சகோதரத்துவம்.., ஏகத்துவக் கனியாய்..!

 

ஏகத்துவம் என்பது வாழ்வின் ஒரு முக்கிய இணையில்லா நம்பிக்கை அம்சம்.

ஏகத்துவம் என்பது வாழ்வின் ஒரு முக்கிய இணையில்லா நம்பிக்கை அம்சம்.

– அப்துல் முஸவ்விர்

கத்துவம் என்பது வாழ்வின் ஒரு முக்கிய இணையில்லா நம்பிக்கை அம்சம். இது உலக சமுதாயத்திகரிடையே ஒரு உன்னத புரிதலையும் படைத்தவன்பால் மட்டுமே மீளுதலையும் முன்வைத்து நடைபோடக்கூடியது.ஏகத்துவப் பாதையிலிருந்து விலகி வேறெந்த அம்சங்களின்பாலும் ஒரு மனிதன் செயல்பட்டு பல்வேறு நல்ல விஷயங்களை எடு;துச் செய்தாலும், நிரந்தர மறுமை வாழ்வுக்கான வழியாக அவற்றைக் கொள்ள முடியாது.

மனிதர்களை ஒன்றுபடுத்தும் ஏகத்துவம்

ஆனால் ரசூல்(ஸல்) அவர்கள் மனிதர்களை ஒன்றுபடுத்த கட்சி உண்டாக்குவதற்கும், ஜமாஅத் உண்டாக்குவதற்கும், இயக்கம் உண்டாக்குவதற்குமுரிய எல்ல வழிகளையும் விட்டுவிட்டு, அல்லாஹ்(ஜல்) நபி(ஸல்) அவர்களை தனது வழியில் வளர்த்தெடுக்கின்றான். நபியே! சொல்லுங்கள்,” நான் ஒரு நபி”; அல்லாஹ்வுடைய தூதர் என்று சொல்லுங்கள் என்று கட்டளையிடுகின்றான்.

இந்த மனித சமுதாயம் ஒன்றுபட வேண்டும். பிறகு எதன் காரணமாகவும் அது வேறுபடக் கூடாது என்பதற்காக ஏகத்துவக் கொள்கையை இதயத்தில் ஏந்திய முதல் சமுதாயத்தை உருவாக்கினார்கள். இப்படி ஒன்றுபடுத்தப்பட்ட சமதாயத்தில் ஸல்மான்(ரழி), ஸுகைபு(ரழி), பிலால்(ரழி) போன்றோர் இருந்தார்கள். அவர்கள் யாரும் உணரவில்லை. நான் பாரசீகத்தை சேர்ந்தவனென்றும், ரோம் நாட்டைச் சேர்ந்தவனென்றும்; ஹபஸ் நாட்டை சேர்ந்தவனென்றும். அவர்கள் அல்லாஹ்வின் அருளால் ஒன்றுபட்ட சகோதரர்களாக ஆகிப் போனார்கள்.

இந்த ஏகத்துவ அடிப்படையில் ஒன்றுபட்ட சமுதாயத்தின் காலடியில் மாபெரும் பேரரசுகள் மண்டியிட்டன. அந்நாட்டு மக்களை வறுமையின் பிடியிலிருந்து பொருளாதார தளைகளிலிருந்தும் விடுவித்து ஒழுக்கச் சீலர்களாக மாற்றிக் காட்டினார்கள். சகோதரத்துவத்தை நிலை நாட்டினார்கள்.

இஸ்லாம் அவர்களை சகோதரர்களாக்கிய பிறகு எந்த ஆலிமும், எந்த இமாமும், எந்த அறிஞனும் முஸ்லிம்களைப் பிரிப்பதற்கு, அவர்களை துண்டாடுவதற்கு  யாருக்கும் அதிகாரமில்லை.

Related Post