, நபி(ஸல்) அவர்கள் ஆறாத்துயரில் ஆழ்ந்து போனார்கள். இந்த வம்சாவளி உறவையும் திருமண உறவையும் இழந்தபோது நபி(ஸல்) அவர்கள் இரு சிறகிழந்த பறவை போன்று கையற்று நின்று கவலைப்பட்டார்கள். துக்கம் மிகுந்த துயர் மிகு ஆண்டு (ஆமுல் {ஹஸ்ன்) என வரலாற்று ஆசிரியர்கள் இதனைக் குறிப்பிடுகின்றனர்.

ஓர் இலட்சியக் குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் இங்கே ஒரு படிப்பினை இருக்கிறது. . வாழ்க்கைப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வெற்றி காண்பதற்கு, குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் பாதுகாப்பும் இருக்குமானால், ஒருவருக்கு அது போன்ற பேறு வேறு எதுவுமில்லை எனலாம். வெளியாரின் ஆதரவும் ஒத்தாசையும் எத்துணை அளவு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு மனிதன் உண்டு உறையும் குடும்பத்துக்குள்ளே அவனுக்கு உடன்படாதவர்கள் இருப்பார்களானால், அதுவும் அவனுக்கு இன்னொரு பிரச்சனையாகி விடுகின்றது.. அதே வேளையில் முக்கியக் குடும்ப உறுப்பினர்களின் அரவணைப்பு வாய்க்கப் பெறுமாயின் எவ்வளவு பெரிய புறஎதிர்ப்பையும் அவனால் சமாளித்துக் கொள்ள முடியும்.

நபி(ஸல்) அவர்களுடைய ஆரம்பகால ஏகத்துவப் பணிக்கு எத்தனையோ மாபெரும் எதிர்ப்புகள் கிளம்பி வந்தன. எனினும் நபிகளாரின் திருப்பணி மக்கத்து மண்ணில் மங்கிப் போகாமல் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே இருந்தது. நபி(ஸல்)அவர்களுக்கு வாய்த்த குடும்ப அரவணைப்பும் இதற்கு ஒரு முக்கியக் காரணமாகும். அதிலும் வேறு எவருடைய ஆதரவைக் காட்டிலும், வாழ்க்கைத் துணைவியாகிய மனைவியின் ஆதரவுக்குப் பிரத்தியேகமான மகிமை இருக்கவே செய்கிறது.. நபிகளாரின் வாழ்வே இதற்குச் சான்றாகும்.

நபி(ஸல்) அவர்களுக்கு முதன்முதலாக ஓதுவீராக” என்ற இறைச் செய்தி கிடைத்த போது அவர்கள் அஞ்சிப் பயந்து ஒடோடி வீட்டிற்கு வந்தார்கள். அருமைத் துணைவியார் கதீஜா நாயகியிடம், தமக்கு ஏதேனும் நேர்ந்துவிடுமோ எனத் தாம் உறுதியாக அஞ்சுவதாக எடுத்துரைத்தார்கள். அப்போது கதீஜா நாயகி அவர்கள் ஒரு பொறுப்புள்ள இல்லத்தரசியாக எப்படி நடந்து கொணடார்கள் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

இஸ்லாத்தின் பாதையில் ஏற்படும் பிரச்சனைகளை ஓர் ஆண்மகன் எதிர்கொள்ளும்போது, அவனுடைய துணைவி அந்த வேளையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இச்சம்பவம் ஓர் அழகிய முன் மாதிரியாகும்.

நபி(ஸல்) அவர்கள் பேதலித்து நின்றபோது கதீஜா நாயகி அவர்கள், சாதாரணக் குடும்பங்களில் நடப்பது போன்று தம் கணவரைக் கேலி பேசவில்லை. அவநம்பிக்கை ஊட்டி அதைரியப் படுத்தவில்லை. மாறாக நபிகளாரைத் தேற்றினார்கள், தைரியப்படுத்தி உற்சாக மூட்டினார்கள்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒரு போதும் அல்லாஹ் இழிவு படுத்தமாட்டான்; ஏனெனில் தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கின்றீர்கள்; சிரமப்படுவோரின் சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள்; வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள்; உண்மையான சோதனைகளில் ஆட்பட்டோருக்கு உதவி புரிகின்றீர்கள்;” என்று கதீஜா நாயகி அவர்கள் நபிகளாரை ஆறுதல் படுத்தினார்கள். இப்படிப்பட்ட நற்குணத்தின் நாயகரான தங்களுக்கு எந்தக் கெடுதலும் நேர்ந்துவிடாது என எடுத்துரைத்துத் திடப்படுத்தினார்கள்.
சோதனையான காலகட்டங்களில் ஒரு குடும்பத்தலைவி கணவருக்குப் பக்கத்துணையாக இப்படித்தான் நடந்து கொள்ளுதல் வேண்டும். இந்தச் சம்பவம் திருக்குர்ஆனின் முதல் திருவசன வெளிப்பாட்டோடு தொடர்புடையதாகும். இறைத்தூதர் என்னும் அந்தஸ்தைப் பெற்றவுடன் நபிகளாரின் குடும்ப வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான இச்சம்பவம் நல்லதொரு குடும்ப அமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதையும் உணர்த்தி நிற்கிறது.

ஆன்மீகத் துறைக்கு மட்டுமே மதங்கள் ஏற்றவை, லௌகீக வாழ்விற்கு மதங்கள் ஒத்துவருவதில்லை” எனப் பலரும் பேசித்திரிகின்றனர். வேறு எந்த மதத்திற்கு வேண்டுமானாலும் இந்த அளவுகோல் பொருந்தக்கூடும். ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்த வரை ஆன்மீகம் என்றும் லௌகீகம் என்றும் பாகுபாடு எதுவும் கிடையாது.

மனித வாழ்வின் ஆன்மீகம், லௌகீகம் உள்ளிட்ட தேவைகள் , என்னவெல்லாம் இருக்கின்றனவோ, அவை அனைத்தையும் உள்ளடக்கிய வாழ்வியல் நெறியே இஸ்லாமாகும். குடும்பம், சமுதாயம், அரசியல், பொருளாதாரம் போன்ற லௌகீக வாழ்க்கை முறைகளை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு இஸ்லாம் திட்டவட்டமான வழிகாட்டுதல்களை வழங்கி யிருக்கின்றது.

இந்த லௌகீகத் தடங்களில் மனிதன் கால்பதித்து நடக்கும் போதுதான் அவனது ஆன்மீகத் தடாகத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் பூத்துக்

குடும்பம் என்பதே, ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் கோப்பு ஆகும். குடும்ப வாழ்க்கை தழைத்தால்தான், சமூகம் வளரும், நாடு சுபிட்சம் பெறும், உலகம் தழைக்கும்..!

குடும்பம் என்பதே, ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் கோப்பு ஆகும். குடும்ப வாழ்க்கை தழைத்தால்தான், சமூகம் வளரும், நாடு சுபிட்சம் பெறும், உலகம் தழைக்கும்..!

குலுங்கும் என இயம்புகிறது இஸ்லாம். இந்த வகையில் ஒரு குடும்ப அமைப்பு எப்படி இருத்தல் வேண்டும் என்பதையும், திருக்குர்ஆனும் நபிவழியும் நமக்கு நன்கு உணர்த்திக் காட்டியுள்ளன.

மதம் என்பது தனி மனிதனோடு சம்பந்தப்பட்டது; குடும்ப வாழ்க்கையோடும், கூட்டு வாழ்க்கையோடும் மதத்தைச் சம்பந்தப்படுத்தக் கூடாது’ என்ற மதச் சார்பின்மைப் பேச்சுக்கு இஸ்லாத்தில் இடம் கிடையாது. தனிமனித வாழ்க்கையில் எந்த அளவுக்கு இஸ்லாமிய ஒழுக்கங்கள் பின்பற்றப்படுகின்றனவோ, அந்த அளவுக்குக் குடும்பவாழ்விலும், கூட்டுவாழ்விலும் இறைச் சட்டத்தையும் நபிவழியையும் பின்பற்ற வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்.

இஸ்லாத்தின் பல்வேறு கடமைகளைப் பார்ப்போமானால், அவை கூட்டாகச் செயல்படுத்துவதற்கென்றே விதிக்கப்பட்டதனைத் தெரியலாம். தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் போன்ற அடிப்படைக் கடமைகள் மட்டுமின்றி இன்னபிற கட்டளைகள் கூட, குடும்ப அமைப்பிலும் சமுதாய அரங்கிலும் செயல்படத் தகுந்தனவாகவே காணக்கிடக்கின்றன.

இந்தப் பின்னணியில் நோக்கும் போது இஸ்லாம் குடும்பவியல் அடிப்படையிலான ஒரு மார்க்கமாகவே திகழ்கின்றது. குடும்பவியலின் ஆதாரசுருதியாக அமைந்திருப்பது திருமணமேயாகும்.

ஆண்டவனது அருளை அபரிமிதமாகப் பெற வேண்டுமானால், திருமண பந்தங்களையெல்லாம் மறந்துவிட்டு, துறவு வாழ்க்கையைத் தேடிக்கொள்ளுமாறு பல மதங்கள் கூறுகின்றன. ஆனால் இஸ்லாம் துறவறத்தைச் சிபாரிசு செய்யவில்லை. மாறாக இல்லற வாழ்க்கையை வலியுறுத்திப் பேசுகின்றது.

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய விரும்பி மனிதர்கள் துறவுத்தனத்தைத் தாங்களாகவே புதிதாக உண்டாக்கிக் கொண்டனர். அதனை நாம் ஒருபோதும் அவர்களுக்குக் கடமையாக ஆக்கவில்லை. அப்படியிருந்தும், துறவு மேற்கொண்ட அவர்கள், அதனை எந்த அளவுக்குப் பேணி ஒழுக வேண்டுமோ அந்த அளவுக்கு அதனைப் பேணுவதும் இல்லை
(அல்குர்ஆன் 57:27) என்று இறைமறை இயம்புகின்றது.

அந்தக் காலத்து விசுவாமித்திர முனிவரிலிருந்து இந்தக் காலத்து பிரேமானந்தா முனிவர் வரை எத்தனையோ துறவிகள் இத் துறவறத்தை எந்த அளவுக்குக் கேலிக் குரியதாக ஆக்கியிருக்கின்றார்கள் என்பதை நாம் தெரிந்து வைத்திருக்கின்றோம்.

துறவு வாழ்க்கை விதிக்கப்பட்டுள்ள கிறித்துவப் பாதிரிமார்கள், அவர்களுடைய நீண்ட, நெடிய வெள்ளை அங்கிகளுக்குள்ளே நடத்தும் களியாட்டலீலைகள் உலகறிந்த ரகசியங்களாகும்.

மனிதனுக்குப் பசி, தாகம் எழுவது எப்படியோ அதுபோலவே உடல்சுகமும், புலனின்பமும் இயல்பான ஒன்றாகும். இதனை வலிந்து அடக்குதலை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை.

உஸ்மான் பின் மழ்ன்(ரலி) என்று ஒரு நபித்தோழர் இருந்தார். இவர் நபி(ஸல்) அவர்களை அணுகி, குடும்ப வாழ்க்கையில் தாம் ஈடுபடாமல் துறவறம் மேற்கொள்ளப் போவதாகக் கூறி, அதற்கு அனுமதி கோரினார். நபி(ஸல்) அவர்கள் இந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள், அவருக்கு அனுமதி வழங்கயிருந்தால் நாங்கள் ஆண்மை நீக்கம் செய்திருப்போம் என்று ஸஃது பின் அபீ வக்காஸ்(ரலி) அறிவிக்கும் நபிமொழி புகாரி, முஸ்லிம், அஹ்மத் நூல்களில் இடம் பெற்றள்ளது.
அனஸ்(ரலி) வாயிலாகத் தெரியவரும் பின்வரும் நபிமொழியும் புகாரி, முஸ்லிம், அஹ்மத் போன்ற நூல்களில் இடம் பெற்றுள்ளது.

நபித்தோழர்களில் சிலர் நான் மணமுடிக்க மாட்டேன் என்றும், வேறு சிலர் நான் உறங்காமல் தொழுது கொண்டிருப்பேன் என்றும் மேலும் சிலர் நான் விடாமல் நோன்பு நோற்பேன் என்றும் பேசிக்கொண்டனர். இந்தச் செய்தி நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்தபோது; நான் நோன்பும் வைக்கிறேன், அதைவிட்டு விடவும் செய்கிறேன்; நான் தொழவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; பெண்களை மணமுடிக்கவும் செய்கிறேன். யார் எனது வழிமுறையைப் புறக்கணிக்கின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவர் அல்லர் என்று கூறினார்கள்.

முக்கிய வழிபாட்டுக் கடமைகளான நோன்பிற்கும் தொழுகைக்கும் இஸ்லாம் எந்த இடத்தை வழங்கியுள்ளதோ, அதே இடத்தை மணவாழ்க்கைக்கும் தந்து நிற்கின்றது இந்த நபிமொழி.

நான் உண்ணமால் நோன்பிருக்கிறேன், உண்ணவும் செய்கிறேன்: உறங்காமல் விழித்திருக்கிறேன்: உறங்கவும் செய்கிறேன்’ என்ற கூற்றிலிருந்து உணவும் உறக்கமும் ஒரு மனிதனுக்கு எப்படி இன்றியமையாது தேவைப் படுகின்றனவோ அது போலவே மணவாழ்வும் மனிதனுக்கு ஒரு அவசியத் தேவையாகும் என்பதையும் இந்த நபிமொழி நன்கு உணர்த்துகின்றது.
அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் இரவு முழுவதும் தொழுவதாகக் கேள்விப் பட்டபோது, நபி(ஸல்) அவர்கள் அவரைத் தடுத்தார்கள். நீ உனது மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உண்டு என்று உணர்த்திக் காட்டினார்கள்.

இந்தக் கருத்துப்பட அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கும் நபிமொழி புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ

குடும்பம் என்பதே, ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் கோப்பு ஆகும். குடும்ப வாழ்க்கை தழைத்தால்தான், சமூகம் வளரும், நாடு சுபிட்சம் பெறும், உலகம் தழைக்கும்..!

குடும்பம் என்பதே, ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் கோப்பு ஆகும். குடும்ப வாழ்க்கை தழைத்தால்தான், சமூகம் வளரும், நாடு சுபிட்சம் பெறும், உலகம் தழைக்கும்..!

நூல்களில் இடம் பெற்றள்ளது.

அடியான் என்ற வகையில் ஆண்டவனுக்கு வழிபாடுகளைச் செலுத்துவதோடு, கணவன் என்ற வகையில் மனைவிக்கு ஆற்ற வேண்டிய பொறுப்புக்களையும் ஒரு மனிதன் செவ்வனே நிறைவேற்றியாக வேண்டும். நபி(ஸல்) அவர்கள் இதனை வற்புறுத்திக் கூறியுள்ளமை, இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

மேற்கூறிய நபிமொழிகள் ஒரு முக்கியமான செய்தியை நமக்கு உணர்த்திக் காட்டியுள்ளன. மனிதனுக்குப் பசி, தாகம், உறக்கம் எப்படியோ அதுபோலவே உடல் சுகமும் புலனின்பமும் இயல்பான ஒன்றாகும். ஒரு பாலினர் மற்றொரு பாலினரிடம் கொண்டிருக்கும் இந்த ஈர்ப்பு உயிரியல் இயற்கைக்கு உட்பட்டது. பிற உணர்வுகள் அனைத்தையும் விடவும் மனிதனிடம் மேலோங்கித் திகழக்கூடியது இதுவாகும். இந்த உணர்வு மனிதனுடைய ஐம்புலன்களுக்கும் ஒருங்கே இன்பமளித்து, அவனது எண்ணம், சொல், செயல்களையெல்லாம் இனிமைப் படுத்துகின்றது.

மனிதனுடைய மகிழ்ச்சி, துக்கம், போன்ற பிற உணர்வுகளையெல்லாம் ஆட்டிப்படைக்கின்ற அளவுக்கு ஒரு வலுவான ஆற்றலாக இப்பாலுணர்வுச் சங்கதி புதைந்து கிடக்கின்றது. இந்த உணர்வு நிறைவேறும்போது மனிதன் மகிழ்கிறான், சாந்தமடைகிறான். அவனுடைய பிற செயல்பாடுகள் சீரடைகின்றன. இந்த உணர்வு நிறைவேறாத நிராசையாகும்போது மனிதன் கோபம் கொள்கிறான். ஆவேசப்படுகிறான். அவனுடைய பிற இயக்கங்களை இது மிகவும் பாதிக்கின்றது. இதன் காரணமாகவே வரலாற்றில் பல சாம்ராஜ்ஜியங்கள் சரிந்திருக்கின்றன. போர்க்களப் பேரழிவுகள் தொடங்கி, இக்காலத்துக் குத்து வெட்டுக் கொலைகள் வரை பலவற்றிலும் இந்த உணர்வு முக்கிய இடம் வகிப்பதைக் காண்கின்றோம்.

சொல்லப்போனால், படைப்பினங்களின் மணி முடியாகத் திகழும் மனிதனுக்கு இறைவன் அருளியிருக்கும் எண்ணற்ற அருட்கொடைகளுள் இந்தப் பாலுணர்வும் ஒன்றாகும். மனிதன் பருவமெய்தியதிலிருந்து அவன் முதுமையடைந்து மரணிப்பது வரை இப்பாலுணர்வு ஏதோ ஒரு ரூபத்தில் அவனிடம் பொருந்தியே இருக்கின்றது. ஏனைய உயிரினங்களுக்குப் பாலுணர்வு உண்டு என்றாலும் அவை இவ்வுணர்வினை ஆண்டு முழுவதும் பயன்படுத்துவது கிடையாது. ஒரு குறிப்பிட்ட பருவ காலத்தில் மட்டுமே பயன்படுத்தி விட்டு ஓய்வெடுத்துக் கொள்கின்றன. ஆனால் மனிதனுடைய பாலுணர்வு இயக்கமோ ஆண்டு முழுவதும் எல்லாப் பருவகாலங்களிலும் செயல்படுத்தத் தக்க வகையில் அமைந்திருக்கின்றது.

ஆக, இப்பாலுணர்வு என்பது மனிதனுடைய பிறப்போடு ஒட்டியது. மக்கள் பிறப்பை அருளுவதும் எங்கும் பரந்து நிற்பதும் இதுவாகும், ஆண்டவனது படைப்புகக்களில் ஆண்,பெண் என்ற தத்துவத்தின் வித்தாகவும், அவற்றின் வாழ்வுக்கும் வளத்துக்கும் சத்தாகவும் இது அமைந்திருக்கின்றது.

ஆண்மையும் பெண்மையும் ஒன்றில் ஒன்று ஈர்க்கப்படும் இப்பாலுணர்வு இல்லையேல் மனித இனமும் இனப்பெருக்கமும் நில்லாது நிலையாது போயிருக்கும். இனப்பெருக்கத்தின் முன்னோடியாகத் திகழும் இப்பாலுணர்வுக்குத் திருமணம்’ என ஒரு நெறியமைத்து அதற்குச் சில ஒழுங்கு முறைகளை விதித்துள்ளது இஸ்லாம், குடும்ப இயலின் நுழைவாயிலான இத்திருமணம் மனிதனுடைய செயல்பாடுகளில் சிறப்பான ஒரு இடத்தை வகிக்கின்றது, எனவே இஸ்லாம் இதுபற்றிச் சிறப்பாகப் பேசியுள்ளது.

இஸ்லாம் ஒரு குடும்பவியல் நெறி!

–ஒன்காட்

 

Related Post