வாழ்க்கை திட்டங்களின் அடிப்படையில் வகுக்கப்பட வேண்டிய ஒரு தொகுப்பு…!

 

மனித வாழ்வு கௌரவனீய வாழ்வு..அது திட்டங்களின் அடிப்படையில் வகுக்கப்படவேண்டிய ஒரு தொகுப்பு..

மனித வாழ்வு கௌரவனீய வாழ்வு..அது திட்டங்களின் அடிப்படையில் வகுக்கப்படவேண்டிய ஒரு தொகுப்பு..

– மு.அ.அப்துல் முஸவ்விர்

லக வாழ் மக்களின் அனைத்துவித நவ நடவடிக்கைகளிற்கும் தீர்மானமான தீர்க்கமான முடிவை அல்குர்ஆன் அழகுற தீட்டி வரைந்துள்ளமை வியக்கத்தக்கது. மனித வாழ்வு கௌரவனீய வாழ்வு..அது திட்டங்களின் அடிப்படையில் வகுக்கப்படவேண்டிய ஒரு தொகுப்பு..!இறைவன் அவன் அந்த தி;ட்ட வரைவை அல்குர்ஆன் வடிவமைப்பில் தீட்டி வரைந்துள்ளான்…அது தாண்டப்படும் போதே அவனது வாழ்க்கையும் தாண்டவம் ஆடத் துவங்கும்.

இறைத்தூதர் லூத் (அலை) அவர்கள் இத்தகைய ஓரினச்சேர்க்கை குற்றம் மலிந்திருந்த சமூகத்தை எச்சரித்து அறிவுரை பகர ஒரு தூதராக அனுப்பப்பட்டார் என இறைமறை திருக் குர்ஆன் கூறுகின்றது.
இறைநிராகரிப்பும், இறைச்சட்டங்களை; பொய்யென்றும் உரைத்துக் கொண்டிருந்த மக்கமாநகர் இறைநிராகரிப்பாளர்களை நோக்கி திருக் குர்ஆன் எச்சரிக்கும் அறப்போதனைகளில், இந்த ஓரினச்சேர்க்கைக்கு ஆட்கொண்டிருந்த லூத் சமூகத்தை எப்படி இறைவன் அழித்தான் என்பதும் ஒன்று!
இங்கு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், மக்கா நிராகரிப்பாளர்கள் தம் வாதத்துக்குக் கூறிக்கொண்டிருந்த நொண்டிச்சாக்குகளும், பொய்க் காரணங்களும் போன்றே, இன்று இறைச்சட்டங்களுக்கு மாற்றமான உரிமை கோரும் இந்த ஓரினச்சேர்க்கையாளர்களும் முன்வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இன்றைய நிலையில்,அதற்கு, நேர்வழி காட்ட வேண்டிய நீதிமன்றம்கூட, அதற்கு ஆதரவாக நர்த்தனம் ஆடிக்கொண்டிருப்பது சோகமான..வேதனையான…விகாரமான வேடிக்கை!
இந்தச் சூழ்நிலை முன்னிட்டு, வரலாற்றின் ஏழு சமூகங்களுடைய நிலைமைகள் எடுத்துரைக்கின்றது திருக் குர்ஆன்! அவற்றில் ஒன்று ஓரினச்சேர்க்கையாளர்களின் நாச முடிவு!மக்கமாநகர இறைநிராகரிப்பாளர்களும், லூத் சமூகத்தாரும் எந்தப் பிடிவாதத்தை மேற்கொண்டு வந்தார்களோ,அதே பிடிவாதத்தை இன்றைய நவீன LGB-க்களும் மேற்கொண்டிருக்கின்றார்கள்.இந்த வரலாற்றை எடுத்துரைப்பதின் ஊடே ஒரு முக்கியமான அம்சத்தை இறைவேதம் விளக்குவதாகக் கூறுகின்றார், புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் மொளலானா அமளதூதி அவர்கள்!
அதாவது. இறைநிராகரிப்பாளர்களின் மனப்பான்மை எல்லாக் காலங்களிலும் ஒரே மாதிரியாகத்தான் இருந்திருக்கின்றது.அவர்களுடைய வாதப் பிரதிவாதங்களும், அவர்களுடைய ஆட்சேபணைகளும் ஒரே மாதிரியாகத்தான் இருந்து வந்திருக்கின்றன.கடைசியாக அவர்கள் அடைந்த கதியும் ஒரே மாதிரியாகத்தான் இருந்திருக்கின்றது.இறைத்தூதர்களின் அறிவுரைகளும் எல்லாக் காலங்களிலும் ஒரே மாதிரியாகத்தான் இருந்திருக்கின்றன. இறைத்தூதர்கள் தம்மை எதிர்ப்பவர்களுக்கு சமர்ப்பித்த ஆதாரங்கள், வாதங்களின் தோரணைகள் ஒரே மாதிரியாகத்தான் இருந்து வந்திருக்கின்றன.இறுதியில் அவர்களிடம் அல்லாஹ்வின் கருணையும், நிராகரித்த அந்த சமூகத்தின் மீதான அவனுடைய கோபமும் ஒரே மாதிரியாகத்தான் இருந்து வந்துள்ளது.

மனித வாழ்வு கௌரவனீய வாழ்வு..அது திட்டங்களின் அடிப்படையில் வகுக்கப்படவேண்டிய ஒரு தொகுப்பு..

மனித வாழ்வு கௌரவனீய வாழ்வு..அது திட்டங்களின் அடிப்படையில் வகுக்கப்படவேண்டிய ஒரு தொகுப்பு..

பொதுவாக ஓரினச்சேர்க்கை என்றவுடன் பெரும்பாலும் அரவாணிகளையே தொடர்புபடுத்துவதுண்டு. இறைவனின் படைப்பில் விநோதமான இவர்களை எந்தப் பாலினத்தில் சேர்ப்பது?
அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் துணைவியார் கூறுகின்றார்: என்னிடத்தில் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) ஒருவர் அமர்ந்திருந்தபோது, முஹம்மத் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள்.அந்த அரவாணியானவர் (என் சகோதரரான) அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவிடம். ‘அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால், நீ கெய்லானியின் மகளை மணந்துகொள்! ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு(சதை மடிப்புகளு)டனும். பின்பக்கம் எட்டு(சதை மடிப்புகளு)டனும் வருவாள்’ என்று சொல்வதை செவியுற்றேன்.(இதனைக் கெட்ட) நபி (ஸல்) அவர்கள்,’இந்த அலிகள் (பெண்களாகிய) உங்களிடம் ஒருபோதும் வர(அனுமதிக்க)க் கூடாது’ என்று கூறினார்கள். ஆதாரம்: புகாரி 4324.
மேலும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் இன்னொரு அறிவிப்பில். முஹம்மத் (ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களையும்,ஆண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் பெண்களையும் சபித்தார்கள். மேலும்.அவர்க(ளில் அரவாணிக)ளை உங்கள் இல்லங்களிலிருந்த வெளியேற்றுங்கள்!’ என்றும் சொன்னார்கள். அவ்வாறே நபியவர்கள் இன்னாரை வெளியேற்றினார்கள்.உமர் (ரலி) அவர்களும் இன்னாரை வெளியேற்றினார்கள். ஆதாரம்: புகாரி.
இந்தப் பெண்கள் தம்மை எப்போதும் பெண்களாகவே அடையாளப்படுத்திக்கொள்ளவே விரும்புகின்றனர். பெண்கள் போன்றே நடை-உடை பாவனைகளை மாற்றிக் கொண்டு, அதன் மூலம் பாலியல் தொழிலி;ல் தங்களை ஐக்கியப்படுத்தி அதன் மூலம் சமூகத்தின் பண்பாட்டுச் சீரழிவுக்கு வழி வகுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது மறுப்பதற்கில்லை!
ஓரினச்சேர்க்கையாளர்களை எடுத்துக் கொண்டால், இவர்கள் வருங்கால சந்ததியினரை அஸ்தமிக்கச் செய்பவர்கள்.ஆணுக்குப் பெண்ணின் தேட்டத்தையும் பெண்ணுக்கு ஆணின் தேட்டத்தையும் எற்படுத்தி அவ்விருவர் திருமணம் எனும் வாழ்க்கை ஒப்பந்தம் மூலம் இணைந்து சந்ததிகளை வளர்த்தெடுக்க வழிவகை செய்திருக்கின்றான் வல்ல இறைவன்! அதன் மூலம் மனித சமூகம் தழைத்தோங்க பாதை அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் ஆணோடு ஆணும், பெண்ணோடு பெண்ணும் இணைவதால் ஏற்படும் விளைவு என்ன?
இந்த ஓரினச்சேர்க்கையாளர்கள் விபச்சாரத்தால் பலவித நோய்களை உண்டாக்குவதோடு ‘திருமணம்’ எனும் கேலிக்கூத்தில் ஈடுபட்டு அதன் மூலம் சந்ததியற்ற மனிதகுலத்திற்கு வகை
செய்கின்றார்கள்.

எனவே, விபச்சார-ஓரினசேர்க்கையாளர்களுக்குத் தண்டனை தரும் சட்டப்பிரிவுகளை ரத்து செய்ய நினைக்கும் போக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது.இறைநியதியை தகர்க்கும் இத்தகைய செயல்களை இந்திய அரசு நினைத்தும் பார்க்;கக்கூடாது.மாறாக, அரவாணிகளை பாலியல்ரீதியான தொழில்முறைகளிலிருந்து மீட்டெடுத்து. கவுரவமான தொழில் செய்பவர்களாக மாற்ற முன்வர வேண்டும்.
இன்னொருபுறம், முஸ்லிம்களில் காணப்படும் இத்தகைய ‘முஸ்லிம் திருநங்கைகள் (இனி இவர்களை இவ்வாறு அழைப்போம்) பற்றிய இஸ்லாமிய (ஷரீஅத்) சட்டம் என்ன விதமான முடிவை மேற்கொள்ளப் போகின்றது என்பது ஒருபுறம் இருக்கட்டும்.இவர்களின் இறைநம்பிக்கை பற்றி நாம் கவலைப்பட்டேயாக வேண்டும்.இந்த முஸ்லிம் திருநங்கைகள் தமக்கு சாதி, மதங்கள் இல்லை என்று சொல்லிக் கொண்டாலும், முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து முஸ்லிமாக வளரந்து பின்னர் ஒரு குறிப்பிட்ட அமைப்புக்குள் வார்க்கப்படுகின்றார்கள். அதனால்தான் இவர்கள் அரவாணிகள் என்று அழைக்கப்பட்டு கூத்தாண்டவர் கோவிலில் தாலி அறுப்பு சடங்குகளில் பங்கு பெறுகின்றார்கள்.
இருள் படர்ந்த புதர்களில், போலி உதட்டுச் சாயங்களுடன், கைகொட்டி கும்மியடித்து வாழ்க்கை நடத்தும் இவர்களை குறைந்தபட்சம் இணைவைப்பு எனும் கொடுமையிலிருந்து காப்பாற்றி, தீமைகளிலிருந்து அவர்களை ஒரினச்சேர்க்கை உள்ளிட்ட தீமைகளிலிருந்து விலக்கியாவது வைக்கலாமே!அதன் மூலம் அவர்களும் சீர் பெறலாம்.. சமூகமும் சீர்பெறக் கூடும்! நாகரிகம்,சமஉரிமை எனும் பெயரில் அரசு இயற்கைக்கும்,இறைநியதிக்கும் மாற்றமான சமூக சீர்கேட்டுக்கு வழிவகுக்குமானால், இறைபிடியிலிருந்த அதனை மட்டுமல்ல முழு சமூகத்தையும் காப்பாற்ற இயலாமற் போய்விடும்!
எனவே, குறைந்தபட்சம் முஸ்லிம் சமூகம், முஸ்லிம் திருநங்கைகளின் மறுகட்டுமான வாழ்வுக்கு என்ன செய்யலாம் என சிந்திக்க வேண்டிய தருணம் இது!

Related Post