இவன்தான் இறைவன்..!

-மௌலவி ஆ.து. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)

மதங்கள் என்பது இறை நம்பிக்கையை மையமாக வைத்தே தோற்றம் பெற்றுள்ளது. இன்று உலகில் கடவுள் நம்பிக்கையற்ற ஒரு மதத்தையேனும் காணமுடியவில்லை. ஒவ்வொரு மதத்தினரும் தத்தமது வேதநூல்களாகக் கருதும் அந்த மத வழிகாட்டிகளை வைத்தே கடவுள் நம்பிக்கையையும், கடவுளுக்கு இருக்க வேண்டிய பண்புகளையும் குறிப்பிட்ட அந்த மதத்தோடு பின்னிப் பினைந்துள்ளனர்.

மதங்கள் என்பது இறை நம்பிக்கையை மையமாக வைத்தே தோற்றம் பெற்றுள்ளது. இன்று உலகில் கடவுள் நம்பிக்கையற்ற ஒரு மதத்தையேனும் காணமுடியவில்லை. ஒவ்வொரு மதத்தினரும் தத்தமது வேதநூல்களாகக் கருதும் அந்த மத வழிகாட்டிகளை வைத்தே கடவுள் நம்பிக்கையையும், கடவுளுக்கு இருக்க வேண்டிய பண்புகளையும் குறிப்பிட்ட அந்த மதத்தோடு பின்னிப் பினைந்துள்ளனர்.

தங்கள் என்பது இறை நம்பிக்கையை மையமாக வைத்தே தோற்றம் பெற்றுள்ளது. இன்று உலகில் கடவுள் நம்பிக்கையற்ற ஒரு மதத்தையேனும் காணமுடியவில்லை. ஒவ்வொரு மதத்தினரும் தத்தமது வேதநூல்களாகக் கருதும் அந்த மத வழிகாட்டிகளை வைத்தே கடவுள் நம்பிக்கையையும், கடவுளுக்கு இருக்க வேண்டிய பண்புகளையும் குறிப்பிட்ட அந்த மதத்தோடு பின்னிப் பினைந்துள்ளனர்.

 

இஸ்லாம் தவிர்ந்த இதர அனைத்து மதங்களும் பல தெய்வ வழிபாட்டையும், ஏக இறைவனுக்கு இணைகற்பிக்கும் மன்னிக்க முடியா குற்றத்தை தூண்டுவனவாகவே உள்ளன. நாம் இப்படிக் கூறும் போது சிலருக்குக் கோபம் வரலாம். இது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இருந்தாலும் நம்மை சத்தியத்தை விட்டும் தடுத்துக் கொண்டிருக்கும் அந்தக் கோபத்தை சிறிது நேரம் ஓரங்கட்டிவிட்டு நாம் கூறும் கருத்துக்களை சற்று சிந்தித்துப் பாருங்கள் உண்மையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

எல்லா மதங்களும் கடவுளின் தன்மையைப் பற்றி விளக்கினாலும் போதிய கடவுளின் இலக்கணங்கள், பண்புகள் பற்றி சரியாகக் குறிப்பிடாமை தான் சில மதங்களில் கோடிக்கணக்கான கடவுள் நம்பிக்கையும், வழிபாட்டு முறையும் தன்னகத்தே ஏற்படுத்தியுள்ளன. போதாமைக்கு நாளுக்கு நாள் இன்னும் பல கடவுளர்கள் புதிது புதிதாக நாளொரு மேனியும் பொழுதொரு

வண்ணமுமாக தோன்றிக் கொண்டிருக்கின்றனர். அத்தோடு தாங்கள் கடவுளின் அவதாரம் என்று கூறிக் கொண்டு அப்பாவி மக்களை ஏமாற்றிக் கொண்டு வயிறு வளர்ப்பதையும் நாம் பார்க்கத் தான் செய்கின்றோம். அதே நேரம் தாம் கடவுளின் அவதாரம் என்று கூறி ஒரு அப்பாவி முஸ்லிமைக் கூட ஏமாற்ற முடிவதில்லை. ஏனென்றால் உடனே கடவுள் எப்படி மனிதரானார்? கடவுள் மனிதனாக மாறினால் கடவுளின் இடத்தில் தற்போது யார் இருக்கிறார்? போன்ற கேள்வியைக் கேட்டு போலித் தனத்தை தோலுரித்துக் காட்டிவிடுவர்.

இஸ்லாத்தின் இறுதி வேத நூலான அல்-குர்ஆனின் 112 வது அத்தியாயம் ஏனைய மதங்கள் விட்டுள்ள இடைவெளியைப் பூர்த்தி செய்து இறைவனுக்கு இருக்கவேண்டிய இலக்கணத்தை கச்சிதமாகக் கூறி பல தெய்வ வணக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கின்றது. இந்த அத்தியாயத்தின் சிறப்பம்சம் என்ன வென்றால், எல்லோருக்கும் புரியும் விதத்தில் அதன் வசனங்கள் உள்ளன. வெறும் நான்கே வசனங்கள். மற்றும் மிக எளிய நடையிலமைந்த சின்னச் சின்ன வசனங்கள் நம்மை வியக்க வைக்கின்றன!. அது மட்டுமல்ல இப்படி இரத்தினச் சுருக்கமாக ஒருக்காலும் மனிதனால் இறைவனுக்குரிய இலக்கணத்தைக் கூற முடியாது என்பது அல்-குர்ஆன் இறைவாக்கு என்பதற்கான ஒரு சான்றாகும். எனவேதான் அல்-குர்ஆன் மனிதனைச் சிந்திக்கத் தூண்டுகிறது. நிச்சயமாக சிந்திப்போருக்கு நிறைய சான்றுகளை பரிசாக வைத்திருக்கின்றது அல்-குர்ஆன்.

அல்-குர்ஆனின் 112 வது அத்தியாயம்: –

1. (நபியே!) நீர் கூறுவீராக: அவன் – ‘அல்லாஹ்’ ஒருவனே!
2. அல்லாஹ் (யாவற்றை விட்டும்) தேவையற்றவன் (யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன).
3. அவன் (எவரையும்) பெறவில்லை, (எவராலும்) பெறப்படவுமில்லை.
4. மேலும், அவனுக்கு நிகராக எவருமில்லை.

இந்த வசனங்களை ஒரு முறை ஆழ்ந்து கவணிப்போமானால் இந்த தன்மைகளுக்கு உட்பட்டவன் தான் உண்மையான கடவுளாக, வணங்குவதற்குத் தகுதியுள்ளவனாக இருக்க முடியும் என்பதனையும், உண்மையான கடவுளாகிய அல்லாஹ் தவிர்ந்த வணங்கப்படும் அனைத்தும் மதனிதக் கற்பனையில் உதித்த போலிக் கடவுள்கள் என்பதனையும் இலகுவில் புரிந்து கொள்ள முடியும்.

இதோ சத்தியத்தைத் தேடி ஒரு சலனமற்ற பயணம் தொடங்குகிறது: –

மேற் கூறப்பட்டுள்ள அத்தியாயத்திலுள்ள வசனங்களை ஒவ்வொன்றாக அனுகுவோம்.

01. ‘(நபியே!) நீர் கூறுவீராக, அவன் – ‘அல்லாஹ்’ ஒருவனே!’

ஒரு விஷயத்தை நாம் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது எல்லா மத்திலும் பல கடவுளர்கள் இருப்பது போல் ‘அல்லாஹ்’ என்பது முஸ்லிம்களின் கடவுள் எனக் கருதுவது தவறாகும். யாரை முஸ்லிம்களாகிய நாம் ‘அல்லாஹ்’ என்று வணங்கி வழிபடுகின்றோம் என்றால், இந்த உலகத்தைப் படைத்து பரிபாலிக்கின்ற வல்ல நாயனான அந்த ஏக சத்தனைத்தான். தவிர ‘அல்லாஹ்’ முஸ்லிம்களுக்கு மட்டுமுள்ள தனிக் கடவுள் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

இந்த வசனமானது கடவுள் என்பவன் நிச்சயமாக ஒருவனாகத் தான் இருக்க முடியும் என்பதனை அடித்துக் கூறுகின்றது. ஒன்றுக்கு மேற்பட்ட கடவுளர்கள் இருந்தால் என்ன நடக்கும் என்பதனை யூகித்துக் கொள்ளலாம். வேற்று மதப் புராணங்களில் கடவுளர்களுக்கிடையில் இடம் பெற்ற சமர்கள், சச்சரவுகள், இழிவான செயல்கள் என்பன எண்ணிலடங்காதவை. ஒரு சாதாரன சிறிய நாட்டைக் கூட ஆழுவதற்கு ஒரே ஒரு ஜனாதிபதி மட்டும் தான் இருக்க வேண்டும் என உலகமே ஏற்றுக் கொண்டுள்ள போது அகிலம் அனைத்தையும் அடக்கியாள ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்சியாளர் இருக்கவே முடியாது என்பதனைத்தான் இந்த வசனம் விளக்குகிறது.

02. ‘அல்லாஹ் (யாவற்றை விட்டும்) தேவையற்றவன் (யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன)’.

இறைவனானவன் அனைத்துத் தேவைகளை விட்டும் அப்பாற் பட்டவன். நம்மைப் போல தேவைகளுடையவன் இறைவனாகவே இருக்க முடியாது. மனிதனுக்கு எது எதுவெல்லாம் தேவைப்படுகிறதோ அவையனைத்தும் குறைகளே. எனவே இதே குறைகளை இறைவனுக்கும் கற்பிப்பது நாம் இறைவனை குறைத்து மதிப்பிடுகின்றோம் என்பதாக அமைந்துவிடும். அதுமட்டுமல்ல நமது தேவைகளை முறையிடுவதற்காக இறைவனிடம் கையேந்துகின்றோம். அவனே தேவையுள்ளவன் எனும் போது அவனிடம் நாம் எப்படி உதவி கோர முடியும்! பிச்சைக் காரனிடம் பிச்சை கேற்பது போன்றாகி விடும்.

இந்த இழுக்கை நீக்கும் விதமாகத்தான் அல்லாஹ் தனது திருமறையில் எவ்விதத் தேவையுமற்றவன் என்பது மூலம் தனக்கு மனிதர்கள் ஏற்படுத்திய பலவீனத்தை அப்புறப்படுத்துகிறான்.

இறைவனானவன் எள்ளும் பிசகாமல் தன் படைப்பினங்கள் அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருப்பவன். அவனுக்கு நம்மைப்போன்றே ஆசா பாசங்கள் இருந்தால் அவற்றை நிறைவு செய்யும் நேரத்தில் உலகத்தாரின் கோரிக்கைகளை யாரிடம் முறையிடுவது? எல்லாம் வல்ல நாயனை எவ்விதக் குறைகளும் இன்றி வணங்கி வழிபடுவோமாக!

03. ‘அவன் (எவரையும்) பெறவில்லை, (எவராலும்) பெறப்படவுமில்லை’.

இறைவனானவன் தனித்தவன் எனும் பொழுது அவனுக்கு பெற்றோர்களோ அல்லது குழந்தைகளோ இருக்க முடியாது. மனிதன் நினைப்பது போன்று இறைவனுக்கும் குடும்பம், கோத்திரம் இருக்குமானால் இறைவன் சமூகம் என்று ஒரு சமூகம் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் அப்படியொரு சமூகத்தை யாரும் பார்த்ததும் கிடையாது. அதற்கு சாத்தியமும் இல்லை. அல்லது அப்படி ஆரம்பத்தில் இருந்தார்கள் என்று கூறினால் அவர்களை ஒரு குறிப்பிட்ட காலத்தோடு மறைத்தது யார்? அல்லது குறிப்பிட்டதோர் காலத்துடன் அனைவரும் இறந்து விட்டார்கள் என்றால், இறைவனுக்கு இறப்பு தகுமா? என்ற கேள்வி நம் சிந்தனையைக் குடைகின்றது. இன்று சிலைகளாக சித்தரிக்கப்பட்டுள்ள கடவுளர்கள் அனைத்தும் கற்பனையில் தோன்றியவைகள் என்பதை நடுநிலையோடு சிந்தித்தால் அவர்களே தெரிந்து கொள்வார்கள்.

கிறிஸ்தவர்கள் கூறுவது போன்று இயேசு இறைமகன் கிடையாது. ஏனன்றால் இறைவன் வாரிசு எனும் தேவையை விட்டும் அப்பாற்பட்டவன். போதாதற்கு பைபிளில் கூட இயேசு தன்னைப்பற்றிய வாக்கு மூலத்தில் தான் இறைவனின் மகன் என்று ஒரு இடத்தில் கூட கூறவில்லை. அப்படி தனது சீடர்களில் ஒருவர் கூட நம்பவுமில்லை. மாறாக பவுலின் கற்பனையில் உதித்த காவியமாகத் தான் இந்த நம்பிக்கையைக் கூற முடியும். அதற்கு பைபிளே சான்றாகவும் உள்ளது.

அடுத்தது கடவுள் மனிதனாக வரவேண்டிய அவசியம் தான் என்ன? முதலாவது கடவுள் மனித வடிவில் வந்து தான் இவ்வுலக மாந்தருக்கு வழிகாட்ட வேண்டும் என்பது கிடையாது. கடவுள் கடவுளாக இருந்து கொண்டே தனது பனிகளைச் செய்வதுதான் கடவுளுக்குரிய பண்பாகும். உதாரணமாக, ஒரு நாட்டு ஜனாதிபதி தனது சட்டங்களை அமுல்படுத்த சாதாரன தொழிலாளியாக மாறித்தான் தொழிலாளிகள் சட்டங்களைக் கூற வேண்டும் என நினைப்பது தவறாகும்! அவ்வாறு யாராவது நினைத்தால் பைத்தியகாரத்தனம் என்போன். கடவுள் விஷயத்தில் மட்டும் ஏன் இந்த நீதமான பார்வை இல்லாமற் போனது?! கவணத்திற் கொள்க!

அடுத்தது கடவுள் மனிதனாக இவ்வுலகிற்கு வந்தால் கடவுளுக்கு இருக்கும் எத்தனையோ பிரத்தியேகத் தன்மைகளை இழக்க வேண்டியேற்படும்.

இது போன்ற இன்னோரன்ன தத்துவங்களை உள்ளடக்கியதாக இந்த வசம் இடம் பெற்றுள்ளது.

04. ‘மேலும், அவனுக்கு நிகராக எவருமில்லை’.

இந்த வசனமானது ஒன்றே இறைவனது தனித்தன்மையை விளக்கப் போதுமானது. இறைவனுக் ஒப்பாக எதுவுமில்லை என்று அல்-குர்ஆன் மட்டுமல்ல எல்லா மத நூல்களும் கூறிக் கொண்டிருக்கும் போதே எத்தனையோ கடவுளர்களை உண்டாக்கியவன் மனிதன். இறைவனுக்கு யாராவது அல்லது எதாவதொன்று ஒப்பாக இருக்குமானால் தன்னிகரற்ற இறைவன் என்று சொல்ல முடியாது போய்விடும்.

இவ்வையகத்தில் இறைவனைக் கண்டவன் எவருமில்லை. இப்படியிருக்க யாரும் காணாத, காணமுடியாதவனுக்கு யாரை ஒப்பாக்கி சிலைகளை வடித்தார்கள்? புரியாத புதிர்!!

எனவே சுருக்கமாகக் கூறினால், இந்த நான்கு பன்புகளும் இறைவனின் இலக்கணங்களாகும். உண்மையான இறைவனைத் தேடுபவர்களுக்கு (வழரஉh ளவழநெ) ஒரு உறை கல்லாக எடுத்துக் கொள்ளலாம்.

படைத்தவனை விட்டுவிட்டு நாமேன் படைப்பினங்களை வணங்க வேண்டும். இதோ நீங்கள் தேடும் சத்தியப் பாதையில் ஓர் நிகரற்ற தோழனாக இந்த நான்கு வசனங்களும் இருக்கட்டும்.

Related Post