பகலவனின் பலதார மணம் பாவையர்க்குப் பாதகமா? -2

-ரோஷன்

முஹம்மத் (ஸல்) அவர்களின் பலதார மணவாழ்வு சமூதாயத்தை சரியச் செய்யக்கூடியதொன்றல்ல. மாறாக சமூதாய கட்டமபைப்பை அழகிய ஆளுமையினால் கட்டியெழுப்பச் செய்தது...!

முஹம்மத் (ஸல்) அவர்களின் பலதார மணவாழ்வு சமூதாயத்தை சரியச் செய்யக்கூடியதொன்றல்ல. மாறாக சமூதாய கட்டமபைப்பை அழகிய ஆளுமையினால் கட்டியெழுப்பச் செய்தது…!

முஹம்மத் (ஸல்) அவர்களின் பலதார மணவாழ்வு சமூதாயத்தை சரியச் செய்யக்கூடியதொன்றல்ல. மாறாக சமூதாய கட்டமபைப்பை அழகிய ஆளுமையினால் கட்டியெழுப்பச் செய்தது…இதன் ஆழ அறிவைஒருவன் தேடும் போது கண்டு கொள்வான் யதார்த்த நிலையை..!

அறிவியற் காரணிகள்.

நபியவர்களது பலதார மணவாழ்விற்கான முக்கிய ஒரு காரணமாக இதை அடையாளப்படுத்தலாம்.இஸ்லாம் ஆண்,பெண் இருபாலாரிற்கும் அருளப்பட்ட ஒரு வாழ்க்கை நெறியாகும்.இஸ்லாமிய ஷரீஅத், ஆண்களுக்கான சட்டதிட்டங்கள், கடமைகள் பற்றி விளக்கிக் காட்டியதோடு பெண்களுக்கும் அவர்களுக்கான பிரத்தியேகமான சட்டங்களை,கடமைகளைப் போதிக்க வேண்டிய அவசியமிருந்தது.இதனால் பெண்கள் சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்களை அவர்களுடைய அன்றாட வாழ்வோடு தொடர்புடைய அம்சங்களைப்; போதிப்பதற்கு ஒரு குழு தேவைப்பட்டது.இச் செயலை ஒழுங்குற நிறைவேற்றுவதற்கான குழு பெண்களாக இருப்பதோடு அவர்கள் (ஸல்) அவர்களின் வாழ்க்கை பற்றி ஆழ்ந்த அறிவும், தெளிவும்  பெற்றவர்களாக இருக்க வேண்டியிருந்தது.இதனால் இக்கடமை அவர்களது மனைவியர்கள் மீது சுமத்தப்பட்டது.

பிரசவப்பேறு,மாதாந்த ருதுவிலக்கு,திருமணம் மற்றும் மார்க்கத்தோடு தொடர்புடைய வேறு விஷயங்கள், நடைமுறை வாழ்வில் அவர்களுக்கு எழும் சிக்கல்கள்  ஆகியன தொடர்பாக நேரடியாக நபிகளாரிடம் கேட்டறிய அதிக பெண்கள் வெட்கப்பட்டனர்.அதனால் இச்சிக்கல்களை நபிகளாரின் மனைவியர் ஊடாக அவருக்கு முன்வைத்து அவை தொடர்பான இஸ்லாத்தின் தீர்வினைப் பெறுவதற்கு அதிக பெண்கள் பழக்கப்பட்டிருந்தனர்.

மேலும் முஹம்மத் (ஸல்) அவர்களுடனான பொதுப்படையான வாழ்வில் அவருடன் கலந்திருந்து அனைத்தiயும் தம்முடன் நிலைநிறுத்திக் கொண்ட, அவருடைய தோழர்கள், அண்ணலார் (ஸல்) அவர்களுடைய குடும்ப வாழ்வில் நடைபெறும் விஷயங்கள் குறித்து படிப்பினைகள் பெறும் வகையில் அவற்றை அறிய சந்தர்ப்பம் வாய்ப்பது இயலாத ஒன்று!இதனால் அவற்றைக் கவனித்து மனதில் இருத்தி; அதுபற்றி பிறருக்கும் அறிவூட்டுவது மனைவியருக்கு ஒப்படைக்கப்பட்ட கடமையாக இருந்தது.அதிலும் அண்ணலாருடைய தனிப்பட்ட வாழ்வின் அனைத்து அம்சங்களையும் அறிந்து நினைவில் நிறுத்துவத என்பது ஒரு பெண்ணால் மட்டுமே இயலுமான ஒன்றல்ல!முஹம்மத் (ஸல்) அறிவுறுத்திய குடும்ப வாழ்வு பற்றிய அறிவுரைகள் இன்று வரைக்கும் மங்காது நிலைத்திருக்கின்றமைக்கு அவரது துனைவியரின் பங்களிப்பு அபரிமிதமானதாகும்.

Related Post