பொய்..!-ஒரு மறைமுகத் தீமை..!!

liar1

பொய்..!-ஒரு மறைமுகத் தீமை..!!

பொய் மனித இனத்தால் மிக மிகச் சாதாரணமாக செய்யப்படும் தீமை.பொய் சொல்வது வாழ்க்கையில் இன்றியமையாதது என்ற அளவிற்கு பொய் மனித குலத்தால் கடைபிடிக்கப்படுகின்றது. இஸ்லாமும் மற்றைய எல்லா மதங்களும் பொய்ப் பேசுவது தவறு என்று அறிவுரை வழங்கிய போதும் பேசப்பழகிய குழந்தைகள் முதல் இறப்பின் விளிம்பில் இருக்கும் வயோதிகர் வரை பொய் பேசுகிறார்கள். வாய்மை பேசுபவரைக் கண்டால் இவருக்கு என்ன பெரிய அரிச்சந்திரன் என்ற நினைப்போ என்று ஏளனம் செய்யும் அளவிற்கு மனித சமூகம் சென்றுவிட்டது. இந்த தீமைக்கு இஸ்லாத்தை கொள்கையாகக் கொண்ட முஸ்லிம்களும் விதி விலக்கல்ல. இஸ்லாம் பொய் பேசுபவர்களுக்கு செய்யும் எச்சரிக்கையும் உண்மை பேசுவதற்கு மனித குலத்திற்கு செய்யும் அறிவுரையும் கீழே காண்போம்:

நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் இன்னும் நீங்கள் உண்மை பேசக் கூடியவர்களாக ஆகிவிடுங்கள்.(அல்குர்ஆன் 9:119)
அன்றைய தினம் பொய்யர்களுக்கு கேடுதான்(52:11)
நீங்கள் உண்மையைக் கடைபிடியுங்கள் ஏனெனில் உண்மையானது நன்மையின் பக்கம் இட்டுச் செல்கிறது. நன்மையோ சுவர்க்கத்தின்பால் இட்டுச் செல்லக் கூடியதாயிருக்கிறது. ஒருவர் உண்மை பேசிக்கொண்டும், உண்மைக்காகப் பெரும் முயற்சி செய்துகொண்டும் இருப்பார். அதன்பயனாக அல்லாஹ்விடம் சித்;தீக்-சிறந்த வாய்மையாளர் என்று பதிவு செய்யப்பட்டுவிடுகிறார். மேலும் உங்களுக்கு பொய்யை எச்சரிக்கிறேன். ஏனெனில் பொய்யானது பாவத்தின் பக்கம் இட்டுச் செல்கிறது: பாவமோ நரகத்தின் பக்கம் இட்டுச் செல்லக்கூடியதாயிருக்கிறது. ஒருவன் பொய் பேசிக்கொண்டும் அதற்காக பிரயத்தனை செய்து கொண்டுமிருந்து

இறுதியாக அல்லாஹ்விடம் பொய்யன் என்பதாக பதிவு செய்யப்பட்டு விடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு மஸ்வூத்(ரழி) புகாரி,முஸ்லிம்)

பொய் பேசுவது நயவஞ்சகனின் குணம்:

யாரிடம் நான்கு குணங்கள் உள்ளதோ அவன் ஒரு முழு நயவஞ்சகன் அவைகளாவன: கொடுத்த வாக்குறுதியை மீறுவான்: அமானிதத்தை மோசம் செய்வான்: பேசினால் பொய்யே பேசுவான்: சண்டையிடும் போது இழிமொழியில் வசைமாரி பொழிவான் என்று நப p(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.அப்துல்லாஹ் பின் அம்ரு(ரழி)புகாரி,முஸ்லிம்)
மூவர் சொர்க்கத்திற்குள் நுழைய மாட்டார்கள்:
மூவரிடம் கியாமத் நாளையில் அல்லாஹ் பேசமாட்டான் அவர்களின் பக்கம் கிருபையோடு பார்க்கவும் மாட்டான். அவர்களை பரிசுத்தப் படுத்தவும் மாட்டான். மேலும் அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையுமுண்டு என்று முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூதர்(ரலி) அவர்கள் (அப்படியாயின்) நாசமடைந்து மோசம் போய் விடுவார்கள் என்று கூறிவிட்டு,அல்லா‹வின் தூதரே! அவர்கள் யாவர்? என்று கேட்டார்கள். 1.இடுப்பில் அணியும் வேஷ்டி, கால்சட்டை முதலியவற்றை பெருமை என்ற அடிப்படையில் கரண்டை மொழிக்கும் கீழ் பூமியில் இழுபடும் வகையில் அணிந்து கொண்டிருப்பவர். 2, தாம் கொடுத்த தானத்தைப் பிறரிடம்சொல்லிக் காட்டுவர், 3, பொய் சத்தியம் செய்து தமது வியாபாரப் பொருள்களை விநியோகிப்பவர் என்று கூறினார்கள். (அபூதர்(ரலி), முŠலிம்)
ஆக முஸ்லிம் சமுதாயம் வாய்மைமிக்க சமுதாயமாக விளங்க வேண்டும் என்று அல்லா‹வாலும் அவன் அனுப்பிய தூதர் முஹம்மத் நபி  (ஸல்) அவர்களாலும் விரும்பப்படுகின்றது. ஆனால் இன்று வாய்மை எல்லா துறைகளிலும் புறக்கணிக்கப்படுகின்றது. அது வியாபாரம், அலுவலகம்,ஆட்சி அதிகாரத்திலும் மட்டுமல்லாமல் மார்க்கத்துறையிலும் புறக்கணிக்கப்படுகின்றது.

இறைவன் பெயரால் பொய்:
(யூதர்கள்) மனிதர்களில் சிலர் அற்பக் கிரயத்தைப் பெருவதற்காக வேண்டி தங்கள் கரங்களால் நூலை எழுதி வைத்துக்கொண்டு பின்னர் இது அல்லாஹ்விடமிருந்து வந்ததுதான் (2:79) என்று இறைவன் பெயரால் பொய் கூறுகிறார்கள். (கிறிஸ்தவர்கள்) மர்யமுடைய மகனாகிய மஸீதான் அல்லாஹ் என்று கூறுபவர்களும் நிராகரிப்பவர்களாகி விட்டார்கள்.(5:72)

நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்களும் காபிர்களே(5:73)

இஸ்லாத்தின் பெயரால் பொய்:

இறைமறைப் பற்றி பொய் சொல்வது குர்ஆனில் இல்லாத கருத்துக்கள் இருப்பதாக சொல்வது, (சமாதிச் சடங்கு சூஃபியி…ம், தக்லீது), இறை வசனத்தை மறைத்துக் கூறுவது திரித்துக் கூறுவது ஆயத்தைப் புரட்டுவது குழப்புவது உள் அர்த்தம் வெளி அர்த்தம் என்று சொல்வது ஹலாலை ஹராமாக்குவது ஹராமை ஹலாலாக்குவது, அல்லா‹ அறிந்ததை தாங்களும் அறிந்தவர்கள் அறிஞர்கள் என்றெல்லாம் தன் வாயில் வந்ததை மறுமையைப் பற்றிய அச்சமின்றி நாகூசாமல் பொய் சொல்வது. குழப்பம் உள்ளது ஆகவே இமாம்களை ஆலிம்களைத் தான் மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்று பொய் சொல்வது.
நபிமொழி விற்பன்னர்கள்) அன்றே தரம் பிரித்து சொல்லிவிட்டார்கள். இது ஆதரப்பூர்வமானது-இட்டுக்கட்டப்பட்டது மவ்ழுவு, இது பலகீனமானது லயீஃப் என்று ஆக பின்பற்றத்தக்கது மற்றவை ஆதாரமற்றவை பின்பற்றக்கூடாது. இப்படி தெளிவாக இருந்தும் இட்டுக்கட்டப்பட்ட பலஹீனமானவைகளை அறிந்து கொண்டே மக்களிடம் ஹதீஸ் என்று சொன்னால் அதுவும் பொய்தான்.
அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாகி வைக்கக்கூடிய இணையாளர்களும் அவர்களுக்கு இருக்கின்றனரா? மேலும் (மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்க கூலி கொடுக்கப்படும் எனும் இறைவனின்) வார்த்தை இல்லாதிருப்பின் (இதுவரை) அவர்களுக்கிடயில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு (அல்குர்ஆன்)
எவன் என்மீது அறிந்து கொண்டே பொய் சொல்கிறானோ அவன் இருக்குமிடம் நரகமாகட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரலி) முஸ்லிம்)

Related Post