முழங்கட்டும் ஏகத்துவம்..! அதுவே.., ஏகஇறைநாதம்..!!

Oneness 1 Sவ்ஹீத் எனும் ஏகஇறை முழக்கம் மிக ஆழ்ந்த மற்றும் விரிவான பொருள் கொண்டது.உங்கள் வாழக்கையுடன் மிக நெருக்கமானதொரு தொடர்புடையது.இந்த ஏகத்துவக் கொள்கைதான் இருமை வாழ்விலும் உங்கள் உன்னத வெற்றி-தேல்வியை நிர்ணயிக்ககூடியது.ஏகத்துவத்தின் அடிப்படையிலான எந்தவொரு அம்சத்தையும் இஸ்லாம் சிறுத்து மதிப்பிடவில்லை மாறாக, சுவனப்பேற்றுக்குரிய அடிப்படை காரணியாக முன்வைக்கின்றது.

இஸ்லாமிய ஏகத்துவம் (தவ்ஹீத்) மற்றும் அதன் வகைகள்

இஸ்லாமிய ஏகத்துவம் (தவ்ஹீத்) மற்றும் அதன் வகைகள்

தவ்ஹீத் (ஏகத்துவம்)

தவ்ஹீத் என்பதற்கு ‘ஒருமைப்படுத்துதல்’ என்று பெயர்.

இஸ்லாத்தில் தவ்ஹீத் என்பதற்கு,அனைத்து வகையான வணக்க வழிபாடுகளுக்கும் தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனே என்றும், படைத்தல், காத்தல், உணவளித்தல் போன்ற செயல்களிலும் மற்றும் குர்ஆன் ஹதீஸ்கள் ஆகியவற்றில் அல்லாஹ்வின் ஆற்றல்கள், பண்புகளாக எவைகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றதோ அவைகள் அனைத்திலும் அல்லாஹ்வுக்கு நிகர் யாருமில்லை என்றும் அவன் தனித்தவன் என்றும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்கு ‘தவ்ஹீத்’ என்று பெயர்.

தவ்ஹீதின் வகைகள்: –

தவ்ஹீத் மூன்று வகைப்படும். அவைகள்: –

1. தவ்ஹீதுர் ருபூபிய்யா (படைத்துப் பரிபாலிக்கும் ,ரட்சகனை ஒருமைப்படுத்துவது)

2. தவ்ஹீதுல் உலூஹிய்யா (வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவுது)

Oneness S

3. தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத். (அல்லாஹ்வுடைய பெயர்களில், பண்புகளில் அவனை ஒருமைப்படுத்துவது)

அல்லாஹ்வை நிராகரிக்கும் போக்கினை எவ்வாறு நீங்கள் மேற்கொள்கின்றீர்கள்? (உண்மை யாதெனில்) நீங்கள் உயிரற்றவர்களாய் இருந்தீர்கள். அவனே உங்களுக்கு உயிரூட்டினான். பின்னர் அவனே உங்களை மரிக்கச் செய்வான். பின்னர் (மீண்டும்) அவனே உங்களுக்கு உயிர் கொடுப்பான். பின்னர் அவனிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். திருக் குர்ஆன் 2:28

Related Post