தியாக அர்ப்பணிப்பு உணர்வு கொள்வதே அன்பு!

கூறுவீராக! அவன் அல்லாஹ், ஏகன்,அல்லாஹ் (எவரிடத்தும்) எத்தேவையுமில்லாதவன். அனைவரும் அவனிடத்தில் தேவையுடையவர்களே!

கூறுவீராக! அவன் அல்லாஹ், ஏகன்,அல்லாஹ் (எவரிடத்தும்) எத்தேவையுமில்லாதவன். அனைவரும் அவனிடத்தில் தேவையுடையவர்களே!

தியாக அர்ப்பணிப்பு உணர்வு கொள்வதே அன்பு!சகோதர குடும்பத்தின் திருமண வைபவத்துக்காக தன் வீட்டாரை முறைப்படி அழைக்காததற்குக் காரணம் அவ்வீட்டு பெரிய மருமகள்தான் எனும் ஆத்திரத்தில், அந்த பெண் தூங்கம்போது கொதிக்கும் எண்ணெயை முகத்தில் வீசி செய்த கொடூர கொலையில் ஆரம்பித்து…,
எண்ணெய்க்காகவா அல்லது உண்மையான ஜனநாயக மறுமலர்ச்சிக்காகவா என்று குழம்பிப் போகும் வகையில் டன் கணக்கில் குண்டுமழை பொழிந்து வருங்கால மன்னர்களாக வேண்டிய பள்ளத்தாக்கு மழலைகளையும், நாகரிகத் தொட்டிலின் நங்கையரையும் தனசரி கொல்லும் மனிதாபிமானமற்ற கூட்டு சதிகள் வரை…!
உடன் பிறந்த சகோதரிகள் இருவர் மீதான சந்தேக நடத்தையால், அவர்களில் ஒருவரின் குழந்தையை உடன் பிறந்த சகோதரனே அடித்துக் கொன்றது முதல்..,
தொடரும் இனப்பிரச்னையின் நிரந்தர முடிவுக்கும் அமைதிக்கும் அப்பாவி மக்களையும் பலி கொடுத்தாக வேண்டிய கட்டாய கொடூரம் வரை..!
வரிசையாக… நம்மைச் சுற்றியுள்ள சூழல் வன்முறைக் களமாகக் காட்சியளிக்கின்றது எனும் கசப்பான… வேதனையான உண்மையை அதிர்ச்சி கலந்த கவலையுடன் நாம் ஒப்பக்கொண்டே ஆக வேண்டும்.

சற்று சிந்தியுங்கள்!
அரை நூற்றாண்டுக்கு முன்பு வரைகூட எமது மூதாதையர் வசித்த வாழ்க்கைச் சூழலிலா நாம் இருக்கின்றோம்? கல்வியறிவிலும், வாழ்க்கை வசதிகளின் வெளிப்பாட்டுக் கட்டுமான அமைப்புக்களிலும் எங்களின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கின்றது. இந்த நேர்மறையான வேகம் எங்களிடத்தில் எப்படிப்பட்ட உன்னத மேன்மையையும் தாத்பர்ய பக்குவத்தையும் கொண்டு வந்திருக்க வேண்டும்? ஆனால், அவற்றின் வானைனகூட எமது சூழலில் நுகர முடியவில்லையே..! அவற்றின் நிழல்கூட எமக்குத் தென்படவில்லையே!
தவறு எங்கே..?
நாளிதழைப் புரட்டினால்,சமூகத்தை அடக்கியாளும் தனிமனித ‘கனவான்களின்’ பெரிய பெரிய நிழற்படங்கள்!
தன் இலட்சியத்தை நிறைவேற்ற நாயகன் புரியும் எதிர்மறை வழிகளை நியாயப்படுத்திக் காட்டும் திரைப்பட விமர்சனங்கள்!
தொலைக்காட்சியை ஓடவிட்டாலோ, ‘உன்னை சாகவும் விடமாட்டேன்..! வாழவும் விடமாட்டேன்டி’ என்று விரல் சொடுக்கி வக்கிர எண்ணத்தை வெளிப்படுத்தும் தொலைக்காட்சித் தெடர்களின் பிரதான கதாபாத்திரங்கள்! தொடர்களில் கட்டிப் பொட்டு நமது இல்லத்தரசிகளை இல்லப்பணிகள் ஆற்ற ‘இயலா அரசிகளாய்’ மாற்றிவிட்டன சேனல்கள்!
வானொலிகளோ, காட்டுக் கூச்சலுடன் தமிழையே கொலை செய்யும் வர்ணனைகளும், வன்மையும் வக்கிரமும் வார்த்தைகளில் விளையாடும பாடல்களும் கொ:டுதான் எங்களை வரவேற்கின்றன.
அண்டை வீட்டாரிடம் பேசலாம் என்றால், ஒன்று சந்தேகப் பேயோ அல்லது அவர்தம் பரஸ்பர ஆடம்பர வசதிகளின் மிது வெறி கொள்ளச் செய்யும் வகையிலான பேச்சுக்களோதான் முன்னே வரிசை கட்டி நிற்கின்றன..!
உண்மை உள்ளத்துடனான உதவிகள்கூட மறைந்து கொண்டிருக்கின்றன அல்லது அந்த உதவிகளுக்கு ஆதாய முலாம்களோ, ‘ஏதோ இருக்கின்றது’ எனும் வகையிலான ஈனப்புத்தி எண்ண வெளிப்பாடுகளோதான் பூசப்படுகின்றன.
சூழலின் யதார்த்தத்தை தொடர்ந்து கவனிக்கும் நாம் அதுதான் உண்மையென எங்களின் மூளைகளில் பதியச் செய்துகொள்கின்றோம். இது நம் உணர்வுகளின் நிஜப் பரிமாணம் அல்ல! அன்பும் அரவணைப்பும், காதலும் கண்ணியமும், பரஸ்பர மரியாதையும் தன்னலம் கருதா தியாகமும்தான் நமது நிஜஉணர்வுகளின் ஆத்மானந்தங்கள்!
நியாயமான இலட்சியத்துக்காக அல்லது நாகரிக நடத்தைக்காக அல்லது அநாகரிகப் போக்கு என உலகம் காண்பதை ஆகுமான வழியில் நிறைவேற்ற பொறுமையும் உன்னத வேகமும் அவசியம்! அனைத்தும் அடைந்துகொள்ள வேண்டும் என்பதல்ல அன்பு…! மாறாக, அடையும் பொறுமையும், பிறர் பெற வேண்டும் எனும் தியாக அர்ப்பணிப்பு உணர்வும் கொள்வதே அன்பு!

Related Post