ஆசிட் ஊற்றி அவனுக்கு தண்டனை கொடுங்கள்

Valent 1

ஸ்லாத்தை உண்மை படுத்தும் நாட்டு நடப்பு:

”ஆசிட் ஊற்றி அவனுக்கு தண்டனை கொடுங்கள்” சாகும் முன் விநோதினி !

ஆசிட் வீச்சுக்கு ஆளாகி கண் பார்வையை இழந்த பொறியியல் மாணவி விநோதினி, சமீபத்தில் மூச்சுத் திணறல் காரணமாக மரணம் அடைந்தார்.

சாகும் முன் கடைசி நேரத்தில் விநோதினி ஊடகங்களுக்கு பேட்யளித்த போது, தன் மீது ஆசிட் ஊற்றிய சுரேஷ் மீது ஆசிட் ஊற்றி தண்டனை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மேலும் அவனுக்கு வெறுமென தூக்கு தண்டனை வழங்கி விடக் கூடாது நான் எப்படி கஷ்டப்படுகின்றேனோ அதே போன்று அவன் கஷ்டப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
பாதிக்கபட்டவனின் நிலைமையில் இருந்து இஸ்லாமிய மார்க்கம் வழங்கும் தண்டனையே சரியானது என்பதை தன்னை நாசமாக்கியவனை கண்ணுக்கு கண் என்ற அடிப்படையில் ”ஆசிட் ஊற்றி தண்டனை வழங்க வேண்டும்” என்ற விநோதினியின் வாக்குமூலம் உணர்த்தியுள்ளது.

மேலும் இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டால் உயிர் பழிகள் தான் ஏற்படும் என்பதையும் இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.

அ(த் தவ்ராத்)தில் யூதர்கள் மீது “உயிருக்குப் பதில் உயிரும், கண்ணுக்குப் பதில் கண்ணும், மூக்குக்குப் பதில் மூக்கும், காதுக்குப் பதில் காதும், பல்லுக்குப் பதில் பல்லும் (இதே போன்று) காயங்களுக்கும் சமமான முறையில் பழிவாங்கப்படும்” என்று நாம் விதியாக்கியிருந்தோம். ஆயினும், யாரேனும் பழிவாங்காமல் மன்னித்து விட்டுவிடுவாராகில், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும். எவர்கள் அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள்தாம் அநீதியாளர்கள்.திருக் குர்ஆன் 5:45

Related Post