Main Menu
أكاديمية سبيلي Sabeeli Academy

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும்! – 1

Alla 99 Names 2 Sவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை விதிகள்!
அல்லாஹ்வின் அழகியபெயர்களும் அதனை விளக்கும் பண்புகளும் குறித்து சரியான விளக்கத்தைப் பெறுவது அவரியம்.அதற்கான சில விதிமுறைகள் இங்கு தரப்படுகின்றன.திருக் குர்ஆனும் நபிமொழியும் தரக்கூடிய வெளிப்படையான அம்சங்களை அப்படியே அறிந்து புரிந்துகொள்ள வேண்டும்.இறைவனுக்கு கரங்கள் உள்ளனவா,அவன் எங்கு வீற்றிருக்கின்றான் போன்ற விஹயங்களின் விளக்கங்கள் இந்தத் தலைப்பின் கீழ் வருகின்றன.
அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை விதிகள்:

முதல் அடிப்படை:   
அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகள் பற்றி வந்துள்ள அல்குர்அன் வசனங்களையும் நபிமொழிகளையும் அணுகும் முறை.
அல்குர்ஆன் வசனங்களையும் நபிமொழிகளையும் பொறுத்தவரை அவை தருகின்ற வெளிப்படையான கருத்திலேயே அவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அதில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது. ஏனெனில் அல்குர்ஆன் அரபி மொழியிலேயே அருளப்பட்டுள்ளது. அவ்வாறே நபி (ஸல்) அவர்களும் அரபு மொழியையே பேசினார்கள்.


திருக் குர்ஆனும் நபிமொழிகளும் தருகின்ற வெளிப்படையான கருத்துக்களை விட்டுவிட்டு அவற்றுக்கு வேறு அர்த்தங்கள் கற்பிப்பது அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுவதாக அமையும். இது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது.
‘வெட்கக்கேடானவைகளில் வெளிப்படையானவற்றையும் இரகசியமானதையும் எது பற்றி அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுவதையும் நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுவதையுமே இறைவன் தடுத்துள்ளான் என (நபியே!) கூறுவீராக!’  (அல்-அஃராப் 7:33) என்று அல்லாஹ் கூறுகிறான்.
மேற்கூறப்பட்ட அடிப்படையைப் பின்வரும் உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

بَلْ يَدَاهُ مَبْسُوطَتَانِ يُنفِقُ كَيْفَ يَشَاء

‘மாறாக அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடியவாறு வழங்குவான்’ (அல்-மாயிதா 5:64)
இந்த வசனத்தில் ‘யதானி’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரபு மொழியில் ‘யதானி’ என்பதன் பொருள் ‘இரு கைகள்’ என்பதாகும்.
எனவே இவ்வசனத்திலிருந்து அல்லாஹ்வுக்கு ‘இருகைகள்’ இருப்பதாகவே விளங்கிக் கொள்ள வேண்டும். அதற்கு மாற்றமாக ‘கை’ என்பதற்கு ‘சக்தி’ என்று விளக்கம் கொடுப்பது அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதாகவே அமையும்.

மூலம்: அஷ்ஷெய்க் முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உதைமீன் (ரஹ்)  
ஆங்கில மூலம் : allahuakber
முபாரக் மஸ்வூத் மதனீ

Related Post