தூதருக்கு கீழ்ப்படியுங்கள்..!

இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; மேலும், உங்களுடைய செயல்களை வீணாக்கி விடாதீர்கள்.

இறைநம்பிக்கை கொண்டவர்களே!

தூதருக்கு கீழ்ப்படியுங்கள்..!
இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; மேலும், உங்களுடைய செயல்களை வீணாக்கி விடாதீர்கள். எவர்கள் நிராகரிப்பவர்களாகவும், இறைவழியிலிருந்து தடுக்கக்கூடியவர்களாகவும் இருக்கிறார்களோ, மேலும் நிராகரிப்பிலேயே பிடிவாதமாக இருந்து, அதே நிலையில் மரணமும் அடைகிறார்களோ அவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்க மாட்டான்.  எனவே, நீங்கள் தைரியமிழந்து விடாதீர்கள். மேலும், சமாதானத்தைக் கோராதீர்கள். நீங்கள்தாம் வெற்றி பெறக்கூடியவர்கள்! அல்லாஹ் உங்களுடன் இருக்கின்றான். மேலும், உங்கள் செயல்களை அவன் ஒருபோதும் வீணாக்கமாட்டான். இந்த உலக வாழ்க்கை விளையாட்டும் வேடிக்கையும் ஆகும். நீங்கள் இறைநம்பிக்கை கொண்டு இறையச்சத்தின்படி வாழ்வீர்களாயின், உங்களுக்குரிய கூலியை அல்லாஹ் உங்களுக்கு வழங்குவான். மேலும், உங்களுடைய செல்வங்களை உங்களிடம் அவன் கேட்கமாட்டான். ஒருவேளை உங்கள் செல்வங்களை உங்களிடமிருந்து அவன் கேட்டால், மேலும் உங்களிடமிருந்து எல்லாவற்றையும் கேட்டால் நீங்கள் கஞ்சத்தனம் செய்வீர்கள்; அது நீங்கள் கொண்டிருக்கும் குரோதங்களை வெளிக்கொணரும். இதோ! (பாருங்கள்:) அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யுங்கள் என்று, உங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது. இவ்விஷயத்தில் கஞ்சத்தனம் காட்டுகின்ற சிலர் உங்களில் இருக்கின்றனர். ஆனால், யார் கஞ்சத்தனம் செய்கிறாரோ, அவர் உண்மையில் தன் விஷயத்திலேயே கஞ்சத்தனம் செய்து கொண்டிருக்கிறார். அல்லாஹ்வோ தேவைகள் அற்றவன். நீங்கள்தாம் (அவன் பக்கம்) தேவையுடையோர்களாய் இருக்கின்றீர்கள். நீங்கள் புறக்கணித்துவிட்டால், அல்லாஹ் உங்களுடைய இடத்தில் வேறு ஒரு சமுதாயத்தைக் கொண்டு வருவான்; மேலும், அவர்கள் உங்களைப் போல் இருக்கமாட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவர் ஆவார். எனக்கு மாறுசெய்தவர் அல்லாஹ்வுக்கு மாறுசெய்தவர் ஆவார். (என்னால் நியமிக்கப்பட்ட) தலைவருக்குக் கீழ்ப்படிந்தவர் எனக்குக் கீழ்ப்படிந்தவர் ஆவார்; தலைவருக்கு மாறுசெய்தவர் எனக்கு மாறு செய்தவர் ஆவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் “தலைவருக்கு மாறுசெய்தவர் எனக்கு மாறுசெய்தவர் ஆவார்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவர் ஆவார். எனக்கு மாறுசெய்தவர் அல்லாஹ்வுக்கு மாறுசெய்தவர் ஆவார். என்னால் நியமிக்கப்பெற்ற தலைவருக்குக் கீழ்ப்படிந்தவர் எனக்குக் கீழ்ப்படிந்தவர் ஆவார். என்னால் நியமிக்கப்பெற்ற தலைவருக்கு மாறுசெய்தவர் எனக்கு மாறுசெய்தவர் ஆவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Related Post