-அர்ரரஹீம் பிளாக்
முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.
இந்தக் குறிக்கோளுக்காக, பெருங்கருணையா
ளனும் பேரரருளாளனுமான இறைவன் தேர்ந்தெடுக்கப்பட்ட தன் அடியார்களான திருத்தூதர்கள் வாயிலாக அந்த மெய்யறிவை வழங்கியுள்ளான். இனி மனிதன் தனது வாழ்வின் உண்மை நிலை பற்றிய அறிவை அடைந்திடவும் தான் படைக்கப்பட்டிருப்பதற்கான குறிக்கோளை அறிவுறுத்தி இறை வழிகாட்டுதலை அவனுக்கு எத்தி வைத்தது மட்டுமின்றி அவனுக்கு இன்னும் பல அறிவுகளை அளித்தார்கள். அவையாவன:.
(அ) இறைவனைக் குறித்தும் அவனது பல்வேறு பண்புகள் குறித்தும் தூய்மையான கருத்தோட்டம்.
(ஆ) மறைவான உண்மைகள் பற்றிய அறிவு. எடுத்துக்காட்டாக மரணத்துக்கு பின்னுள்ள வாழ்க்கை, வானவர்கள், ஜின்கள், சொர்க்கம், நரகம் போன்றவை பற்றிய அறிவு.
(இ) மனிதன் செயல்களுக்கான விளைவுகள் என்னவாயிருக்கும் என்பதைப்பற்றிய அறிவு.
(ஈ) நன்மை எது தீமை எது என்பதைப் பற்றிய அறிவு.
(உ) மனிதன் சமூக, பொருளாதார, ஒழுக்க, அரசியல் வாழ்வுக்கான சட்டதிட்டங்கள் ஆகியன.
இவையணைத்திற்கும் மேலாக இறைத்தூதர்கள் நமக்கு முன்னே உயர்ந்ததொரு வாழ்க்கை நெறிக்கான அழகிய செயல் ரீதியான முன் மாதிரியையும் சமர்ப்பித்துள்ளார்கள்.
இறைத்தூதரை அடையாளம் கண்டு கொள்வது எப்படி.
1. அவர் தமது சமுதாயத்தினரிடையே மிகச்சிறந்த மனிதராயிருப்பார், ஒழுக்க வலிமையுடையவராகவும் அறிவுத்திறனில் மேம்பட்டவராகவும் விளங்குவார். அவரது மிக மோசமான எதிரிகள் கூட அவரது ஒழுக்கத்தையும் வாய்மையையும் சந்தேகிக்கத் துணிய மாட்டார்கள். எடுத்துக்காட்டாக இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களைப் பார்ப்போம். அவர்கள் தூதுச் செய்தியில் நம்பிக்கைக் கொள்ளாதிருந்த யூதர்கள் கூட அவர்களது பாராபட்சமற்ற நேர்மையின் காரணத்தால் தங்கள் சச்சரவுகளில், தகராறுகளில் அவர்களைத் தங்கள் நடுவராக ஏற்றுக் கொண்டார்கள். இந்த நேர்மையும் வாய்மையும் இறைத்தூதுத்துவ அந்தஸ்திற்கு இன்றியமையாத நிபந்தனைகளாகும். ஏனெனில் இறைத்தூதர்களின் வாழ்க்கை அவரைப் பின் பற்றுவோருக்கு ஒரு முன் மாதிரியாக விளங்கக் கூடியதாகும். இறைத்தூதரின் ஆளுமை. அவர் கூறுவது உண்மையே, அது இறைவனிடமிருந்து வந்ததே என்பதற்கான தெளிவான ஆதாரமாக இருக்க வேண்டும்.
2. அவர் ஒரு மோசடிக்காரர் அல்லர் என்பதை நிருபித்திட அற்புதங்கள் வாயிலாக அவருக்கு வலுவூட்டப் பட்டிருக்கும். இந்த அற்புதங்கள் இறைவனின் சக்தியாலும் அவனது அனுமதியுடனும்தான் நடைபெறும். இறைத்தூதர் கொண்டுவரும் செய்திகள் அனைத்தும் இறைவனின் தரப்பிலிருந்து வருபவையே, அவரது சொந்தக் கருத்துக்களல்ல என்கிற உண்மைக்கு சான்றாக இறைவனின் இசைவாணையால் நிகழ்கின்றன . அந்தக் காலத்து மக்கள் சிறப்பு பெற்றிருந்த துறையிலேயே நபிமார்களுக்கு அற்புதங்களும் வழங்கப்பட்டன.
மூஸா(அலை) காலத்தில் ஏராளமான மந்திரவாதிகள் இருந்தனர். மிகப்பெரிய மந்திரவாதியின் சக்தியையும் வீழ்த்தக் கூடிய அளவுக்கு மூஸா(அலை) அவர்களின் அற்புதம் வெளியானது. இறைவனின் தூதர் என்று அணைவரும் நம்புவதற்காகவே இத்தகைய அற்புதங்கள் வெளியாக்கப்பட்டன. ஈஸா(அலை) காலத்து மக்கள் மருத்துவத் துறையில் கை தேர்ந்தவர்களாக இருந்தனர். எனவே குருடர்களை குணமாக்கும் ஆற்றல். இறந்தவர்களை உயிர்பிக்கும் அற்புதம். ஈஸா(அலை) அவர்களுக்கு அருளப்பட்டது.
இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் சம காலத்தவர்களான அரபிகள் தமது சொல்லாற்றல். மற்றும் கவிதைப்புலமையில் பிரபலமானவர்களாக இருந்தனர். ஆகவே முஹம்மத்(ஸல்) அவர்கள் கொண்டு வந்த அற்புதம் திருக்குர்ஆனாகவே இருந்தது. திருக்குர்ஆன் திரும்பத் திரும்ப அறைகூவல் விடுத்தும் கூட அரபுக்கவிஞர்கள் , பேச்சாளர்களின் பட்டாளம் முழுவதும். சேர்ந்தும் கருத்துச் செறிவிலும், சொல்வீச்சிலும் அதற்கிணையான ஓர் இலக்கியத்தைச் சமர்பிக்க முடியவில்லை. இது மட்டுமின்றி, இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் கொண்டு வந்த அற்புதமான திருக்குர்ஆனுக்கு இன்னொரு சிறப்புக்கூறும் உண்டு.
முந்தைய இறைத்தூதர்களுக்கு அருளப்பட்;ட அற்புதங்கள் அனைத்தும் காலம், இடம் ஆகிய வரம்புகளுக்கு உட்பட்டதாகும். குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு, குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே அவை வழங்கப்பட்டன. ஆனால் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அற்புதமான திருக்குர்ஆனோ உலகளாவியதும் என்றும் நீடித்து நிற்பதுமாகும். முந்தைய தலைமுறைகள் இவ்வுண்மைக்கு சாட்சியாக விளங்கி வந்திருக்கின்றன. இன்றைய தலைமுறையும் அதற்கு சான்று வழங்குகிறது. வருங்காலத் தலைமுறைகளும் இவ்வுண்மைக்கு சான்று வழங்கும்.
3. இறைத் தூதர்கள் ஒவ்வொருவரும் தாம் அறிவுறுத்தும் கொள்iகைகளும் சட்டங்களும் தமது சொந்தக் கருத்தல்ல என்றும் பேரண்டத்தின் படைப்பாளனிடமிருந்து தமக்கு அறிவிக்கப்படுபவையே என்றும் தெளிவாகக் கூறுவர் மேலும் அவர் தமக்கு முன் அருளப்பட்டதையும், தமக்கு பின்னர் நிகழப்போவதையும். உறுதியாகக் கூறுவர். தான் இறைவனின் செய்தியை அறிவிப்பவரே என்று உணர்த்துவதற்காகத்தான் ஓர் இறைத்தூதர் இவ்வாறு செய்கின்றார்.
இறைத்தூதர் அனைவரின் செய்தியும் ஒன்றுதான். வாழ்வின் உண்மை நிலையை மனிதன் புரிந்து கொண்டு தன்னைப் படைத்தவனின் விருப்பத்திற்கு முழுமையாகக் கீழ் படிந்து வாழ்ந்திட வேண்டும். நாம் இறைவனின் முன்னால் நமது சொற்கள், செயல்கள், அனைத்திற்கும் பதில் தருவதற்காக அழைக்கப்படுவோம் என்னும் தன்னுணர்வு மனிதனுக்கு இருக்க வேண்டும்.
இறைத்தூதுத்துவத்தின் சுருக்கமான வரலாறு.
இந்தப் பூவுலகில் அடியெடுத்து வைத்த முதல் மனிதரான ஆதம்(அலை) அவர்களே இறைவனின் முதல் தூதராக விளங்கினார்கள். இறைவன் தனது வழி காட்டுதலை ஆதம் (அலை) அவரகளுக்கு அருளி அவரது சந்ததிகளுக்கு அந்த வழிகாட்டுதலை எத்தி வைக்கும்படி அவருக்கு கட்டளையிட்டான். அன்னாரின் வழித் தோன்றல்களில் நல்லவர்களாயிருந்தவர்கள், தங்களுக்குக் காட்டப்பட்;ட நேரிய வழியை சரியாகவும் கண்டிப்பாகவும் பின் பற்றினார்கள். ஆனால் அவர்களில் தீயவர்களாயிருந்தவர்கள் தமது தந்தையின் அறிவுரைகளை – முதல் இறைத்தூதரின் வாயிலாக எத்தி வைக்கப்பட்ட வழி காட்டுதலைக் கைவிட்டு விட்டார்கள். ஆதம்( அலை) அவர்களின் சந்ததிகள் பூவுலகம் முழுவதிலும் பரவி விட்டபோது அவர்கள் பல் வேறு இனங்களாகவும் நாடுகளாகவும் பல்கிப் பெருகினர். ஒவ்வொரு நாடும் தனக்கென தனியொரு சமயத்தை, தமக்கே உரித்தான சடங்குகள், சம்பிரதாயங்களைப் பெற்றிருந்தது.ஆதத்தின் வழித் தோன்றல்கள் இறைவன் தமக்காக அருளிய வாழ்க்கை நெறியை மறந்து போனது மட்டுமல்ல, ஏக அதிபதியும் படைப்பாளனுமான இறைவனை சிறிது சிறிதாகப் புறக்கணிக்கலானார்கள். தமது சொந்த விருப்பு வெறுப்புகளையும் மன இச்சைகளையும் பின் பற்றத் தொடங்கலானர்கள். அதனால் எல்லா வகையான தீய பழக்க வழக்கங்களும் தலை தூக்கின.
இந்தக் கட்டத்தில்தான் இறைவன் ஒவ்வொரு சமுதாய மக்களிடையேயும் தன் திருத்தூதர்களை அனுப்பத் தொடங்கினான். திருக்குர்ஆன் கூறுகிறது ‘தமக்கிடையே எச்சரிப்பவர் ஒருவர்(இறைத்தூதர்) வந்து செல்லாத சமுதாயத்தினர் எவருமில்லை’ (35:24)
‘திண்ணமாக ஒவ்வொரு சமுதாயத்தினரிடையேயும் நாம் ஓர் இறைத் தூதரை அனுப்பியிருந்தோம்’ (16:36)
இறைத்தூதர்கள் அனைவருக்கும் ஒரே விதமான பொறுப்பும் ஒரே விதமான தூதுச் செய்தியும்தான் வழங்கப்பட்டிருந்தன. அதாவது இறைவனுக்கு முற்றிலும் மக்களை பணிந்து வாழ்ந்திட அழைக்க வேண்டும். இறை நம்பிக்கையாளர்கள், இறைவனின் திருத்தூதர்கள் அனைவரையும் ஏற்று அவர்கள் மீது நம்பிக்கை கொள்ளும் படியும் அந்தத்திருத்தூதர்களிடையே வேற்றுமை பாராட்டிடக் கூடாது என்றும் திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.
இறைவன் ஆணையிடுகின்றான்:
கூறுங்கள்: ‘ நாங்கள் அல்லாஹ்வின் மீதும் எங்கள் மீது இறக்கியருளப்பட்;டிருக்கிற நேர்வழியின் மீதும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் மற்றும் யஃகூபின் வழித் தோன்றல்களுக்கு இறக்கியருளப்பட்டவற்றின் மீதும் நம்பிக்கைக் கொள்கிறோம். நாங்கள் அவர்களிடையே வேற்றுமை ஏதும் பாராட்டிட மாட்டோம், மேலும் நாங்கள் இறைவனுக்கு கீழ் படிந்தவர்களாவோம்.’ (2:136)
முஹம்மத் (ஸல்) அவர்களின் இறைத்தூது
முஹம்மத் (ஸல்) அவர்கள் கி.பி 570 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29 ம் தேதி மக்கா நகரத்தில் பிறந்தார்கள். ஆனால் அவர்களது நாற்பதாவது வயதில்தான். அவர்கள் இறைவன் தம்மைத் தனது இறுதித் தூதராகத் தேர்ந்தெடுத்து இருப்பதாகவும். தனது செய்தியைத் தமக்கு அருளி, மனித சமுதாயம் முழுவதிற்கும், அதனை எத்தி வைக்கும் பொறுப்பைத் தம்மிடம் ஒப்படைத்திருப்பதாகவும், தமக்கு கீழ் படிபவர்கள் எவராயினும் அவர் தாராளமாக வெகுமதியளிக்கப்படுவார், தமக்கு மாறு செய்பவர்கள் அழிக்கப்படுவார்கள் என்பதாகவும் அறிவத்தார்கள். அவர்களது இந்த அறிவிப்புக்கு முந்திய அவர்களது வாழ்க்கைக் காலம் முழுவதிலும் அவர்கள் குறிப்பிட்டுக் கூறும் வகையில் உயர்ந்த ஒழக்கப் பண்புடையவர்களாக திகழ்ந்தார்கள். எந்த அளவுக்கென்றால் அவர்கள் ‘உண்மையாளர்’ ‘நம்பிக்கைக்குறியவர்’ என்னும் சிறப்புப் பெயர்களை அக்கால கட்டத்தில் பெற்றிருந்தார்கள். அந்த அரபுப்பகுதி முழுவதிலும் அவர்கள் வசித்த இடங்களிலெல்லாம் அங்கிருந்த ஒவ்வொருவரும் அவர்களை மிக உயர்வாக மதித்தார்கள், அவர்களெல்லாம் அன்னாரை ‘மிகவும் நேர்மையாளர்’ சொல்வதை செய்து காட்டும் மனிதர், பொய்யே பேசியறியாதவர்’ என்றுதான் கருதினார்கள்.
இறை அழைப்புப்பணி தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது சமூகத்தினரை ‘ஸஃபா’ மலைக்குன்றின் அருகே முதல் முறையாக ஒன்று திரட்டினார்கள். தமது செய்தியை அங்கே கூடியிருந்த மக்களிடம் தெரிவிப்பதற்கு முன்னால் முதலில் அவர்களிடம் ‘ என்னைப்பற்றி உங்களுடைய கருத்து என்ன’ ? என்று வினவினார்கள். அவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் ‘ உண்மையைத்தவிர உங்களிடம் நாங்கள் வேறெதையும் கண்டதில்லை’ என்று பதிலுரைத்தார்கள்.
நபிகள் நாயகத்தின் கடும் பகைவனாக இருந்த அபூஜஹல் கூட ‘முஹம்மதே நீர் ஒரு பொய்யர் என்று நான் கூறவில்லை நீர் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் இந்த செய்தி உண்மையானதல்ல என்றுதான் நான் கருதுகிறேன் என்று கூறினான்.
இவ்வாறே குறைஷித்தலைவர் அபூஸுஃப்யான் இஸ்லாத்தை தழுவாதிருந்த கால கட்டத்தில் ஒரு முறை இஸலாத்தை பின் பற்றுவோருக்கு எதிராக ஒரு தூதுக் குழுவுக்கு தலைமைத்தாங்கி ரோமப் பேரரசன் ஹிராக்ளியஸின் (hநசஉரடநள) அவைக்கு சென்றபோது ‘முஹம்மத்(ஸல்) அவர்கள் எப்போதும் பொய் கூறியதுமில்லை. தாம் கொடுத்த வாக்கை நிறைவேற்றிட ஒருபோதும் தவறியதுமில்லை ‘ என்று சான்று பகர்ந்தார். இதனைக் கேட்ட ஹிராக்ளியஸ் மனிதர்களுக்கு இடையிலான விவகாரங்களிலேயே அவர் பொய் பேசியதில்லை என்பது அனுபவப்பூர்வமாகத் தெரிந்துவிட்ட பிறகு இறைவனின் விவகாரத்தில்
இவ்வளவு பெரிய பொய்யை அவர் புணைந்துரைப்பார் என்று எப்படி சொல்ல முடியும். ? என்று கேட்டார்.
நபிகள் நாயகத்தின் கடும் எதிரிகள் கூட அவர்களின் உயர் பண்புகளை ஏற்றுக் கொண்டிருந்தனர் என்கிற உண்மையே அவர்கள் இறைவனின் திருத்தூதராக திகழ்ந்து கொண்டிருப்பதற்குப் போதுமான சான்றாகும்.
அறிஞர் போஸ்வொர்த் ஸ்மித் (டீழளறழசவா ளுஅiவா)கூறுகின்றார்:
‘முஹம்மத் (ஸல்) அவர்கள் எந்த நபித்துவ அந்தஸ்து தமக்குறியது என்று முதன் முதலாக வாதிடத் தொடங்கினார்களோ அதே அந்தஸ்தத்தைத்தான் தமது ஆயுட்காலத்தின் இறுதி வரையிலும் தமக்கென அவர் உரிமைக்கொண்டாடினார். முஹம்மத் (ஸல்)அவர்கள் ஓர் உண்மையான இறைத்தூதரே என்கிற அவரது வாதத்தை ஏற்றிட ஒவ்வொருவரும் சம்மதிப்பார்கள் என்று நான் தைரியமாக நம்புகிறேன்.’
தூதுத்துவம் முடிவு பெறல்
நபிகள் நாயகத்திற்கு அருனப்பட்ட வேத வெளிப்பாடு எல்லா வகையிலும் முழுமையானதும் அனைத்து அமசங்களையும் தழுவிய முழு வாழ்க்கைத் திட்டமும் ஆகும், திருக்குர்ஆன் இந்த உண்மையைப் பின் வருமாறு உறுதிப் படுத்துகின்றது.
‘இன்று நான் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவுப்படுத்திவிட்N;டன், உங்கள் மீது எனது அருளை முழுமையாகப் பொழிந்து விட்டேன், எனக்கு கிழ் படிவதையே (இஸ்லாத்தையே) உங்களுக்குறிய மார்க்கமாக ஏற்றுக் கொண்டேன்.’ (5:3)
ஆகவே இப்போழுது இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாயிலாகவே மனிதன் உண்மையான நேர்வழியைத் தேடிப் பெற்றுக்கொள்ள வேண்டியவனாக இருக்கிறான். பின் வரும் தெளிவான காரணங்களை முன்னிட்டு முஹம்மத்(ஸல்) அவர்களுக்குப்பிறகு எந்த இறைத்தூதரும் வரமாட்டார், திருக்குர்ஆனுக்குப் பிறகு எந்த வேத வெளிப்பாடும். அருளப்படாது ஏனெனில்,
(1) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாயிலாக அருளப்பட்டிருக்கும் வழிகாட்டுதல் எல்லாவித திருத்தங்கள், மாற்றங்கள், இடைச் செருகல்களை விட்டும் தூய்மையானதாய் தனித்து விளங்குகிறது.
‘திண்ணமாக இதனை நாம்தாம் இறக்கியருளினோம், மேலும் நாமே இதனைப் பாதுகாப்போராகவும் இருக்கின்றோம்’.(15:9)
(2) இந்த வழி காட்டுதல் எல்லா வகையிலும் முழுமையானதாகும். மறுமை நாள் வரை போதுமானதாகும்.
(3) முந்தைய இறைத்தூதர்களைப் போலன்றி இறுதித்தூதர் அவர்கள் மனித இனம் முழுமைக்கும் வழி காட்டிடவே அனுப்பப்பட்டார்கள். எந்தக் குறிப்பிட்ட நாட்டுக்கும் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கும் அனுப்பப்படவில்லை. திருக்குர்ஆன் கூறுகிறது:
‘(நபியே) உம்மை (உலக) மக்கள் அனைவருக்கும் இறைத்தூதராகவே நாம் அனுப்பியுள்ளோம். அவர்களுக்கு நற்செய்தி கூறக்கூடியவராகவும், (பாவங்களைக் குறித்து) அச்சுறுத்தி எச்சரிப்பவராகவும் (அனுப்பியுள்ளோம்)’.(34:28)
இனி இறைவனின் இறுதித்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் வாயிலாக அருளப்பட்ட இறைவழிகாட்டுதலைத் தேடிப்பெற்று செயல்படுத்தி பிறருக்கும் எடுத்துறைப்பது மாந்தர் ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.
இனி இந்த உலகில் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்காகவும், மரணத்திற்கு பின்னுள்ள வாழ்வில் ஈடேற்றமும், வெற்றியும் அடைவதற்காகவும் இறைவனின் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் பக்கமும் இறுதி வேத வெளிப்பாடான திருக்குர்ஆனின் பக்கமும் மனிதன் திரும்பி வரக் கடமைப்பட்டிருக்கிறான்.