பெரும்பாவங்கள் மனிதனுக்குக் கேடுகள்..!

பாவங்கள் என்பது அனைத்து மதங்களிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட தீமையான செயல்கள்.அதற்கு தண்டனை உண்மு என்பதை ஒப்புக்கொள்கின்றன.

பாவங்கள் என்பது அனைத்து மதங்களிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட தீமையான செயல்கள்.அதற்கு தண்டனை உண்மு என்பதை ஒப்புக்கொள்கின்றன.

– அப்துல் ஹக்கீம்

பாவங்கள் என்பது அனைத்து மதங்களிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட தீமையான செயல்கள்.அதற்கு தண்டனை உண்மு என்பதை ஒப்புக்கொள்கின்றன. ஆனால், எவை பாவம் என்று உலகம் கருதுகின்றதோ அவற்றைப் படைத்தவனின் சட்டம் கொண்ட நிர்ணயிக்காமல், தத்தமது வசதிக்கேற்றப பட்டியலிட்டுக் கொள்கின்றார்கள். காரணம் அச்செயல்களும் அதற்கான வரையும் சுயம் அவர்களாலேயே நிர்ணயிக்கப்பட்டுவிடுகின்றன. எனவே, மனிதகுலத்தைப் படைத்தவனின் ஆணைக்கேற்றப இந்த வாழ்வில் பாவங்களைப் பட்டியலிட்டு தவிர்த்தால் உன்னத வெற்றியை அடைய முடியும். அத்தகைய பாவங்களில் பெரும்பாவங்களாக இருப்பவை எவை..?பெரும்பாவங்கள் 7
1. அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்
2. சூனியம் செய்தல்
3. இறைவன் தடுத்த ஓர்உயிரை அநியாயமாக கொலை செய்தல்
4. அநாதைகளின் சொத்துக்களை விழுங்குவது
5. வட்டிப்பொருளை உண்ணுதல்
6. போரில் பறமுதகிட்டு ஓடுவது
7. விசுவாசியான கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவது.
(அறிவிப்பவர். அபூ {ஹரைரா ரளியல்லா{ஹ அன்{ஹ நூல்கள் புகாரி. முஸ்லிம்)
பாவங்கள் என்றால் என்ன? என்பதைப் புரியாமலே நம்மில் பலர் அதைச்செய்து குற்றவாளியாகின்றனர். எனவே பாவம் என்றால் என்ன என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.
பெருமானார் ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்களிடம் நன்மையைப்பற்றியும் தீமையைப்பற்றியும் வினவினேன். அதற்கவர்கள் ‘நல்லொழுக்கமே நன்மையெனப்படும்.பாவம் என்பது அதைச்செய்யும் போது உன் உள்மனம் உன்னை எச்செரிப்பதும், அதைப்பிறரிடம் வெளியிடும் போது நீ வெறுப்பதுமாகும்.’ என விளக்கமளித்தார்கள். (அறிவிப்பவர்: நவ்வாஸிற பின் ஸம்ஆன், நூல் முஸ்லிம்)
இதுமட்டுமல்லாமல் இஸ்லாம் தடுத்துள்ள அறிவுக்குப் பொருந்தாத, அறிவை மழுங்கச்செய்யும் மூடநம்பிக்கைகள்,சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்றவற்றையும் பாவம் என்றே இஸ்லாம் கூறுகிறது.
மதத்தின் பெயரால் எல்லா மதங்களிலும் மலிந்துள்ளதைப் போல் இஸ்லாத்திலும் மூடநம்பிக்கைகளைக காணமுடிகிறதே என்ற ஐயம் நம்மில் பலருக்கு எழலாம்.அவை யாவும் அந்நிய மதங்களிலிருந்து நம்மதத்தில் இறககுமதியானவையாகும். எனவே இஸ்லாத்தில் ஊடுருவியுள்ள சிறு பாவங்களையும் நம்மை அழிக்கும் பெரும் பாவங்களையும் விட்டு தவிர்ந்து கொள்வது நம்மனைவர் மீதும் தலையாய கடமையாகும். இப்போது தண்டனைக்குரிய பெரும் பாவங்களைப் பற்றித் தெரிந்து கொளவோம்.
பெரும் பாவம் என்றால் என்ன?
பெரும் பாவம் என்பது அல்லாஹ்வினாலும், அவன் திருத்தூதர் ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்களாலும் விலக்கப்பட்வைகளைக் குறிக்கும்.இவற்றைச் செய்வதால் இறைவனின் கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளாக நேரழடும்.
பெரும் பாவங்களைத்தவிர்த்து ஏனைய சிறு பாவங்களை மன்னிப்பதாக பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்:-
إِن تَجْتَنِبُواْ كَبَآئِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنكُمْ سَيِّئَاتِكُمْ وَنُدْخِلْكُم مُّدْخَلاً كَرِيماً
உங்களுக்கு விலக்கப்பட்ட பெரும் பாவங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொண்டால் உங்களுடைய சிறு பாவங்களுக்கு(அதனை)நாம் பரிகாரமாக்கி உங்களை (மன்னித்து மிக்க) கண்ணியத்தின் வாயிலிலும் புகுத்துவோம். (அல்குர்ஆன் 4:31)
என்ற மறைவசனத்தின் வாயிலாக பெரும் பாவங்களைத் தவிர்த்து தங்களை பாதுகாத்துக் கொண்டவர்களை சுவர்கத்தில் புகுத்துவதாக அறிவிக்கிறான வல்ல நாயன். மேலும்,
وَالَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ وَإِذَا مَا غَضِبُوا هُمْ يَغْفِرُونَ
(அல்லாஹ்வை நம்பிய) அவர்கள் பெரும் பாவங்களையும், மானக்கேடானவைகளையும் விட்டு விலகி இருப்பதுடன் தங்களுக்கு கோபமூட்டப்பட்ட சந்தர்பத்திலும் (கோபமூட்டியவரை) மன்னித்து விடுவார்கள் அல்குர்ஆன் 42:37), எனவும்
الَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ إِلَّا اللَّمَمَ إِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ
(நன்மை செய்யும்) அவர்கள் (அறியாமல் நேர்ந்துவிடும்) சிறு தவறுகளைத்தவிர ஏனைய பெரும்பாவங்களிலிருந்து விலகி இருப்பார்கள். நிச்சயமாக உமது இரட்சகன் மன்னிப்பதில் மிக்க தாராளமானவன். (அல்குர்ஆன் 53:32) எனவும் கூறியுள்ளான்.
‘ஐந்து நேரத் தொழுகைகளும். ஒவ்வொரு ஜும்ஆவும். ஒவ்வொரு ரமளானும். ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு இடைப்பட்ட காலங்களில் செய்யக்கூடிய சிறுதவறுகளுக்கு பரிகாரமாகும். (ஆனால்) இடைப்பட்ட காலங்களில் பெரும்பாவங்களில் ஈடுபடாத வரை! என நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம். திர்மிதி. அஹ்மத்)
இதன் மூலம் பெரும் பாவங்களை செய்யாதவனுக்கு ம்ட்டுமே இச்சலுகை வழங்கப்படும் என்பதை பெருமானார் ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கியுள்ளார்கள்.
மனிதனிடம் காணப்படும் பாவச்செயல்களில் ஏழு பாவங்களை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. அவற்றில் ஒன்றைச் செய்தாலும் அது அவனை அழித்துவிடும்.

Related Post