வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப் படுத்துதல்!-3

 

1469423598_cbb0122ba9

ஒரு முறை நபித்தோழர் அதீபின் ஹாதிம் (ரலி) (கிறிஸ்தவ மதத்திலிருந்து இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறியவர்) அவர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பின் வரும் வசனத்தை ஓத கேட்டார்கள்.

அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர். ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்)

வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை – அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன். (அல்-குர்ஆன் 9:31)

இந்த வசனத்தை ஓதக்கேட்ட அந்த நபித்தோழர் அவர்கள், “நிச்சயமாக நாங்கள் அவர்களை வணங்கவில்லை” என்றார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பக்கம் திரும்பி “அல்லாஹ் அவர்களுக்கு ஹலாலாக்கியதை அவர்கள் ஹராமாக்கவில்லையா? அல்லாஹ் ஹராமாக்கியதை அவர்கள் ஹலாலாக்கவில்லையா?” என்று கூறிய போது “ஆம்” (என்று அந்த நபித்தோழர்) என்று கூறினார்கள். அப்போது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் “இவ்வாறு தான் அவர்களை வணங்கினார்கள்” என்று கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி.

ஆகையால் வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைபடுத்துவதில் முக்கியமான ஒன்று ஷரீஅத் சட்டங்களை அமல்படுத்துவதாகும். முக்கியமாக முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இறக்குமதி செய்யப்பட்டு கம்யூனிஸ மற்றும் முதலாலித்துவ கொள்கைகளின் அடிப்டையில் அரசாங்கம் செய்கின்ற, தன்னை “முஸ்லிம் நாடுகள்” என்று சொல்லிக் கொள்கிறவர்கள் இறைவனின் சட்டங்களைக் கொண்டு ஆட்சி செய்ய முன்வரவேண்டும். இந்த நாடுகளில் இஸ்லாமிய சட்டம் என்பது காலாவதியான அல்லது குறைந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகி விட்டது. அவ்வாறு இஸ்லாமிய சட்டங்கள் புத்தகத்திலும் மதச்சார்பற்ற சட்டங்கள் அமலிலும் உள்ள முஸ்லிம் நாடுகள்  வாழ்க்கையின் அனைத்து வகையிலும் பொருத்தமான இஸ்லாமிய சட்டங்களை கொண்டு வரவேண்டும். அல்லாஹ் அதற்கு பேரருள் புரிவானாகவும்.

சகோதரர் M. அன்வர்தீன்

Related Post