பகலவனின் பலதார மணம் பாவையர்க்குப் பாதகமா?

-ரோஷன்

முஹம்மத் (ஸல்) அவர்களின் பலதார மணவாழ்வு சமூதாயத்தை சரியச் செய்யக்கூடியதொன்றல்ல. மாறாக சமூதாய கட்டமபைப்பை அழகிய ஆளுமையினால் கட்டியெழுப்பச் செய்தது...!

முஹம்மத் (ஸல்) அவர்களின் பலதார மணவாழ்வு சமூதாயத்தை சரியச் செய்யக்கூடியதொன்றல்ல. மாறாக சமூதாய கட்டமபைப்பை அழகிய ஆளுமையினால் கட்டியெழுப்பச் செய்தது…!

 

முஹம்மத் (ஸல்) அவர்களின் பலதார மணவாழ்வு சமூதாயத்தை சரியச் செய்யக்கூடியதொன்றல்ல. மாறாக சமூதாய கட்டமபைப்பை அழகிய ஆளுமையினால் கட்டியெழுப்பச் செய்தது…!இதன் ஆழ அறிவைஒருவன் தேடும் போது கண்டு கொள்வான் யதார்த்த நிலையை..!

நாகரிக வாசனையே இன்றி அறியாமை எனும் காரிருளில் மூழ்கியிருந்த அரேபியர்களை  முஹம்மத்(ஸல்) அவர்கள் கருணைமிக்க தந்தையாக,பாசமுள்ள கணவராக, குடும்பத் தலைவராக மட்டுமின்றி, அரசியல் தலைவராக,போர்வீரராக இருந்து வாழ்ந்து ஒழுக்க விழுமியங்களை அணிகலன்களாகக் கொண்ட சமூகமாக மாற்றிக் காட்டினார்கள்.

இருப்பினும், இஸ்லாத்திற்கு மாற்றுக் கருத்துடைய சில விமர்சகர்களின் பேனா முனைகள் அன்னாரது மணவாழ்வை விமர்சிக்க அதில் குறை காண முற்பட்டன.அவருடைய பலதார மணம் பாவையர் வாழ்வை பாதகமாக்குவதாக மாயவலை பின்னி,கற்பொழுக்கமற்றவராக அவரைத் தூற்ற முற்படுகின்றன.அவர்களுடைய வாதங்கள் பின்வரும் இரு விளக்கங்களால் தவிடுபொடியாகின்றன.

1. முதுமையை அடைந்த பின்பு அதாவது தனது 50 வயதை தாண்டிய பின்பு பலதார மணவாழ்வை ஆரம்பித்தார்

2.அன்னார் மணந்த  துணைவியர்களுள் ஆயிஷா(ரலி) தவிர்ந்த ஏனையோர் ஏற்கனவே மணமாகி கணவனை இழந்தவர்கள் அல்லது விவாக விலக்கு பெற்றவர்கள்

இந்த இரு அடிப்படைகளும் அவ்விமர்சகர்களுக்கு சிறந்த பதிலடியாக அமையும். அன்றைய அரேபிய சம்பிரதாயங்களுக்கேற்ப பல நங்கையர்களை மணந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் தாராளமாக இருந்தும் கூட கதீஜா(ரலி) இன் மரணம் வரை மற்றொரு பெண்ணின் தயவை அவர் நாடவில்லை. அத்தோடு சிறந்த ஒழுக்கசீலராகவும், அழகிய உடலமைப்பும், சமூக அந்தஸ்தும் கொண்டிருந்த நபியவர்களுக்கு தமது அழகிய இளம் நங்கைகளை மணம் முடித்துக் கொடுப்பதற்கு அனi;றய அவரது தோழர்கள் கடுகளவும் தயக்கம் காட்டவில்லை.இஸ்லாத்தின் எதிரிகளாக இருந்த குறைஷியர்கூட அன்னாருடைய ஏகத்துவப் பிரச்சார பலிக்குக் கூலியாக முன்வைத்த பல சலுகைகளில் ஒன்று, அழகிய இளம் கன்னியரை அவருக்கு மணமுடித்துத் தர முன்வந்ததும் அடங்கும்!ஆனால், இளமை இருந்தும் அவர் அதற்கெல்லாம் அசைந்து கொடுக்கவில்லை!

இவ்விமர்சகர்கள் கூறுவது போன்று அவருடைய பலதார மணத்துக்கான காரணம் அவரது காம இச்சை எனில் இளமைப்பருவத்தில் அதனை செய்யாதது ஏன்?இளமை கழிந்த பின்பும்கூட தனது ஆளுமை-அதிகாரங்களைப் பயன்படுத்தி கன்னிப்பெண்களை மணப்பதற்கு வாய்ப்பிருந்தும் விதவைகளை மணந்தது ஏன்?

நபி(ஸல்) அவர்களது பலதார மணவாழ்வு பற்றி விமர்சித்த அந்த அறிவுக் குருட்டு அரைகுறை விமர்சகர்கள் தங்களது கண்மூடித்தனத்தைக் கைவிட்டு அறிவுக்கூர்மையுடன் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்த பின் விமர்சனத்தில் ஈடுபட்டிருந்தார்கள் என்றால் நிச்சயமாக நபிகளாரின் பலதார மணவாழ்வின் யதார்த்தத்தைப் புரிந்திருப்பார்கள்.அத்தோடு அதில் உயர்ந்த இலட்சிய முன்மாதிரிகளும் நன்மைகளும் பொதிந்திருப்பதையும் அறிந்திருப்பார்கள் என்பது வெள்ளிடை மலை!

முஹம்மத் (ஸல்) அவர்களின் பலதார மணவாழ்வில் பொதிந்திருக்கும் இலட்சிய முன்மாதிரிகளும் நன்மைகளும் என்னவென்பதைக் காண்போம்!

அவ்வகையில் நபி(ஸல்) முதலில் கதீஜா (ரலி) அவர்களை தனது இருபத்தைந்தாவது வயதில் மணந்தார்கள். இவருடனான விவாகம் தூதுத்துவப் பணியின் முக்கிய திருப்பு முனையாக அமைந்தது கதீஜா(ரலி) மரணிக்கும் வரையில் வேறு எந்த பெண்ணையும் மணமுடிக்காத நபி(ஸல்) அவர்கள், அன்னை கதீஜா (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பின்னர்  10 பெண்களை திருமணம் செய்தார்கள்.

இங்கு தெளிவாக ஒரு விஷயத்தை விளங்க வேண்டும்.அதாவது பலதார மணம் இஸ்லாத்தில் ஆகுமாக்கப்பட்ட ஒரு அம்சமே! முஹம்மத்(ஸல்) அவர்கள்,பத்து மனைவியரை ஏக காலத்தில் மணந்திருந்தார்கள்.இது நபிகளாருக்கு அல்லாஹ்வினால் பிரத்யேகமாக வழங்கப்பட்ட ஒரு சலுகையாகும்.ஆனால் ஒரு முஸ்லிமைப் பொருத்த வரையில் ஏக காலத்தில் நான்கு விவாகம்தான் புரியலாம்.இதை திருக்குர்ஆன் தெளிவாக விளக்குகின்றது:

அநாதைகளுடன் நீதமாக நடக்க இயலாது என்று நிங்கள் அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக,மும்மூன்றாக,நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள். நீதிதவறாமலிருப்பதற்கு இதுவே மிக நெருக்கமானதாகும்!    4:3

நபி(ஸல்) பலதார மணவாழ்வுக்குரிய காரணங்களை பின்வரும் நான்கு தலைப்பக்களில் சுருக்கி விட முடியும்:-

……2

Related Post