மு.அ. அப்துல் முஸ

அனைத்துக்கும் மேலாக, நீதிமன்றங்களே கட்டப்பஞ்சாயத்துக் கலன்களாக மாறும் நிலை எனில், நமது முறையீடுகளை வழக்கம்போல
வ்விர்
குருட்டு நம்பிக்கைக்கு சாமரம்..! நீதி-நியாயத்துக்கு துரதிருஷ்டம்..!!
இறைநம்பிக்கையே எமக்கு பலம்!
‘ஐயா, காலம் காலமாய் நாங்க உழுது வந்த நிலத்த இங்கு திடீர்னு தன்னுதுன்னு சொல்லி, பிடுங்கிட்டாருங்க!எம் பொஞ்சாதி, புள்ளைங்க எல்லாம் தெருவுக்கு வந்துட்டோம்க! நீங்கதான் ஒரு நியாயத்தை சொல்லோணும்.
குக்கிராமம் ஒன்றில் கேட்கும் அபலையின் நியாயக் குரலுக்கு நியாயத் தீர்ப்பு வழங்க வேண்டியவர், ‘தோ பாருல! உன் நிலம் இதோ இவனுக்கு சொந்தம்னு சொல்றார்.அவங்கட அப்பா கனவுல வந்து அந்த இடம் அவங்களோட பூர்வீக சொத்துன்னு வேற சொல்லியிருக்கார்.அது உன் நிலம்னு உன்கிட்ட பட்டா, கிட்டாவும் இல்ல.ஆனா, அவருடை அப்பா,தாத்தா பயன்படுத்துன செம்புல ஒன்னு இவர்கிட்ட இருக்றதாவும், உன் நிலத்த தோண்டினா இன்னொன்னு கிடைக்கும்னு அவங்கட அப்பா கனவுல சொல்லியிருக்கார்.அதனால உம் முன்னாடியே நிலத்தை தோண்டியும் பாத்துட்டோம்.அதே மாதிரி சொம்பும் கிடைச்சுருச்சு.இத நம்பிக்கை சமாச்சாரம் இதுக்கு மேலேயும் அவர்கிட்ட ஆதாரம்லாம் கேட்க முடியாது.அதனால அந்த நிலம் அவருக்குத்தான் சொந்தம்.இருந்தாலும் நீ அத பயன்படுத்திட்டு இருந்ததுனாலேயும், வருங்காலத்துல மறுபடியும் பிரச்னை வளரக்கூடாதுங்கிறதுனாலயும் அதுல ஒரு பாகத்தை உனக்கும், வழக்கப்படி மற்றொரு பாகத்தை ஊருக்காகவும் பிரிச்சு தீர்ப்பு சொல்லிட்டேன்.அம்புட்டுத்தான்!
இரவோடிரவாக தன் நிலத்தில் புதைக்கப்பட்ட அந்த சொம்பு பாதிக்கப்பட்டவரைப் பார்த்து சிரிப்பதை உணர்ந்துகொள்ள முடியாத அந்த அப்பாவி,தன் குடும்பத்துடன் செய்வதறியாது திகைத்து நிற்கின்றார்.
ஆதிக்க மனப்பான்மை நிறைந்த சமூகங்களில் இத்தகைய கட்டப் பஞ்சாயத்து நிலைமைகள் அன்றாடம் சர்வ சாதாரணம்.மெத்தப் படித்த நகர்ப்புறங்களிலும் இவை நடக்கின்றன. ஒரே வித்தியாசம் அங்கு வயல்,தோட்டம்,துறவு என்றால் இங்கு கட்டடம்,வீடு,கடைகள்!
அனைத்துக்கும் மேலாக, நீதிமன்றங்களே கட்டப்பஞ்சாயத்துக் கலன்களாக மாறும் நிலை எனில், நமது முறையீடுகளை வழக்கம்போல இருமை நீதிமன்றங்களின் ஒரே இணையில்லா ஏக நீதிபதியான அல்லாஹ்விடம் சமர்ப்பிக்க வேண்டும்.எங்கள் வாழ்வுக்காக அனைத்தும் ஈந்த அந்த ஏகவேந்தன், தனது இல்லத்தை அவனுக்கு வழிபடவும்,பராமரிக்கும் வழிமுறைகளையும் எமக்கு பெற்றுத் தர ஏற்பாடு செய்ய மாட்டானா என்ன?நிச்சயம் செய்வான்.அதற்கு, பல்வேறு விஷயங்களில் எம்மிடையே பல்வகை கருத்து மாறுபாடுகள்,குழு வேறுபாடுகள் இருப்பினும், அந்த ஏகனது கயிற்றைப் பலமாக, ஒற்றுமையுடன் நாம் பற்றிப் பிடித்தால்…!