சுவனத்திற்குத் தனி வழி

சுவனத்திற்குத் தனி வழி சுவனத்திற்குப் பல வாயில்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் ‘ரையான்” என்பதாகும். நோன்பாளிகள் விஷேடமாக அந்த வாயில் வழியாக சுவனம் நுழையும் பாக்கியத்தைப் பெறுவார்கள்.

இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ‘சொர்க்கத்தில் ‘ரய்யான்” என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழையமாட்டார்கள்! ‘நோன்பாளிகள் எங்கே?” என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழையமாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!” என ஸஹ்ல்(ர) அறிவித்தார். ” (புஹாரி: 1896)
சுவனமும் கிடைக்கும், தனி வழியாகச் செல்லும் உயர்ந்த பாக்கியமும் கிடைக்கும் எனக் கூறி நோன்பின் மகத்துவத்தை இந்த ஹதீஸ் உயர்த்திக் காட்டுகின்றது.
வாயின் வாடையும் கஸ்தூரி மணமாகும்:
நோன்பாளி நோன்புடன் இருக்கும் போது வாயில் துர்வாடை ஏற்படும். இந்தத் துர்வாடை கூட அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட நறுமணம் கூடியது என ஹதீஸ்கள் கூறி நோன்பாளியின் அந்தஸ்தை உயர்த்திக் காட்டுகின்றது.
இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ‘…. முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு திறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகிறான்; தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சி யடைகிறான்.” என அபூஹுரைரா(ர) அறிவித்தார். ”
(புஹாரி: 1904)

Related Post