அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..! – 2

 

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சந்ததியினர் மக்காவில் குடியேறி அரபிய தீபகற்பம முழுவதிலும் பரவிய காலம்தொட்டு அரபியர்களில் பெரும்பாலோர் இப்ராஹீம் (அலை)அவர்களின் மார்க்கத்தையே பின்பற்றி வாழ்ந்தனர்.

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சந்ததியினர் மக்காவில் குடியேறி அரபிய தீபகற்பம முழுவதிலும் பரவிய காலம்தொட்டு அரபியர்களில் பெரும்பாலோர் இப்ராஹீம் (அலை)அவர்களின் மார்க்கத்தையே பின்பற்றி வாழ்ந்தனர்.

-மவ்லானா ஸஃபீயுர் ரஹ்மான்   – தமிழில்:இளவேனில்

அரபியர்களின் சமய நெறிகள்

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சந்ததியினர் மக்காவில் குடியேறி அரபிய தீபகற்பம முழுவதிலும் பரவிய காலம்தொட்டு அரபியர்களில் பெரும்பாலோர் இப்ராஹீம் (அலை)அவர்களின் மார்க்கத்தையே பின்பற்றி வாழ்ந்தனர். அல்லாஹ்வை மட்டுமே வணங்கிஅவனால் அங்கீகக்கப்பட்ட மார்க்கத்தை முழுமையாகக் கடைபிடித்து வந்தனர். காலங்கள்செல்லச் செல்ல அல்லாஹ்வின் வழிகாட்டல்களையும் போதனைகளையும் சிறிது சிறிதாகமறக்க ஆரம்பித்தனர். எனினும், அவர்களிடையே ஓரிறைக் கொள்கையும் மார்க்கத்தின்உயர்ந்த நெறிகளும் ஓரளவு நிலைத்திருந்தன. குஜா’ஆ கோத்திரத்தின் தலைவனான அம்ரு இப்னு லுஹய் சமய சம்பந்தப்பட்ட செயல்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவனாக இருந்தான். மக்களுக்கிடையில் நற்செயல்களை பரப்பி, தான தர்மங்கள் செய்து வந்தான். எனவே,மக்கள் பெரிதும் மதித்து அவனை ஓர் இறைநேசராகக் கருதினர். அவன் ஒருமுறை ஷாம் நாட்டுக்குச் சென்றான். அங்கு மக்கள் சிலைகளை வணங்கிக்கொண்டிருந்தனர். அவர்களின் இந்த சிலை வணக்க வழிபாடு அவனைப் பெரிதும் கவர்ந்தது. ஷாம் நாடு, நபிமார்கள் மற்றும் வேதங்கள் அருளப்பட்ட பகுதியாக இருந்ததால்அந்தச் சிலை வணக்கமும் உண்மையான ஒன்றாகத்தான் இருக்கும் என அவன்எண்ணினான். எனவே, அவன் மக்கா திரும்பியபோது ‘ஹுபுல்| என்ற சிலையைக் கொண்டு வந்து கஅபாவின் நடுவில் அதை வைத்து விட்டான். அந்தச் சிலையைக் கடவுளாக ஏற்று அல்லாஹ்வுக்கு இணைவைக்குமாறு மக்காவாசிகளுக்கு அழைப்பு விடுத்தான். இவ்வாறாக சிலைவணக்கம் மக்கா முழுமையாகவும் பின்னர் ஹிஜாஸ் பிரதேசத்துக்கும் பரவியது. இது தவிர, இன்னபிற சிலைகள்.., இன்ன பிற பெயர்களில்.., இப்பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டன.
உதாரணமாக,ஹுபுல் மட்டுமின்றி,’மனாத்’ எனும் சிலை, செங்கடலின் ஓரத்தில் அமைந்துள்ள ‘குதைத்| என்ற நகரின் அருகாமையிலுள்ள’அல்-முஷல்லல்| என்ற பகுதியில் வணங்கப்பட்டு வந்தது. (முஷல்லல் என்பது ஒரு மலைமேடுஅதன் அடிவாரத்தில் குதைத் உள்ளது – ஆதாரம்: புகாரி).
‘தாஇஃப்’ நகரத்தில் ‘லாத்| எனும் சிலையை ஸகீஃப் கோத்திரத்தினரும்,’நக்லா ஷாமிய்யா| என்ற பள்ளத்தாக்கில் ‘உஜ்ஜா| எனும் சிலையை குறைஷி, கினானா மற்றும் பல கோத்திரத்தினரும் வணங்கி வந்தனர்.(ஆதாரம்: கிதாபுல் அஸ்னாம்)
இம்மூன்று சிலைகளும் மட்டுமின்றி, கணக்கிலடங்கா சிலைகள் உருவாக்கப்பட்டு, ஹிஜாஸ் பிரதேசத்தின் பல பகுதிகளுக்கும் சிலை வணக்கக் கலாச்சாரம் பரவியது.
புனிதமிக்க கஅபாவும் இதற்கு விதிவலிக்காக அல்லாமல், சிலைகளால் நிரப்பப்பட்டிருந்தது. அண்ணலார் முஹம்மத் (ஸல்)அவர்கள் புனித மக்கா-வை வெற்றி கொண்டபோது கஅபாவைச் சுற்றிலும் 360 சிலைகள் இருந்தன. அண்ணலார் (ஸல்) அவர்கள் தங்களது கரத்திலிருந்த தடியால் அவைகளைக் உடைத்துக் கீழேதள்ளினார்கள். பின்னர் அன்னாரது உத்தரவின்படி அவைகள் கஅபாவிலிருந்துவெளியேற்றப்பட்டு எரிக்கப்பட்டன.
தமது சிலைகளின் வணக்க-வழிபாடு தொடர்புடைய பாரம்பர்ய மற்றும் விழா நிகழ்வுகளை உருவாக்கி நடத்தியவன்,சமய சம்பந்தப்பட்ட செயல்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவனாக இருந்த குஜாஆ கோத்திரத்தின் தலைவனான அம்ர் பின் லுஹய்..!
அவர்களின் சிலை வணக்க-வழிபாடு தொடர்பான சில அம்சங்கள் இதோ:-
1. அச்சிலைகளிடம் தம்மை அர்ப்பணித்தல்,அவற்றிடம் பாவமன்னிப்பு கோருதல், அவைகளின் புகழ் பாடுதல்,அவற்றை வணங்கி வழிபாடுகள் செய்து அவற்றிடம் அபயம் தேடுதல்,நெருக்கடியான காலக்கட்டத்தில் அவைகளின் உதவி கோருதல், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் நோக்கம் கொண்டு அவற்றிடம் தம்மை முழுமையாக சரணடையச் செய்தல்.
2. அவற்றை நாடி பயணம் மேற்கொள்ளல், அவற்றை சுற்றி வலம் வருதல்,அவற்றின் முன் தம்மை தாழ்த்தி.., ஏன்.., சிரம் பணியவும் செய்தல்..!
3. பிராணிகளை பலியிட்டும், நேர்ச்சைகளை நிறைவேற்றுவதன் மூலமும் சிலைகளிடமிருந்து உதவி பெறப்பட நாடுதல்..!
4. தங்களின் கற்பனைக்கு தகுந்தவாறு உணவு, குடிபானம் ஆகியவற்றில் சிலவற்றையும்,வேளாண்மை மற்றும் கால்நடைகளில் சிலவற்றையும் அச்சிலைகளுக்காக ஒதுக்கி அர்ப்பணிப்பதைப் புனிதமாகக் கருதுதல்..!
இவை தவிர, ஜோதிடன், குறிகாரன், நட்சத்திர ராசிபலன் கூறுபவன், காணாமல் போனதை கண்டுபிடித்துத் தருபவன் ஆகியோரின் பேச்சுக்களிலும் ஆரூடங்களிலும் அம்மக்கள் குருட்டுத்தனமான நம்பிக்கை கொண்டிருந்தனர். மேலும்,உலகில் நடக்க இருக்கும் நிகழ்வுகள் தான் அறிந்திருப்பதாகவும், வருங்கால நிகழ்வுகளை முன்கூட்டியே அறிவிக்கக் கூடியவராகவும் தம்மை முன்னிறுத்தியும், மறைவானவற்றின் அறிவு இருப்பதாகவும் வாதிடுவோருக்கு குறை இல்லாமலிருந்தது.மூடநம்பிக்கையும் சகுனம் பார்த்தலும் உச்சத்தில் இருந்தது. ஏதேனும் ஒரு செயலை செய்ய நாடினால், ஒரு பறவை அல்லது மானை விரட்டுவார்கள். அது வலப்புறமாகச் சென்றால் அதனை நற்சகுனமாகக் கருதி, தாம் மேற்கொள்ள நாடியிருந்த செயலை செயல்படுத்துவார்கள். அவ்வாறில்லையெனில், அதை அபசகுனமாகக் கருதி செயல்படுத்த மாட்டார்கள்.
அஞ்ஞானக்கால அரபியர்களிடம் இவ்வாறான மூடநம்பிக்கைகள் நிறைந்திருந்தபோதிலும் இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களுடைய மார்க்கத்தின் சில நெறிமுறைகளும் அவர்களிடையே எஞ்சியிருக்கத்தான் செய்தன. உதாரணமாக, இறைஇல்லமான கஅபாவை கண்ணியப்படுத்துதல், அதனை வலம் வருதல்,அதன்பால் புனித யாத்திரை மேற்கொள்ளல், அரஃபா-வில் தங்குதல், பிராணிகளை அறுத்துப் பலியிடுதல் போன்ற நற்செயல்கள் அவர்களிடம் நிலைபெற்றிருந்தன. அவை மிகுந்த பயபக்தியுடன் நிறைவேற்றப்பட்டாலும், அவற்றிற்கிடையே,கலப்படமாக பல மூட நம்பிக்கைகளையும் புகுத்தியிருந்தனர்.
இவ்வாறு, பலதெய்வ வழிபாடு, சிலை வணக்கம், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றின் கலவையாக அN ரபிய தீபகற்பத்தில் சமய வாழ்க்கைபரவி இருந்தது எனலாம். இவை தவிர தவிர யூத, கிறித்துவ,நெருப்பு வணங்கிகள் மற்றும் ஸாபி போன்ற மதங்களுக்கும் அரேபிய தீபகற்பம் ஆங்காங்கே வழவிட்டிருந்தது.
யூதம் எமன் மற்றும் யத்ரிப் (மதீனா)-விலும்,கிறித்துவம் எமன் மற்றுமு; வடஅரேபியப் பகுதியிலும் பரவியிருக்க,ஈரான்,ஈராக் மற்றும் பஹ்ரைன் போன்ற அண்டை நாட்டு அரேபியப் பகுதிகள் நெருப்பு வணங்கிகளுக்கு வழிவிட்டிருந்தன.

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சந்ததியினர் மக்காவில் குடியேறி அரபிய தீபகற்பம முழுவதிலும் பரவிய காலம்தொட்டு அரபியர்களில் பெரும்பாலோர் இப்ராஹீம் (அலை)அவர்களின் மார்க்கத்தையே பின்பற்றி வாழ்ந்தனர்.

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சந்ததியினர் மக்காவில் குடியேறி அரபிய தீபகற்பம முழுவதிலும் பரவிய காலம்தொட்டு

சமநிலை காணா அரபியர்களின் சமூக அமைப்பு

பலதரப்பட்ட வகுப்பினரை உள்ளடக்கிய ஒரு சமூக அமைப்பைக் கொண்டதாக இருந்தத அரபிய சமூக அமைப்பு எனலாம். சமூகத்தில் பெண்களுக்கு மிகக் கண்ணியமான மதிப்பும் உயரிய அந்தஸ்தும் வழங்கப்பட்டது. மகளிர் சுய அதிகாரத்துடனும் சுயகவுரவத்துடனும் திகழ்ந்தனர். அநேக வேளைகளில், பெண்களின் முடிவுதான் இறுதிமுடிவாக பிரயோகிக்கப்பட்டது. ஏந்த அளவுக்கெனில், அவளுடைய மதிப்பும் மரியாதையும் காக்கப்படுவதற்காக, சிலசமயங்களில் இரத்த ஆறும் ஓடும். பெண்களுக்கு மிகுந்த பாதுகாப்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது. ஆண், பெண் தொடர்பு எனும் பந்தம், அப்பெண்களுடைய காப்பாளர்களின் அனுமதி பெற்று திருமணத்தின் மூலமே ஏற்படுத்தப்பட்டது. இதுவிஷயத்தில் காப்பாளர்களின் முடிவு எந்நிலையிலும் கேள்விக்குறியாக்கப்பட்டதில்லை.
மற்றொருபுறம், தரங்கெட்ட ஒழுக்கமும், விபச்சாரமும் பல்கிப் பெருகிய பல சமூக அமைப்புக்களும் விரவியிருந்தன.அங்ஞானக்கால அரபியர் எவ்வித வரம்புமின்றி பல பெண்களை மணந்து கொண்டனர். மேலும்,இரு சகோதரிகளை ஏககாலத்தில் மணந்து கொண்டனர். இறந்த தங்களது தந்தையின்மனைவியை,அல்லது தங்கள் தந்தை விவாகரத்து செய்த பெண்ணை (அதாவது,மாற்றாந்தாயை) மணந்து கொள்ளும் பழக்கமும் அவர்களிடையே இருந்தது.விவாக விலக்கைப் பொறுத்தவரை, முழு அதிகாரமும் கணவனின் கையில்தான் இருந்தது. அஞ்ஞானக்கால அரபியர்கள் தமது பிள்ளைச் செல்வங்களுடன் பேணி வந்த உறவுமுறையைக் கண்டால், அரபியரின் இந்த வாழ்க்கையில் ஒருஇருண்ட சித்திரத்தைக் காண முடியும். அரபியர்களின் ஒரு பிரிவினர், தமது குழந்தைகளை தம் நெஞ்சத்து நெருக்கமானவர்களாக.., அபரிமிதமான அன்புக்குரியவர்களாக நடத்த.., மற்றொரு பிரிவினரோ, அவமானம் மற்றும் வறுமைக்குப் பயந்து தாம் பெற்ற பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்கும் மிகக் கொடூர நெஞ்சம் கொண்டவராகத் திகழந்தனர்.
குடும்பத்துடன் இயைந்த அவர்களின் ஆழ்ந்த, உணர்வுப்பூர்வமான பந்தத்தையும் அரபியர்கள் வாழ்வில் நாம் இன்னொரு அம்சமாகக் காண முடிகின்றது.ஆம்..! குடும்பம் அல்லது குலப்பெருமை அவர்களது மாபெரும் மானப் பிரச்னையாகக் கொள்ளப்பட்டது. இனவாதமும், இரத்த பந்தமான குடும்பப் பாரம்பரியமும் அவர்களது சமூக அமைப்பின் ஆணிவேரா திகழ்ந்தன.
‘உன் சகோதரனுக்கு நீ உதவி செய், அவன் அநியாயக்காரனாக இருந்தாலும் அநீதி இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் சரியே.,!’ எனும் பழமொழியின் பொருளுக்கேற்ப அவர்கள் வெளிப்படையாகவே நடந்து கொண்டார்கள்.!
சுருங்கக்கூறின் அவர்களிடையே பரவிக் கிடந்த தொடர்ச்சியான அக்கப்போர்களின் விளைவாக, பரஸ்பர குல-கோத்திர தொடர்புகள் சீர்கெட்டு,சமூக அமைப்பு தரங்கெட்டு உருக்குலைந்து இருந்தது. எனவே, அஞ்ஞானக்கால அரபிய தீபகற்பத்தின் சமூக நிலைமையை நாம் இவ்வாறு சுருக்கமாகக் கூறமுடியும்: அதாவது, அவர்கள் இருள் படர்ந்த அறியாமையில் முக்கி மூழ்கிக் கிடந்தனர். பேண் என்பவள் ஒரு சந்தைப் பொருளாகவும், பொதுச் சொத்தின் அங்கமாகவும் நடத்தப்பட்டாள்.!

 

அரபியர்கள் தமது வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வியாபாரமே பொதுவான வழிமுறையாக இருந்தது.

அரபியர்கள் தமது வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வியாபாரமே பொதுவான வழிமுறையாக இருந்தது.

பொருளாதார நிலை

அரபியர்கள் தமது வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வியாபாரமே பொதுவான வழிமுறையாக இருந்தது. வணிகக் குழுக்களின் பாதைகளில் பாதுகாப்பும், குலங்களுக்கிடையிலான அமைதி உடன்படிக்கையும் இருந்தால் மட்டுமே வணிகப் பயணங்கள் சாத்தியமாயின. இவ்விரு அம்சங்கள் தேவைப்படாத ஒரு வணிகக் காலம் இருந்ததெனில், அது தடை செய்யப்பட்ட புனித மாதங்களில் மட்டுமே..! அம்மாத காலங்களில், அரபியர்கள் ஒன்றுகூடும் வியாபாரச் சந்தைகளாக உக்காஸ், தில்-மஜாஸ், மிஜன்னா போன்ற அரபியர்களின் பெயர் போன வியாபாரச் சந்தைகள் நடைபெற்றன.
தொழில் துறைகளைப் பற்றிய அறிவு அரபியர்களிடத்தில் இருந்ததில்லை. எமன், ஹீரா மற்றும் ஷாம் (சிரியா) ஆகிய பகுதிகளிலிருந்து வந்த மக்கள் மேற்கொண்ட துணி நெய்தல், தோல் பதனிடுதல் போன்ற சில தொழில்கள்மட்டுமே அரபியாவில் காணப்பட்டன. விவசாயமும் கால்நடை வளர்ப்பும் அரபிய தீபகற்ப உட்புறத்தின் சில பகுதிகளில் நடைபெற்று வந்தன. அரபியப் பெண்கள் அனைவரும் நெசவுத் தொழில் செய்தனர். எனினும்,இந்த வணிகமும் போர்களின் காரணமாக நலிவுற்றிருந்தது. வறுமை, பஞ்சம் மற்றும் அணிவதற்கான போதிய ஆடை இல்லாமை ஆகியன ஓட்டுமொத்த அரபியாவின் பொருளாதார நிலையாக இருந்தது.

Related Post