– ஸினூஃபா அன்ஸார்
ஆம் மரண வாழ்வும் மறுமை வாழ்வும் உலகத்தின் கற்பனை சித்தரிப்புக்களுமல்ல.பிரட்ட பிரட்ட பிரமிக்கச் செய்யும் நாவல் கதையுமல்ல. வாழ்க்கைச் சுருங்கி, மரணப் புள்ளியில் சங்கமித்து, புதைகுழியில் தனிமையில் தள்ளப்பட்டு, இவ்வாறே , சத்திய குர்ஆனும் , சரிந்திடா இறைத்தூதர் இயம்பிச் சென்ற அடையாளங்களினூடாக அனைத்து உயிரினங்களும், ஏனைய பிற படைப்புக்களும் பூண்டோடு அழிக்கப்படும். அதன் பின் ஆரம்பிக்கும் இறைமை மிக்க இறைவனின் வீரியமிக்க விசாரணைகள்….
மறுமையின் இன்னொரு அடையாளமாக இருப்பது, உயிரற்ற பொருட்கள் பேசுகின்ற அதிசய நிலை உருவாகுவது..! அது எப்படி சாத்தியமாகும். இந்த வகையில் அதனை நோக்குவோம்..!
உயிரற்றப்பொருட்கள்பேசுவது
விலங்கினங்கள் மனிதனிடம் பேசாதவரையிலும் தோல்சாட்டையும் செருப்பு வாரும் மனிதனிடம் பேசாத வரையிலும் மறுமைநாள் ஏற்படாது என்பது நபிமொழி! ஆதாரம்: அஹ்மத்
இதனைப் பொறுத்தவரை பறவைகளும்-விலங்கினங்களும் பேசுவதை மனிதனும் அறியக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதை கண்டுபிடிப்புக்கள் உறுதி செய்துள்ளன.
தோல்சாட்டை.செருப்புவார்அகியவற்றைக்கணக்கில்கொண்டால், வார்கள் செய்யப்படும் பிளாஸ்டிக்பொருட்கள் கொண்டதகவல் தொடர்பு சாதனங்கள் இன்றுபெருகிவிட்டன.
இத்தகையசாதனங்கள்விரைவாகஇயங்கக்கூடியவைஎனும்பொருள்படஇந்தநபிமொழிநமக்குமறுமைஅடையாளத்தைமுன்வைக்கின்றது!
1400 வருடங்களுக்கு முன்னர் ஒட்டகங்கள் உள்ளிட்ட பிரயாண வகைகளை விரைந்து செலுத்த சாட்டைகள் பயன்படுத்தப்பட்டன.
இன்றையநவீனகாலத்தில் இவ்வகை சாதனங்கள் மனிதனுடன் பேசக்கூடியவையாகவும், விரைந்து இயங்கக்கூடியவையாகவும் உள்ளது எதுவெனக் கருதுகின்றீர்கள்? நிச்சயமாக செல்லிடைப்பேசிகளும் விண்கோள்கள் மூலம் இயங்கும் தொலை தொடர்பு சாதனங்களும்தான்!
எனவே, மனிதனின் அறிவு முன்னேற்றத்தையும் அறிவியல் வளர்ச்சியையும் இந்த நபிமொழி காட்டினாலும் அதன் மறுஅம்சமாக மறுமை வரக்கூடியதன் அடையாளமாகமுன்வைக்கின்றது.
இவ்வாறாக மறுமையின் இன்னபிற சிறிய அடையாளங்கள் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் சுருக்கமாக சிலவற்றை இங்கே கூறலாம்.
பள்ளிவாசல்கள் பெருமைக்காக அமைவது!
இன்று குறைந்த மக்கள்தொகை கொண்ட இ டங்களிலும் அழகுக்காகவோ, பெருமைக்காகவோ, கோடிக்கணக்கில் செலவழித்து பள்ளிவாசல்கள் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் காண்கின்றோம்.
கொலைகள் அதிகரித்தல்!
ஒரு உயிரைப்பறிக்கும் மாபாதகச் செயலை செய்யதயங்கியது அந்தகாலம்! உப்புப்பெறாத விஷயத்துக்கெல்லாம்கூட கூலிக்கு ஆள்வைத்து கொலை செய்வது முதல் பிடிக்காதநாடுகளில் குணடுமாரி பொழிந்து உயிர்ப்பலிகள் ஏற்படுத்துவது வரை செய்யத்துணிவது இக்காலம்! எவ்வித பேதமுமின்றி இத்தகைய கொலைகள் அனைத்து நாடுகளிலும் பெருகி வருவதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
மறுமை நாளுக்கு முன்பாகக் கொலைகள் மலிந்த ஒரு காலகட்டம் வரும். அப்போது, கல்வி மறைந்து போய் அறியாமை வெளிப்படும்’ என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி)
நியாயமாக ஓர் உயிரைப் பறிக்கும் கொலைபாதகச் செயலை செய்யும் முன் பலமுறை யோசித்தது அந்தக் காலம். இப்போதோ கொலை செய்வதற்கு என கூலிப் படைகள் உண்டு. கையை வெட்ட ஒரு கூலி, காலை எடுக்க ஒரு கூலி, உயிரைப்பறிக்க ஒரு கூலி என ‘பேரம்’ பேசி கொலை செய்யும் கும்பல் அதிகரித்து விட்டது.
தங்களுக்கு பிடிக்காத நாடுகளில் உயிர் பலிகள் சர்வ சாதாரணமாக நடைபெற, பெரிய நாடுகள் ஏற்பாடு செய்கின்றன. இதனால் குண்டு வெடிப்பும், அணுச்சோதனையும், ரசாயன ஆயுதப் புரட்சியும் மனிதர்களின் அன்றாட நடவடிக்கைகளாக மாறி விட்டன. இதுவும் மறுமைநாள் நெருங்கி விட்டது என்பதற்கு அத்தாட்சிகளாக உள்ளன.
(நூல் – புகாரீ 7066).
—தொடரும் இறை நாடின்!