எம் பெற்றோர்கள் அன்பின் முழு வடிவங்கள்….!

-ஹூஸைன்

எம் பெற்றோர்கள் அன்பின் முழு வடிவங்கள்..எப்படி இம்சிக்கும் மனங்கள் உருவாகும்???

எம் பெற்றோர்கள் அன்பின் முழு வடிவங்கள்..எப்படி இம்சிக்கும் மனங்கள் உருவாகும்???

 

ம் பெற்றோர்கள் அன்பின் முழு வடிவங்கள்..எப்படி இம்சிக்கும் மனங்கள் உருவாகும்???

துடிக்கும் போதும் துவழும் போதும் அவர்களின் கரங்களே நற்ச்சுரங்கள் எமக்கு??அவர்களுக்கு எம் ஆறுதலையும் அரவனைப்பையும் கொடுத்து முதுமையி;லும் முழுவதிலும் அவர்களை அரவனைத்து இறை நேசத்தையும் ஈந்து கொள்வோமாக….

இணைவைப்புக்கு அடுத்த பெரும்பாவமாக இறைவன் காட்டும் பெற்றோரை இம்சித்தல் எனும் இந்த பெரும்பாவம் இம்மை-மறுமை தண்டனைகளை ஈட்டித் தரக் கூடியது. அண்ணலார் (ஸல்) அவர்களும் இதற்குரிய தண்டனை குறித்து எச்சரித்தும், அத்தகையோரை சபித்தும் இரக்கின்றார்கள்.

பெற்றோரை இம்சிப்பதால், இம்மையில் வழங்கப்படும் தண்டனைகளில் சில :

–            இறைவனுடைய அன்பும் அருளும் கிடைக்காது.

–              அவன் செய்கின்ற ஏனைய நற்செயல்களை இறைவன் பொருட்படுத்த மாட்டான்.

–              இறைவனுடைய வெறுப்புக்கும் கோபத்துக்கும் உட்படுவான். ‘எவர் தனது பெற்றோர்களை சபிக்கின்றாரோ அவரை அல்லாஹ் சபிக்கின்றான்’ என்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். ஆதாரம் : முஸ்லிம்;  அறிவிப்பாளர் : அலி (ரலி) 

–              உறவினர்களும் அண்டை அயலாரும் அவனை வெறுத்து விடும் துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாவான்.

–              மோசமான நிலையில் மரணத்தை எதிர்கொள்ளுவான்.

–              இறைவனும் வானவர்ககளும் ஏனைய இறை நம்பிக்கையாளர்களும் அனை சபிக்கின்றனர்.

–              அவனுடைய பிரார்த்தனைகளுக்கு அங்கீகாரம் கிடைக்காது.

 இவை நபி மொழிகள் முன்மொழியக் கூடிய இம்மைசார் தண்டனைகளில் சில!

இனி மறுமை தண்டனைகளைப் பொறுத்தமட்டில் பின்வருமாறு அமைகின்றன :

–              பெற்றோரை இம்சிப்பவன் சுவனம் செல்ல மாட்டான்.

–              அத்தகைய மனிதனை அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.

‘மறுமை நாளில் மூன்று பிரிவினரை அல்லாஹ் ஏரெடுத்தும் பார்க்க மாட்டான். முதலாவது : பெற்றோரை நோவினை செய்தவன். இரண்டாவது : ஆண்வேடமிடும் பெண். மூன்றாவது : தனது மனைவியை விற்றுப் பிழைப்பு நடத்துபவன் என்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்’

மற்றொறு தடவை ‘அவனுக்கு நாசம் உண்டாகட்டும், அவனுக்கு நாசம் உண்டாகட்டும், அவனுக்கு நாசம் உண்டாகட்டும். இறைத்தூதரே யாருக்கு நாசம் உண்டாகட்டும் என நபித் தோழர்கள் கேட்ட போது : எவன் தனது வயது முதிர்ந்த பெற்றோர்களை நோவினைக்கு ஆட்படுத்துதுகின்றானோ அவனுக்கு!’ என நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்’

இம்மை-மறுமை தண்டனைகளையும், இறைசினத்தையும் இறைசாபத்தையும் பெற்றுத் தரக்கூடிய, வானவர் மற்றும் தூதர் சாபங்களையும் பெற்றுத் தரக்கூடிய இந்த பெரும்பாவத்திலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வோம்.ஈருலக வாழ்விலும் ஜயம் பெறுவோம், அதற்கு இறையருள் என்றும் துணை நிற்கட்டும்!

 

 

Related Post