அல்லாஹ் ஏன் அகிலங்களின் இறைவன்..?

-M.M. அக்பர் 

ஒரு மனிதனிடம் இரண்டு விஷயங்களுக்கு மத்தியில் தடுமாற்றம் ஏற்படலாம்! எதனை செய்தால் தனது குறிக்கோளை அடைய முடியும்? என்பதில் முடிவை காண முடியாதவனாக இருப்பான்! சில வேலை அச்செயல் அவனை தான் விரும்பாத முடிவுக்கு கொண்டு சேர்க்கும்; அல்லது அது அவனை அழித்து விடும்! இவ்வாறான நிலைமைகளில் அவன் தடுமாற்றமுள்ளவனாக இருப்பான்.

ஒரு மனிதனிடம் இரண்டு விஷயங்களுக்கு மத்தியில் தடுமாற்றம் ஏற்படலாம்! எதனை செய்தால் தனது குறிக்கோளை அடைய முடியும்?

-தமிழில் தேங்கை முனீப், பஹ்ரைன்

ல்லாஹ்வின் திருநாமங்கள் மற்றும் பண்புகள்
படைப்புகளைப் பற்றிய சிந்தனையின் மூலம் படைத்தவனைப் புரிந்து கொள்ள இயலும் என்ற எளிய தத்துவத்தைத் திருக்குர்ஆன் நமக்குக் கற்றுத் தருகின்றது. அல்லாஹ்வின் பண்புகளைப்பற்றி திருக்குர்ஆனில் கூறிய அடிப்படையில் எவராலும் புரிந்துகொள்ள இயலும். அவ்வாறு புரிந்து கொண்டவர்கள் படைத்தவனை விடுத்து படைப்புகளுக்கு வணக்கத்தை அர்ப்பணிக்கும் வழிகேட்டில் ஒருபோதும் வீழ்ந்து விடமாட்டார்கள். திருக்குர்ஆன் கூறும் அல்லாஹ்வின் பண்புகளும் திருநாமங்களும் அவன் மட்டுமே வணக்கத்திற்கு உரித்தானவன் என்பதை எடுத்தியம்புகின்றது.

அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் உள்ளன. அவற்றைக் கொண்டே அவனை அழைக்கவேண்டும் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள் (7:180)
நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள், அல்லது அர்ரஹ்மான் என்று அழையுங்கள் எப்பெயரைக்கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும் அவனுக்கு அழகிய திருநாமங்கள் உள்ளன. (17:110)

அல்லாஹ்வுக்கு திருப்பெயர்களோ பண்புகளோ கிடையாது என்ற கருத்து திருக்குர்ஆனுக்கு எதிரானதாகும். அல்லாஹ் பண்புகளால் பரிபூரணமானவன் என்பதே திருக்குர்ஆனின் நிலைபாடு. ஆனாலும் அவனது தன்மைகள் மற்றும் குணங்கள் மனிதனோடு ஒப்பிட்டுக் கூற முடியாதபடி தன்னிகரற்றதாகும். மனிதன் அல்லாஹ்வின் படைப்பு ஆதலால் அவனது தன்மைகள் வரையறுக்கப்பட்டதும் இட கால வரம்புகளுக்கு உட்பட்டதும் ஆகும். ஆனால் அல்லாஹ்வின் தன்மைகள் வரையறைகள் அற்றதும் இட கால வரம்புகளுக்கு அப்பாற்பட்டதும் ஆகும். அல்லாஹ் தன்னிகரற்வன் என்பதைப் பின்வரும் திருமறைவசனங்கள் தெளிவாகக் கூறுகின்றது.
لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ
அவனைப்போன்று எப்பொருளும் இல்லை, அவன்தான் (யாவற்றையும்) பார்ப்பவன், செவியேற்பவன் (42:11)
لَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ
அன்றியும் அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (112:4)
திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் நமக்குக் காணக்கிடைக்கும் அல்லாஹ்வின் திருப்பெயர்கள் மற்றும் தன்மைகள் சஞ்சலமற்ற தெளிவான இறைக்கொள்கையின் பால் வழிகாட்டுகின்றன. அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்வதால் மட்டுமே இறைக் கொள்கையில் தெளிவான நிலையை அடைய முடியும். அல்லாஹ்வின் கருணையையும் மகத்துவத்தையும் எடுத்துக்காட்டும் ஏராளமான திருநாமங்கள் திருக்குர்ஆனிலும் ஹதீஸிலும் காணக்கிடைக்கின்றன. அல்லாஹ்வின் பண்புகளைப்பற்றிக் கூறும் சில வசனங்கள்

அவனே அல்லாஹ்.!

வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை, மறைவானதையும் பகிரங்கமானதையும் அறிபவன். அவனே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.

அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை, அவனே பேரரசன், மிகப் பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன், தஞ்சமளிப்பவன், பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன், பெருமைக்குரித்தானவன், அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.

அவன்தான் அல்லாஹ், படைப்பவன், ஒழுங்கு படுத்தி உண்டாக்குபவன், உருவமளிப்பவன், அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாவும் அவனையே துதி செய்கின்றன.அவனே (யாவரையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கவன். (59:22-24)

அல்லாஹ் அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இப்பவன், வேறு இலை. அவன் என்றென்ன்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன், அவனை அரிதுயிலோ உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுன்னவையும் பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும் அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் ஞானத்திலிருந்து எதனையும் அவன் நாட்டமின்றி எவரும் அறிந்து கொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும் பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை. அவன் மிக உயர்ந்தவன், மகிமை மிக்கவன். (2:255)

(யாவற¢றுக¢கும¢) முந¢த¤யவனும¢ அவனே. ப¤ந¢த¤யவனும¢ அவனே. பக¤ரங¢கமானவனும¢ அவனே அந¢தரங¢கமானவனும¢ அவனே. மேலும¢ அவன¢ அனைத¢துப¢ பொருள¢களையும¢ நன¢கற¤ந¢தவன¢. (57:103)
நபிகள் நாயகம் (ஸல்) ஒவ்வொரு இரவும் படுக்கைக்குச் செல்லும் முன் பின்வருமாறு பிரார்த்தனை செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருள்:

அல்லாஹ்வே!

ஏழு வானங்கள் மற்றும் பூமியின் இறைவனே! மகத்தான அர்ஷின் இறைவனே! எங்களது இறைவனே! ஒவ்வொரு பொருட்களின் இறைவனே! தவ்றாத், இஞ்சீல், ஃபுர்கான் ஆகியவற்வை இறக்கியவனே! வித்துக்களையும் கொட்டைகளையும் பிளர்த்துபவனே! வணக்த்திற்குரிய அல்லாஹ் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை நீ உச்சி முடியைப் பிடித்துள்ள ஒவ்வொன்றினதின் தீங்கைவிட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். நீயே முதன்மையானவன், உனக்கு முன்பு எதுவுமில்லை! நீயே முடிவானவன் உனக்குப் பின்பு எதுவுமில்லை! நீயே வெளிப்படையானவன் உனக்கு மேல் எதுவுமில்லை! நீயே மறைந்தவன் உன்னை விட்டும் (மறைந்தது) எதுவும் இல்லை! என் கடனை நிறைவேற்றிவிடு! ஏழ்மையைவிட்டும் என்னைச் சீமானாக்கிவிடு! (முஸ்லிம்)
உனக்கு மேலாக எவரும் இல்லை என்பதன் கருத்து, உன்னை விட மேலானவனோ உன்னை விட மிகைத்தவனோ உயர்ந்தவனோ யாரும் இல்லை என்பதாகும். மேலும் உனக்குக் கீழாக யாரும் இல்லை என்பது, உன்னை விட்டும் மறைந்ததோ உனது அறிவுக்கு அப்பாற்பட்டதோ ஒன்றும் இல்லை என்பதாகும். தனது ஆச்சர்யம் மிக்க அற்புதங்களாலும் செயல்களாலும் அல்லாஹ் வெளிப்டையானவன். எனினும் இவ்வுலகில் நமது பார்வைகளுக்கு அப்பாற்பட்டவனும் வரையறைகளுக்குட்பட்ட நமது அறிவால் உவமிக்கவோ உருவம் கொடுக்கவோ இயலாத வண்ணம் அவனது தன்மைகள் மகத்துவம் மிக்கதும் தன்னிகரற்றதும் ஆகும்.
அவனைப்போன்று எப்பொருளும் இல்லை, அவன்தான் (யாவற்றையும்) பார்ப்பவன், செவியேற்பவன் (42:11)
அல்லாஹ்வின் அழகிய பண்புகளை விவரிக்கும் இன்னும் சில வசனங்கள்
அல்ஹம்து லில்லாஹ் – புகழ் எல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது. வானங்களில் உள்ளவையும், பூமியியல் உள்ளவையும் அவனுக்கே (உரியன); மறுமையில் புகழ்யாவும் அவனுக்கே. மேலும் அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்) நன்கறிபவன். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியேறுவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதன் பால் உயருவதையும் (ஆகிய அனைத்தையும்) அவன் அறிகிறான். அவன் மிக்க அன்புடையவன், மிகவும் மன்னிப்பவன் (34: 1,2)

 

Related Post