அனைவரும் சமமே! :
பள்ளிவாசலை கூட்டி சுத்தம் செய்யக்கூடியவர் எங்கே? என கேட்க, அப்போது தான் அவர் இறந்த விஷயத்தை சொல்கிறார்கள். இதனை ஏன் எனக்கு முன்பே கூறவில்லை என கடிந்துக்கொண்டதோடு அந்த சாதாரண வேலையாளின் அடக்க ஸ்தலத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்தார்கள். இறைத்தூதரின் பணியாளர் அனஸ் (ரலி) அவர்களின் பாட்டி இறைத்தூதரை விருந்துக்கு அழைக்க, மறுப்பு சொல்லாமல் அந்த ஏழை வீட்டு விருந்தை ஏற்றுக்கொண்டார் இந்த வல்லரசின் ஆட்சியாளர்!
புகழுக்கு ஆசைப்படாத மாமனிதர்:
ஒரு நபர் இறைத்தூதரை புகழ்ந்துகொண்டிருக்க, அதை நிறுத்தச்செய்து, “என்னை வரம்பு மீறி புகழாதீர்கள், நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் ஆவேன். மற்றும் அல்லாஹ்வின் அடியானும் , அவனது தூதரும் ஆவேன். அல்லாஹ் தந்த இந்த தகுதிக்கு மேல் என்னை உயர்த்துவதை அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் விரும்ப மாட்டேன் என்றார் அந்த அற்புத மனிதர்!
ஹியாரா எனும் பகுதி மக்கள் தன் தலைவருக்கு சிரம் பணிவதை கண்ட நபிதோழர் நபி (ஸல்) “நாங்கள் சிரம் பணிந்திட அதிக தகுதியுடையவர் நீங்கள் தாம்” என்றார். அதை மறுக்கும் விதமாக “நான் இறந்த பின் என் அடக்கஸ்தலத்தில் சிரம் பணிவீரா?” என திருப்பிக் கேட்டார் இறைத்தூதர் அவர்கள் . அதற்கு அவர் “இல்லை… அவ்வாறு செய்ய மாட்டேன்” என்றார். ஆம்.. அவ்வாறு செய்யக்கூடாது என்றும், தமக்காக தமக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டுமென யார் விரும்புகின்றாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும் என்றும் கூறினார்கள். தான் வாழ்ந்த போதும் கூட அல்லாமல் தான் இறந்த பின்னும் கூட அடுத்தவர் தம்மை சிரம் பணிவதை விரும்பதவராக இருந்தார் இந்த முன்மாதிரி ஆட்சியாளர்.
ஏதேனும் மக்களுக்கு கட்டளையிடும் போது “நபியே நாங்கள் உங்களை போன்று இல்லை (அதாவது நீர் எம்மை விட சிறந்தவர் என கூறக்கூறுவது)” என கூறினால் கடுங்கோபம் கொள்பவர்களாக இருந்தார்கள். தானும் மற்றவர்களை போலவே என்று கூறிவந்தார்!
சலுகை பெறாத உத்தம மனிதர்:
அரசு பணியில் ஜகாத் வசூலிக்கும் பொறுப்பை தனது மகன்களுக்கு கொடுக்க சொல்லி இறைதூதரின் பெரியதந்தை கேட்க இறைதூதரோ அதை மறுத்தார்.
தனது பெரிய தந்தை ஜகாத் பணம் கொடுக்க மறுக்க, ஜகாக்கத்தை வசூலிப்பதோடு அதேயளவு தொகை அபராதமாக வசூலிக்கும்படி உத்தரவிட்டார். தன் உறவினர் என்பதற்காக எவ்வித சலுகையும் அவர் பெறவில்லை!தன் குடும்பத்தாருக்கும் கொடுக்கவில்லை.
நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் பிடித்தமான தோட்டம் இருந்தது. அந்த தோட்டத்தின் உரிமையாளருக்கும் அது பிடித்தமானது. “நீங்கள் விரும்பும் பொருளிலிருந்து செலவு செய்யாதவரை நன்மையை அடைய மாட்டீர்கள்” என்ற திருக்குர் ஆனின் வசனத்தைக் குறிப்பிட்டு, அதை நபியவர்களுக்கே பரிசளிக்க, அதை ஏற்காமல், உமது நெருங்கிய உறவினர்களுக்கே அதை வழங்குங்கள் என்ற நபியவர்கள் தனது சொத்துக்கள் எல்லாவற்றையும் பொதுவுடமையாக்கிவிட்டு இறக்கும் தருவாயில் அடமானம் வைத்த தனது கேடயத்தை மீட்க வசதியில்லாதவராகவே இறந்தார்கள்.
நன்றி:இஸ்லாமிய பெண்மணி
தொடர்புடைய ஆக்கங்கள்: