அரபி இலக்கணம் – பாடம் 2

அரபி இலக்கணம் - பாடம்

அரபி இலக்கணம் – பாடம்

அரபி இலக்கணம் – பாடம் 2

ல்லாஹ்வைச் சந்திக்க இருப்பதைப் பொய் என்று வாதிட்டவர்கள் பேரிழப்புக்குள்ளாகி விட்டார்கள். எந்த அளவுக்கு எனில், அந்நேரம் திடீரென்று வந்துவிடும்போது, “ஐயகோ! இவ்விஷயத்தில் நாம் எத்தகைய குறைபாடுகளைச் செய்து விட்டோம்” என்று இவர்கள் புலம்புவார்கள். அப்பொழுது அவர்களின் நிலை எப்படி இருக்கும் எனில், தங்களுடைய பாவச்சுமைகளைத் தங்களுடைய முதுகுகளில் சுமந்தவாறு இருப்பார்கள். பாருங்கள்! அவர்கள் சுமந்து கொண்டிருப்பது எத்துணைக் கெட்டது! உலக வாழ்க்கை என்பது விளையாட்டும் வேடிக்கையுமே அன்றி வேறில்லை. உண்மையில், எவர்கள் தீய நடத்தையைத் தவிர்க்க விரும்புகின்றார்களோ அவர்களுக்கு மறுமை இல்லமே மிகவும் நலமுடையதாயிருக்கும். அவ்வாறிருக்க, நீங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தமாட்டீர்களா? (நபியே!) இவர்கள் (புனைந்து) கூறுபவை திண்ணமாக உம்மைக் கவலையில் ஆழ்த்துகின்றன என்பதை நாம் அறிவோம். ஆனால், உண்மையில் அவர்கள் உம்மைப் பொய்யரென்று தூற்றவில்லை; மாறாக அல்லாஹ்வின் வசனங்களையே இவ்வக்கிரமக்காரர்கள் மறுக்கின்றனர்.

உமக்கு முன்னரும் தூதர்கள் பலர் பொய்யரென்று தூற்றப்பட்டுள்ளார்கள். ஆனால், நம்முடைய உதவி அவர்களிடம் வரும் வரை, பொய்யர்கள் என்று தாம் தூற்றப்பட்டதையும் பொறுமையுடன் அவர்கள் சகித்துக் கொண்டிருந்தனர். அல்லாஹ்வின் வாக்குகளை மாற்றுவதற்கான வல்லமையுடையவர் எவருமிலர். இன்னும் முந்திய நபிமார்(களுக்கு ஏற்பட்ட நிலைமை)களின் செய்திகள் உமக்குக் கிடைத்தே உள்ளன. இருப்பினும் இம்மக்கள் புறக்கணிப்பதை உம்மால் சகித்துக் கொள்ள முடியவில்லையென்றால், உமக்கு வலிமையிருக்குமாயின் பூமியில் சுரங்க வழியைத் தேடியோ, வானில் ஏணிவைத்து ஏறியோ ஏதேனும் ஒரு சான்றினை நீர் அவர்களிடம் கொண்டுவர முயற்சி செய்வீராக! அல்லாஹ் நாடியிருந்தால் நிச்சயமாக அவர்கள் எல்லோரையும் நேர்வழியில் ஒன்று திரட்டியிருப்பான். எனவே அறிவிலிகளில் நீரும் ஒருவராகிவிடாதீர்.செவியுறுபவர்கள்தாம் சத்திய அழைப்பை ஏற்றுக் கொள்வார்கள். இறந்து போனவர்களை அல்லாஹ் (அடக்கத் தலங்களிலிருந்து) எழுப்பியே தீருவான்.
பிறகு அவர்கள் அவனிடமே (நீதி விசாரணைக்காக) கொண்டு வரப்படுவார்கள்.  ‘இந்த நபி மீது அவருடைய இறைவனிடமிருந்து ஏதேனுமொரு சான்று இறக்கப்பட்டிருக்கக் கூடாதா?’ என்று அவர்கள் வினவுகிறார்கள். நீர் கூறும்: “சான்றினை இறக்குவதற்கு அல்லாஹ் முழு ஆற்றல் பெற்றவன்தான். ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அறியாமையில் இருக்கின்றார்கள்.” பூமியில் வாழும் எல்லாப் பிராணிகளும், தன் இரு சிறகுகளின் துணைகொண்டு பறந்து செல்லும் எல்லாப் பறவைகளும் உங்களைப் போன்ற உயிரினங்களாகவே இருக்கின்றன (என்பதைக் கவனியுங்கள்). நாம் அவர்களைப் பற்றிப் பதிவு செய்வதில் யாதொரு குறையையும் வைக்கவில்லை. பிறகு இவர்கள் அனைவரும் தம் இறைவனிடமே ஒன்று சேர்க்கப்படுவார்கள்.ஆயினும் எவர்கள் நம்முடைய சான்றுகளைப் பொய் என வாதிடுகின்றார்களோ அவர்கள் செவிடர்களாயும், ஊமையர்களாயும் இருள்களில் உழன்று கொண்டுமிருக்கின்றார்கள். தான் நாடுகின்றவர்களை அல்லாஹ் வழிகேட்டில் சிக்கவைக்கிறான். மேலும் தான் நாடுகின்றவர்களை நேர்வழியில் செலுத்துகின்றான்.இவர்களிடம் நீர் கூறும்: “அல்லாஹ்விடமிருந்து ஏதேனும் பெருந் துன்பம் உங்களுக்கு வந்துவிடும்போது அல்லது உங்களுக்கு இறுதி நேரம் வந்துவிடும்போது அப்போது அல்லாஹ்வை அன்றி வேறு ஒருவரையா அழைக்கிறீர்கள்? நீங்கள் வாய்மையுடையோராயின் சற்று சிந்தித்துக் கூறுங்கள்! (6:31-38)

Related Post