-ஸினூஃபா அன்ஸார்
ஆம் மரண வாழ்வும் மறுமை வாழ்வும் உலகத்தின் கற்பனை சித்தரிப்புக்களுமல்ல.பிரட்ட பிரட்ட பிரமிக்கச் செய்யும் நாவல் கதையுமல்ல. வாழ்க்கைச் சுருங்கி, மரணப் புள்ளியில் சங்கமித்து, புதைகுழியில் தனிமையில் தள்ளப்பட்டு, இவ்வாறே , சத்திய குர்ஆனும் , சரிந்திடா இறைத்தூதர் இயம்பிச் சென்ற அடையாளங்களினூடாக அனைத்து உயிரினங்களும், ஏனைய பிற படைப்புக்களும் பூண்டோடு அழிக்கப்படும். அதன் பின் ஆரம்பிக்கும் இறைமை மிக்க இறைவனின் வீரியமிக்க விசாரனைகள்….
….முதலில்,
1.பூகம்பங்கள் அதிகரித்தல்
இயற்கை சீற்றங்களில் பூகம்பங்களும்-நிலநடுக்கங்களும் மக்களைப் பாதித்த அளவுக்கு வேறு எதுவும் பாதிக்கவில்லை என்பது வரலாறு நமக்கு உணத்தும் உண்மை. எங்கும்,எப்போதும்,எப்படியும் உருவாகும் என்பதே அவற்றின் அதிர்ச்சிகரமான தாக்கம்!
காலங்காலமாக, அவை எண்ணிலடங்கா உயிரிழப்புக்களையும்,அளவிட முடியாத பெரும் சேதங்களையும் ஏற்படுத்துகின்றன. நவீன நுற்றாண்டுகளில்கூட, இந்த பூகம்பங்களின் தாக்கத்தை தசம அளவுகளில் குறைக்க முடிந்ததே தவிர அவற்றைத் தடுக்கவோ,பாதிப்பிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவோ தேவையான எதுவொன்றையும் கண்டுபிடிக்க இயலவில்லை.
உதாரணத்துக்கு 20 வினாடிகளுக்கிடையில் அது ஏற்படுத்தக்கூடிய இழப்பின் அளவு 100 பில்லியன் டாலர்கள் என்பது அமெரிக்க வுiஅநள இதழின் கணிப்பு!அமெரிக்க தேசிய பூகம்ப தகவல் மையம் யுNநுஐஊ 1999-இன் கணக்கீட்டுப்படி இதுவரை 20,832 பூகம்ப நிகழ்வுகள் சிறிதும் பெரிதுமாக நடந்தேறியுள்ளதாக தெரிய வருகின்றது.
முஹம்மத் (ஸல்) அவர்களின் வருகைக்கு சற்றேறக்குறைய 1000 ஆண்டுகள் முன்பிருந்து பூகம்ப பதிவுகள் கிடைக்கின்றன. என்ஸைக்ளோபீடியா –தகவல் களஞ்சியங்களின் அடிப்படையிலும்,விக்கிபீடியா தகவல் வலைகணவூல –றுநடி ளுவயவளைவiஉள ஆதாரங்களின் அடிப்படையிலும், உலகின் முதல் பூகம்ப பதிவு கி.மு. 464-இல் கிரேக்க நாட்டில் ஸ்பார்டா-வில் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. பூகம்பத்தின் வலிமையை அளவிடப் பயன்படும் பூகம்பமானியில் 7.2 ரெக்டார் அளவு பதிவு செய்யப்பட்ட அந்த பூகம்பம் குறித்த அறிவு மக்களிடையே இல்லாதிருந்தது. இதனால் ஏற்பட்ட இழப்புக்கள் பின்னர் பெலோபொனெஷன் போர்களுக்கு இட்டுச் சென்றதாக வரலாறு கூறுகின்றது.
இந்த பூகம்ப ஆரம்பத்திலிருந்து முஹம்மத் (ஸல்) அவர்களது மரணம் வரை நடைபெற்ற பதிவு செய்யப்பட்ட பூகம்ப நிகழ்வுகள் 5 மட்டுமே. அதாவது, 1035 ஆண்டுகளில் நிகழ்ந்த பூகம்பங்கள்5 மட்டுமே. ஆனால், அண்ணலார் (ஸல்) அவர்களின் மரணத்துக்குப் பின்னர்ஆரம்பித்து இன்றுவரை மார் 21,2010 வரை நிகழந்த பூகம்ப நிகழ்வுகள் 458 என பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதாவது. 1380 அண்டுகளில் இந்த எண்ணிக்ககை.
இன்னும் விளக்கமாகக் கூறவேண்டுமெனில், 1000 ஆண்டுகளுக்கு 331 பூகம்பங்கள். அடுத்த 380 ஆண்டுகளில் 127 பூகம்பங்கள். இந்த எண்ணிக்கை வீதத்தில் கணக்கிட்டால். அடுத்த 1000 ஆண்டுகள் பூரணமாகும்போது. பூகம்ப எண்ணிக்கை ஏறக்குறைய 425 எண்ணிக்கையைத் தொட்டுவிடும். அதாவது முந்தைய 1000 ஆண்டுகளில் ஏற்பட்டதைவிட அதிகம்.
எனவே,பூகம்ப அதிகரிப்புக்களின் வேக வீதத்தைக் கணக்கிட்டால்,உலகியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மறுமைக்கு முந்தைய அதிவேக சிறு அடையாளங்களில் முதன்மையாக அதனைக் கூறமுடியும்.
அன்று, முஹம்மத் (ஸல்) அவர்கள்,தான் தூதராக அனுப்பப்பட்ட காலத்துக்கும், மறுமைக்கும் இடைப்பட்ட காலதூரத்தை இரு விரல்களுக்கிடைப்பட்ட அளவாக குறிப்பாக அடையாளப்படுத்திக் காட்டிய சூட்சுமத்தையும். இன்று பூகம்ப நிகழ்வுகள் அதிவிரைவு வீதத்தையும் கணக்கில் கொண்டால்,மறுமை அண்மித்திருக்கும் உண்மையை அளவிட முடியும்.
தற்போது, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் பூகம்பங்கள் எந்த அளவுக்கு சாதாரணமாகிவிட்டன என்றால், மக்கள் அதிலிருந்து தம்மை சிறிதேனும் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு நடமாடும் இல்லங்களை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவிட்டனர்.(உலகில்) பூகம்பங்கள் சாதாரணமாக நிகழக்கூடியவைகளாக கருதப்படும் அளவுக்கு அதிகரித்துவிட்டது, நியாயத் தீர்ப்பு நாள் நிலைநாட்டப்பட வேண்டிய நாள் வெகுதொலைவில் இல்லை என்பது தெளிவாக்கிவிட்டது.
2. நெருக்கமான கடைவீதிகளும், கட்டடங்கள் கட்டுவதில் போட்டியும்!
கடை வீதி(-சூக்குக)கள் பெருகி அருகருகே அமைவதும்-நியாயத் தீர்ப்பு நாளின் சிறிய அடையாளமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆதாரம் அஹ்மத்: 10306
எந்த அளவுக்கு பூகம்பங்கள் அதிகரிப்பது மின்னல் வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனவோ, அதற்கு சற்றும் சளைக்காமல், கடைவீதிகள் நெருக்கமாக உருவாகுவதும், விண்ணைத் தொடும் கட்டடங்கள் போட்டி போட்டுக்கொண்டு எழுப்பப்படுவதும் நடப்பதை அனுதினமும் காண முடிகின்றது.
மக்கமாநகரின் சிறப்புக்களில் ஒன்று, அது அரபுதேசம் முழுமைக்கும் உரிய ஒரே பிரசித்தி பெற்ற சந்தையாக., மக்கள் கூடும் இடமாக இருந்ததும் அடங்கும்.இதுபோன்று குறிப்பிட்ட நாட்களில் கூடும் சந்தைகளில் மட்டுமே மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையானவற்றை வாங்க வேண்டிய நிர்ப்பந்த நிலை!
ஆனால், இன்று.. ஒரு தொலைபேசி அழைப்பு போதும் வீட்டுக்கே வந்து பொருட்கள் தருகின்றார்கள்.திரும்பிய பக்கமெல்லாம், சிறு பெட்டிக்கடைகள் முதல் பெரிய பெரிய கடை வீதிகள் நெருக்கமாக!உதாரணத்துக்கு குவைத்தில் நீங்கள் வசிக்கும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு வாகனத்தில் சென்றால், வழி நெடுகிலும் ஏராளமான கடைவீதிகளைக் காண முடியும். எண்ணெய்ப்பணம் தந்த செழிப்பால் இந்த நிலை என எண்ணிவிட வேண்டாம்.
இந்தியா,இலங்கை போன்ற செல்வம் கொழிக்காத நாடுகளிலும் இதேநிலைதான்.ஆடம்பரமும், ஷாப்பிங் எனப்படும் கடைவீதி விஜயங்களும் அங்கும்கூட சர்வசாதாரணமாகிவிட்டன.
இன்றைய மக்காவும் பெரும் கடைவீதிகளைப் பெற்றிருக்கின்றது. வானளாவ உயர்ந்த கட்டடங்கள் நிற்கின்றன.இந்த நிலை குறித்து சிந்தித்தும் பார்;க்க முடியாத அந்த காலகட்டத்தில் முஹம்மத் (ஸல்) அவர்களின் இந்த முன்னறிவிப்பு மறுமை நெருங்கிவிட்டதன் அடையாளமின்றி வேறென்ன?
அதேபோன்று, கட்டடங்கள் மற்றும் பொறியியற் துறையின் பல்வேறு பிரிவுகளையும் எடுத்துக் கொண்டால், பல்லடக்கு கட்டடங்களும். வணிக வளாகங்களும் அதிகரித்திரப்பது 19-ஆம் நூற்றாண்டின் அரம்பங்களில்தான்!தொழில்நுட்பரீதியான வளர்ச்சி,எஃ கு உலோக பயன்பாடு, நுடநஎயவழசள எனப்படும் லிஃப்டுகளின் உபயோகம் ஆகியன அதிகரித்துவிட்டன.இவ்விஷயங்கள் தனிமனிதனிலிருந்த ஆரம்பித்து, ஒரு நாட்டின் கவுரவம் சார்ந்த அம்சமாக உருவெடுத்திருக்கின்றது.
அண்மையில் துபை-இல் கட்டப்பட்டிருக்கும் புரூஜ் கலிஃபா உள்ளிட்ட இன்னபிற நாட்டில் அமைந்த உயர் கட்டடங்களும் நாடுகளுக்கிடையே கட்டடப் போட்டி அல்லாமல் வேறென்ன?
மக்களிடம் செல்வம் பெருகுவதும் இன்னொரு அடையாளமாக இருக்கும்பட்சத்தில்,அதனை செலவழிக்க ஒருவன் வழி காண முயல்வது இயற்கையே! அதன் விளைவு, தனிமனிதன் வீடு கட்டுவதிலும் நாடுகள் கட்டடங்கள் கட்டுவதிலும் போட்டி போடுகின்றார்கள்.
உலகின் மிகப்பெரும் பணக்காரரான பில்கேட்ஸ் ஒரு முறை, தான் கட்டிய வீடு தன் துணைவிக்கு ஏதோ ஒரு விதத்தில் குறைவாகத் தென்பட, பில்லியன் டாலர்கள் செவழித்த அந்த இல்லத்ததை நொடியில் தரைமட்டமாக்கி. மீண்டும் துணைவி விருப்பம்போல் கட்டி முடித்தாராம்.
இந்திய திரைப்பட நட்சத்திரமும்,தான் ஒரு முஸ்லிம் என்பதை சமீப காலமாக சிரமப்பட்டு முஸ்லிம்களுக்கு உணர்த்த முயலும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான், மும்பை கடற்கரையோரத்தில் தான் கட்டிய வீட்டிலிருந்து எப்புறத்திலிருந்து பார்த்தாலும் கடல் தெரியும் விதத்தில் கண்ணாடி அமைத்துக் கட்டினாராம். இந்த வீட்டுக்கு அவர் செலவழித்த தொகை 350 கோடி இந்திய ரூபாய்கள். மறுமை நாளின் ஒரு சிறிய அடையாளத்துக்கு ஆட்படும் விதத்தில் தாமும் ஒரு பங்குதாரராக இருக்கின்றோம் எனும் அவலம் ஷாருக் கானுக்கு தெரியுமோ.., தெரியாதோ..!
எனவே, போட்டி போட்டுக் கொண்டு கட்டடங்களை அழகாக அமைக்க முயல்வதும்,விண்முட்டும் வியக்கத்தக்க விரிந்த மாளிகைகளை கட்ட முனைவதும் இன்று நாம் காணும் காட்சிகள். மறுமை வருவதற்கான அறிகுறிகள்!