ஊடகங்கள் மனிதத் தொடர்பை வலுப்படுத்தும் சங்கிலிகள்!அவற்றில் தொலைக்காட்சி வழித் தொடர்புகள் சாமான்யனையும் சென்றடையும் வலிய சக்கரங்கள்!அதன் தாக்கம் ஒவ்வொரு வீட்டிலும் உருவாக்க வேண்டியது ஆகுமான மாற்றங்கள்..! ஆனால், உருவாக்குவதோ நெளியச் செய்யும் சங்கடங்கள்.., முகம் சுளிக்கச் செய்யும் கன்றாவிகள்..!தொடர்களும் (ளுநசயைடள),உண்மை நிகழ்வுக் காட்சிகளும் (சுநயடவைல ளூழறள) இன்று வாதத்துக்குட்படுத்தப்பட்டு பதப்படுத்தப்பட வேண்டிய அவசியங்கள்!
விஞ்ஞானம் இன்று வீட்டு வாசலில் வாசம் புரிகின்றது.அச்சு,மின்னணு ஆகிய ஊடகத்துறைகளில் தகவல் தொழில்நுட்பத்தின் அபரிமித வளர்ச்சி வியக்க வைத்தாலும், வாழ்வியல் தகைமைகள் சார்ந்த அம்சங்களில் அதன் வீழ்ச்சி கவலைப்பட வைக்கின்றது.அதன் முன்னேற்றம் நலன்களைத் தந்தாலும், நாம் அதனைப் பயன்படுத்தும் முறையில்தான் அது தீர்மானிக்கப்படுகின்றது.
இணையதளம் இன்று உள்ளங்கை அளவில் உலகைப் படம் பிடித்துக் காட்டினாலும்கூட, இந்தியா போன்ற மக்கள் நெருக்கம் மிகுந்த வளரும் நாடுகளில் இன்றும் பட்டிதொட்டிகளில் தொலைக்காட்சிகள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பது உண்மை.
உழைத்துக் களைத்துப்போன மனிதருக்கு கேளிக்கை எனும் பெயரில், ஆபாசம், விரசம், கொலை, கொள்ளை, பழிவாங்கல்,துரோகம்,பிறன் மனை கொள்ளல் என்று ஒட்டுமொத்த ஒழுக்கச் சீர்Nடுகளையும் அது வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றது.
ஒரு தூர்தர்ஷன் இருந்த காலம் போய்.., பொதிகை இருந்த காலம் போய் இன்று நூற்றுக்கணக்கான சேனல்கள் நாழிகைதோறும் திரைப்படங்கள் இந்தியத் தொலைக்காடசிகளில் முதன் முறையாக எனும் அடைமொழிகளுடன்.., பார்வையாளர்களை எண்ணிலடங்கா தடவைகள் சீர்கேட்டில் தள்ளி வேடிக்கை பார்க்கின்றன.
இதனைவிட கவலை தருபவை, தொடர்களும் (ளுநசயைடள),உண்மை நிகழ்வுக் காட்சிகளும் (சுநயடவைல ளூழறள) உருவாக்கி வைத்திருக்கின்ற ஒருவித பயங்கர போதைதான்.
அதிகாலை எழுந்து காலை வணக்கங்கள் முடித்து,துணைவனை அலுவலகத்துக்கு அனுப்பி,பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்குத் தயார்படுத்தி,தானும் வேலைக்குத் தயாராகி, இல்லத்தரசியாய்,பணிக்கு செல்லாதவளாய் இருந்தால் வீட்டை ஒழுங்குபடுத்தி.., இத்யாதி.., பணிகளைச் செய்து காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறந்தாள் பெண்.
இன்றும் ஆங்காங்கே இது நடக்கின்றது…, ஆனால்.., சிறு வித்தியாசங்களுடன்..!
முன்னர் செய்தது கடமைகளை நிறைவேற்ற..!இப்போதோ.., தொடர் பார்க்கும் ‘தலையாய கடமை’-யை நிறைவேற்ற..!
அண்டை வீட்டுக்காரர் பெயர் மறந்துபோனால்.., ‘சன் டி.வி.-லே ராத்திரி 9 மணிக்கு போடுவாங்களே.., அதான் மருமகள பழி வாங்க.., மகன்கிட்ட போட்டுக் கொடுப்பாளே.., அந்த சீரியல் வர மருமக பேர்தாண்டி அவளுக்கும்..’ என்று சொல்லி.., அண்டை வீட்டுக்காரர் பெயரை நினைவுபடுத்திக் கொள்ளும் அவலநிலைக்கு நம் சமூகத்;தை தள்ளிவிட்டிருக்கின்றது இந்த தொடர் மோகங்கள்.
சித்தி எனும் தொடருக்காக அலுவலகத்துக்கு அனுமதி போட்டுவிட்டு விரைந்து வந்து வீட்டில் செட்டிலாகிக் கண்ணின் மணி பாடலில் இலயித்து.., தன் கண்ணின் மணியான இரத்தங்கள் சாப்பிட்டார்களா இல்லையா.., என்பதைக்கூட மறந்த ஆண் தொடர் பைத்தியங்களும் உண்டு..! அதன் நிறைவு விழாவுக்காக கோலாகல விழா கொண்டாடியதும் உண்டு.
வெங்காயம் வெட்டினாலும் கண்ணீர் மறந்த விழிகள்.., தொடர்களில் தொல்லைப்படுத்தப்படும் பாத்திரங்களுக்காக கண்களில் ஆற்றையே ஓட்டியதுண்டு.
தன் மகனோ, மகளோ பள்ளி ஆண்டு விழாவில் மேடையேறி பரிசு வாங்குகின்றாளோ இல்லையோ.., ‘ஏர்-டெல் ஜூனியர் சூப்பர் சிங்கர் போட்டியில் எப்படி முன்னேறினான் பாரு..!அசத்தப் பொவது யாரு என்று அசத்திட்டான் பாரு..!, மானாடுதோ.., மயிலாடுதோ.. என் மகன் ஆடிக் காட்டினான் பாரு ஒரு ஆட்டம்’ என்று ஒழுக்கச் சீர்கேட்டுக்கு இட்டுச் செல்லும் வழிமுறைகளில் தம் செல்வங்களைப் பாத்திரங்களாக்கி புளங்காகிதம் அடையும் பெற்றோரும் உண்டு.
இங்கு குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், தொடர்கள் மகளிரிடத்தில் ஏற்படுத்தும் தாக்கம்.., குடும்ப உறவுகளில் பெருங்கவலைக்குரிய பாதிப்புக்களை உருவாக்குகின்றது.அதன் தொடர்ச்சி பின்னர் பால்,வயது பேதமின்றி தொடர்கின்றது.
‘……… சீரியல்ல வருதே அந்த வீட்டு டெகோரேஷன் என்னமா இருந்துச்சுல்ல..!அவ கட்டியிருந்த சேல மாதிரி சென்னை சில்க்ஸ்ல கிடைக்குமா?., செல்வி நெக்லஸ் டிஸைன் சூப்பர்..’ என்று சொல்லி, அதேபோல் கிடைக்க கணவன்மார்களை நச்சரிக்கும் மனைவியர்.., அல்லது அதனை தாய்வீட்டு சீதனமாய் பெற்றுவர சொல்லி இல்லத்தாளை கொடுமைப்படுத்தும் கணவன்மார்கள்….., ‘எனக்கு ஷக்திமான் டிரஸ் வேண்டும்’ என்று சொல்லி அடம் பிடிக்கும் மழலைகள்..!
இதே தொடர்களில் வரும் கதைகளும் பாத்திரங்களும் சமூகத்தில் நடப்பதைத்தானே காட்டுகின்றோம் என்று சொதப்பல் ஆசுவாசத்துடன் வந்தாலும் அதனால் மறைமுகமாக நடக்கும் விளைவுகள் குறித்து கவலைப்படுவதில்லை.
‘உன் புருஷன்தாண்டி எனக்கு வேணும்’ என்று வெறித்தனம்,’அவனை என் கால்ல விழுந்து கதற வைக்கிறேனா இல்லயா பாரு..!, அவ எப்படி வாழ்ந்துடறான்னு பார்க்கிறேன்’ என்று சொடக்கு போட்டுப் பேசும் கதாபாத்திரங்கள் வெறும் அந்த பாத்pரமாகப் பார்க்கப்படுவதில்லை.மாறாக.., அந்த ஆளுமைகளும் ஒவ்வொரு உண்மை வாழ்வியல் உறவுப் பாத்திரங்களிடையே புகுந்து எழுகின்றன.
அதில், ஒரு சிறிய உதாரணமாக முன்பு ‘குமுதம்’ இதழில் வாசகி விஜயலட்சுமி என்பவர் சுட்டிக் காட்டியிருந்த சம்பவத்தைக் கூற முடியும்.சன் டி.வியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ‘இந்திரா’ எனும் தொடரில் வரும் ஒரு கொலைக் காட்சியை நாங்கள் குடும்பத்துடன் பார்த்தோம். அப்போது எனது 5 வயது மகளும், ஒன்றரை வயது மகனும் உடன் இருந்தனர். மறுநாள் சமையலறைக்கு நான் சென்ற போது எனது ஒன்றரை வயது மகன் காய்கறி நறுக்கும் கத்தியை கையில் எடுத்துக் கொண்டு ஊ.. ஆ.. என்று டி.வியில் வந்ததைப் போன்று தன் அக்காவை மிரட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றேன். தொலைக்காட்சியின் விளைவு! கடவுளே!..’ என்று தொலைக்காட்சியின் விபரீதத்தைக் கண்டு பதறுகின்றார்.(நன்றி : குமுதம்)
இது குழந்தையின் சுட்டிகையை சுட்டினாலும், எந்த அளவுக்கு அந்த காட்சி அந்த பிஞ்சு உள்ளத்தில் நஞ்சு விதைத்திருக்கின்றது என்பதைப் பாருங்கள்.
அதேபோல் முன்பு பிரபல்யமாக அறியப்பட்ட சக்திமான் எனும் குழந்தைகள் தொடரை தொடச்சியாகக் கண்டுகளித்து வந்த ஒரு சிறுவன், தன்னை சக்திமான் வந்து காப்பாற்றுவார் எனும் நம்பிக்கையில்.., மாடியிலிருந்து கீழே குதித்த அவலமும் நடந்தது.
தொடர்கள் இத்தகைய சோகங்களை அரங்கேற்றுகின்றன என்றால், உண்மை நிகழ்வுக் காட்சிகளும் (சுநயடவைல ளூழறள) தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்து வருகின்றன.
பிக் பாஸ் எனும் தொடர் உருவருடைய அன்றாட அந்தரங்க நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டுக் காட்டி அசிங்கப்படுத்த ஆரம்பித்தது.எடுத்ததெற்றெல்லாம் தனிமனித சுதந்தரத்துக்கு சாமரம் வீசும் அமைப்புக்கள்கூட இத்தகைய தொடர்கள் எந்த தனிமனித உரிமை குறித்துப் பேசுகின்றன என்பதை விளக்க முடியவில்லை.
முன்பு பிக் பாஸ் எனும் தொடரில் இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி தன்னுடன் அத்தொடரில் பங்கேற்ற(வரும் பின்னர் புற்றுநோயால் மரணம் அடைந்தவருமான) ஆங்கில வெள்ளை நடிகை ஜேட் ஜூடி தன்னிடம் இன-நிறவெறி பாகுபாட்டுடன் நடந்துகொண்டதாக குற்றஞ்சாட்டி பரபரப்பு ஏற்படுத்தினார்.
அனைத்துக்கும் மேலாக ‘ராக்கி கா இன்சாஃப்’ எனும் ஒரு தொடர் தனியார் சேனல் ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது.அதில் பிற மனிதர்களின் சொந்த வாழ்க்கைப் பிரச்னைகளுக்கு ராக்கி சாவந்த் எனும் இந்தி கவர்ச்சி நடிகை தீர்ப்பு வழங்குவதாகக் காட்டப்பட்டது.(இதே நடிகை இன்னொரு தனியார் சேனலில் சுயம்வர நிகழ்ச்சியை நடத்தி திருமண உறவுத் தேர்ந்தெடுத்தலை காசாக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்) ஆனால், சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் அந்த நடிகை பயன்படுத்திய சொற்பிரயோகங்களும்,தொடரின் மதிப்பும் சமூகத்துக்கு ஏற்புடைய ஒன்றாக அமையவில்லை.சட்டம்,நீதி,அரசு இயந்திரம்,பிரதிவாதிகள் என்று அனைத்துத் தரப்பினரையும் அவமதிப்பதாக அமைந்திருக்கின்றது என பலத்த எதிர்ப்பு கிளம்பியது.இதனை எதிர்த்து பின்னர் வழக்குகூட போடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, தனது மனைவி வினிதா உடனான திருமண வாழ்வின் பிரச்னைக்கு ராக்கியிடமிருந்து நியாயம் -இன்சாஃப் பெற விழைந்தார் மத்தியப் பிரதேசம், ஜான்சியைச் சேர்ந்த 24 வயது லஷ;மண் பிரசாத் அஹிர்வார்!ஆனால், நிகழ்ச்சியின்போது ராக்கி அவரை நாமர்த்-ஆண்மையற்ற பேடி என்று கூறியதால் மனம் வெதும்பி,உண்ணாமல்,அருந்தாமல் தன் வாழ்வை முடித்துக் கொண்டதாக பெரும் சர்ச்சை கிளம்பியது.
அதேபோன்று,தமிழ்க் கலாச்சாரத்தையே குழி தோண்டிப் புதைக்கும் விதத்தில் பல ரியாலிட்டி ஷோக்கள் தனியார் சானல்களில் வலம் வருகின்றன.மானாட…, மயிலாட.. என்று கவித்துவமான பெயரை வைத்துக் கொண்டு.., அசிங்க அசைவுகளுடன் ஆட்டம்..!அசத்தப் போகின்றோம்.., கலக்கப் போகின்றோம் எனும் பெயர்களில்.., சமூகத்தை சாக்கடையாக்கும் வகையிலான நகைச்சுவைகள்.அதில் பங்கேற்கும் நடுவர்கள்கூட நிகழ்ச்சியாளர்களுடன் இணைந்து தங்கள் ஆளுமைகளை தரங்குறைத்துக் கொள்ளும் கொடுமை..!
ஒரு சிறிய காட்சி..! பரீட்சையில் தோல்வியுற்றதால் தான் படும் அவஸ்தையை பழைய தமிழ்ப்பாடல் மெட்டில் அமைத்து ஒரு சிறுவன் நடித்த ரியாலிட்டி ஷோவைக் கண்டிருந்தால் நீங்கள் அதிர்ந்து போயிருப்பீர்கள்.அந்தப் பாடல் மது அருந்திவிட்டு ஒரு கதாநாயகன் நடித்த காட்சியமைப்பில் இருந்தததால் அந்த சிறுவனும் அப்படியே குடித்துவிட்டு ஆடுவதுபோல் செய்தான். இறுதியில் Nhதல்வியால் துவண்டு விஷமருந்துவதுபோல் காட்சி.அந்த சிறுவனுக்கு என்ன வயது தெரியுமா..? வெறும் நான்குதான்.!
சிந்தியுங்கள்..! அந்த பிஞ்சு உள்ளம் எத்தகைய ஆளுமையை வளர்த்துக்கொள்ளும் என்று..!
இப்படி சொல்லிக் கொண்டெ போக முடியும்..!
தினமணி’ நாளிதழின் வாசகர் கடிதம் இவ்வாறு பேசுகின்றது:’வளர் இளம் பருவத்திடம் ஓடிப்போகும் கலாச்சாரம் பரவலாகக் காணப்படுவதற்கு சின்னத் திரைத் தொடர்களும், வண்ணத்திரைகளும் தான் காரணம். பெரும்பாலும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களில்தான் இந்த ஓடிப்போகும் நிகழ்வு நடைபெறுகிறது. வறுமையும், பண்பாட்டுச் சீரழிவும் காணாமல் போனால்தான் இந்த சமுதாயத்தில் ஓடிப்போகும் கலாச்சாரம் இல்லாத நிலை உருவாகும். ‘சோம நடராசன் (கரூர்) ‘ நன்றி : தினமணி (28-05-2004)
சினிமாவில்.., தொடர்களில் வருவதைப் போன்று உயர்மட்ட வாழ்க்கை வேண்டும் என்ற போலி ஆசையில் தனது வாழ்வையே சூனியமாக்கிக் கொள்ளும் அவல நிலை உருவாக சின்னத் திரைத் தொடர்களும், வெள்ளித்திரைகளும் பெருமளவு பாதை வகுக்கின்றன.
குழந்தைப் பருவம் பாழ்பட இந்த தொலைக்காட்சி தொடர்களின் தாக்கம் எந்த அளவிற்கு வேரூன்றியிருக்கிறது என்பதை ஒரு சின்ன புள்ளி விவரத்தின் மூலம் அறிய முடியும்.
ஒரு புள்ளிவிபரத்தின் படி ஒரு அமெரிக்கக் குடிமகன் ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்றே முக்கால் மணி நேரம் தொலைக்காட்சியைப் பார்க்கிறான். 65 ஆண்டு கால உலக வாழ்க்கையில் ஒரு மனிதன் ஒன்பது ஆண்டுகாலம் தன் வாழ்க்கையை தொலைக்காட்சியைக் கண்டுகளிப்பதில் வீணடிக்கிறான். இப்படி அவன் பார்த்த தொலைக்காட்சியில் 20 இலட்சம் விளம்பரங்கள் வருகின்றன. இதனால்தான் தம் தேவைகளைவிட அதிகமாக பொருட்களை தாங்கள் வாங்குவதாக 82மூ அமெரிக்கர்கள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு வாரமும் சராசரியாக 1680 நிமிடங்கள் ஒரு குழந்தை தொலைக்காட்சியை பார்ப்பதில் செலவழிக்கிறது. ஆனால் தன் பெற்றோருடன் பயனுள்ள விஷயங்களை குறித்துப் பேச 38.5 நிமிடங்கள் மட்டுமே ஒரு குழந்தை பயன்படுத்துகிறது.
ஒரு வயதுக் குழந்தை தொலைக்காட்சி முன் தினமும் 6 மணி நேரத்தைக் கழிக்கிறது. ஆண்டொன்றுக்கு 900 மணி நேரத்தை சிறுவர்கள் பள்ளிக் கூடங்களில் கழிக்கின்றனர். ஆனால் அவர்கள் தொலைக்காட்சியைப் பார்க்க எடுத்துக் கொள்ளும் நேரம் 1023 மணி நேரங்கள். உயர்நிலைப பள்ளியை முடிக்கும் மாணவன் ஒருவன் 19,000 மணி நேரம் தொலைக்காட்சியை பார்த்த அனுபவம் உடையவனாய் அப்பருவத்தை அடைகிறான்.
18 வயதை அடைவதற்குள் ஒரு சிறுவன் தொலைக்காட்சி வழியாக இரண்டு இலட்சம் வன்முறைக் காட்சிகள் பார்த்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 11 வயதை அடைவதற்குள் 8,000 கொலைகளையும் இன்னும் 10,000 வன்முறைகளையும் ஒரு சராசரி குழந்தை பார்த்து விடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் 36,000 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் வன்முறையை தொலைஷக்காட்சியில் பார்ப்பதற்கும், செயலில் இறங்குவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைக்காட்சியை சிறுவர்கள் எவ்வித உணர்வும் இல்லாமல் பார்ப்பதில்லைமாறாக, தாங்கள் பார்க்கும் ஒவ்வொரு காட்சியையும் தமது ஆழ் மனதில் உள்வாங்கிக் கொள்கிறார்கள். இதனடிப்படையில் அவர்கள் செயல்களில் இறங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நிஜத்திற்கும், நிழலுக்கும் இடையே எவ்வித வேறுபாட்டையும் இவர்களால் காணமுடிவதில்லை.இதனால், தொலைக்காட்சி ஏற்படுத்திய பாதிப்புகளால் வாழ்க்கை பயங்கரமானதாகவும் இருள் சூழ்ந்ததாகவும், கவலைக்குரியதாகவும் ஆகிவிடுவதாக பெருவாரியான குழந்தைகள் கருதுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தொலைக்காட்சிப் பெட்டியின் முன் தவம் கிடக்கும் 5 வயதில் இருந்து 8 வயதுக் குழந்தைகளுக்கு இதய நோய்களில் ஏதாவது ஒன்று தாக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 1960 களில் இருந்த தொகையைவிட 1990 களில் மிதமிஞ்சிய உடல் பருமன் கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் உடல் ரீதியாக எவ்வித நடவடிக்கைகளில் ஈடுபடாமலும் தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன் முடங்கிக் கிடப்பதும் தான் காரணம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
பெரியவர்களின் அந்தரங்க நடவடிக்கைகளெல்லாம் சிறுவர்களுக்கு அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் சமூக துரோகியாகவும் தொலைக்காட்சியும் அதன் nநிகழ்ச்சிகளும் விளங்குகின்றன. பெரியவர்கள் சண்டை போட்டுக் கொள்வது,மனமுடைந்து கண்ணீர் விடுதல்,கொலை,பாலியல் உறவுகள் கொள்வது மற்றும் வன்முறைகள் போன்றவற்றை குழந்தைகள் தொலைக்காட்சிகளில் காண்கிறார்கள். பெரியவர்களின் இத்தகு பொறுப்பற்ற மானக்கேடான வாழ்க்கைகளை தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் பார்க்கும் குழந்தைகள் அவர்களை தவறுகளுக்கு முன்னுதாரணமாக்குகிறார்கள். பெரியவர்களின் இத்தகைய அந்தரங்கங்கள் அம்பலம் ஏறுவதால்; குழந்தைகளின் கள்ளம் கபடமற்ற தன்மை கேள்விக்குறிதாகி விடுகின்றது.பசுமரத்து ஆணி போல தொலைக்காட்சியில் சித்தரிக்கப்படும் போலிப்பகட்டு நிகழ்வுகள் வாழ்வியல் நடப்புக்களாக பிஞ்சு நெஞ்சங்களில் பதிவாகின்றன. இதனால் இவர்களின் எதிர்காலம் பாழ்படும் அளவிற்கு நஞ்சு விதைகள் விதைக்கப்படுகின்றன. இந்த அபாயத்தை உணராமல் செயற்கைக் கோள் அலைவரிசைகளின் எண்ணிக்கை பல்கிப் பெருகி மனித வாழ்வின் நிலையை பெரும் அபாயத்திற்கு அழைத்துச் செல்கிறது.ஓய்வையும் ஆரோக்கியத்ததையும் கெடுக்கின்றது.
ஓய்வையும் ஆரோக்கியத்தையும் பாழ்படுத்தும் தொலைக்காட்சி அம்சங்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதில் நாம் அலட்சியமாக இருப்பதை அண்ணலார் (ஸல்) அவர்கள் அன்றே உணர்த்தியிருக்கின்றார்கள்.
இரண்டு அருட்கொடைகள் விஷயத்தில் மக்கள் நஷ்டத்திலேயே இருக்கிறார்கள் அவை ஓய்வு நேரமும், ஆரோக்கியமுமாகும். அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (ஆதாரம் : புகாரி)
ஆனால், இந்த ஊடகத்தை சரியான வழியில் செலுத்தினால் நிச்சயம் சமூகத்தை சரியாகக் கொண்டு செல்ல முடியும்.
துpரைப்படத் துறையில் எவ்வாறு ஈரானிய திரைப்படங்கள் உண்மை யதார்த்தங்களை.., திரைப்படத் துறைக்கே உரித்தான போலிப் பகட்டுக்கள்,சமூகத் தீமைகளின்றிய படங்களைத் தரமுடியும் என்று நிரூபிக்கின்றனவோ.., அதேபோன்று தொடர்களும்,ரியாலிட்டி ஷோக்களும் சமூகத்தில் ஒழுக்க அம்சங்களை முன்னெடுத்து செல்லக்கூடிய வகையில் தரமுடியும்.அதற்காக அவர்கள் தமது வுசுP ரேட்டிங்குகள் எனப்படும் தொலைக் காட்சி பார்வையாளர் தரவரிசைக் கிரமத்ததை இழந்தாலும் சரியே..!