New Muslims APP

அல் கஹ்ஃபு

அல் கஹ்ஃபு

உங்களை நீங்கள் முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்கிறீர்கள்.

உங்களை நீங்கள் முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்கிறீர்கள்.

18:1 புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே! அவனே தன்னுடைய அடியார் மீது இந்த வேதத்தை இறக்கியருளினான். இதில் எவ்விதக் கோணலையும் வைத்திடவில்லை. 18:2 இது முற்றிலும் சரியான விஷயத்தைக் கூறுகின்ற வேதமாகும். அல்லாஹ்வின் கடுமையான வேதனையைக் குறித்து (மக்களை) அவர் எச்சரிப்பதற்காகவும், இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் புரிவோர்க்குத் திண்ணமாக நற்கூலி இருக்கின்றது; 18:3 அதை என்றென்றும் பெற்றுக் கொண்டிருப்பார்கள் என்று நற்செய்தி அளிப்பதற்காகவும் 18:4 மேலும், “அல்லாஹ் மகனை ஏற்படுத்திக் கொண்டான்!” என்று கூறுவோரை எச்சரிப்பதற்காகவும்தான்! 18:5 அதைப் பற்றிய எவ்வித ஞானமும் அவர்களிடம் இல்லை; அவர்களுடைய மூதாதையரிடமும் இருக்கவில்லை. அவர்களின் வாயிலிருந்து வெளிப்படுகின்ற பேச்சு எத்துணை மோசமானது! அவர்கள் வெறும் பொய்யைத்தான் கூறுகின்றார்கள். 18:6 (நபியே!) இவர்கள் இந்த அறிவுரையின் மீது நம்பிக்கை கொள்ளவில்லையானால், இவர்களின் பின்னே கவலைப்பட்டு உமது உயிரை மாய்த்துக்கொள்வீர் போல் இருக்கிறதே! 18:7 திண்ணமாக, நாம் இப்பூமியின் மீதுள்ள அனைத்தையும் அதற்கு அலங்காரமாய் ஆக்கியுள்ளோம், இவர்களில் மிகவும் சிறந்த செயலைச் செய்பவர் யார் என்று இவர்களை சோதிப்பதற்காக! 18:8 இறுதியில் திண்ணமாக, நாம் இவையனைத்தையும் வெற்றுத்திடலாய் ஆக்கிட இருக்கிறோம். 18:9 குகை மற்றும் கல்வெட்டுக்காரர்கள் நம்முடைய வியக்கத்தக்க மாபெரும் சான்றாய்த் திகழ்ந்தனர் என்று நீங்கள் கருதுகின்றீர்களா? 18:10 இளைஞர்கள் சிலர் குகையில் தஞ்சம் புகுந்தபோது இறைஞ்சினார்கள்: “எங்கள் இறைவனே! உன்னுடைய தனிப்பட்ட அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் செயல்களை ஒழுங்குபடுத்தித் தருவாயாக!” 18:11 அப்போது நாம் அவர்களை அதே குகையில் பல்லாண்டுகள் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்தினோம். 18:12 பிறகு, அவர்களை எழச் செய்தோம்; அவர்கள் இரு பிரிவினரில் யார் 18:13 அவர்களின் உண்மையான சரிதையை நாம் உமக்கு எடுத்துரைக்கிறோம். திண்ணமாக, அவர்கள் தம் இறைவன் மீது நம்பிக்கை கொண்டிருந்த இளைஞர்களாவர். நாம் அவர்களை நேர்வழியில் மேலும் மேலும் முன்னேறச் செய்தோம். 18:14 அவர்கள் எழுந்து, “யார் வானங்களுக்கும், பூமிக்கும் அதிபதியாக இருக்கின்றானோ அவனே எங்களுக்கும் அதிபதியாவான். அவனை விடுத்து வேறெந்தக் கடவுளையும் நாங்கள் அழைக்கமாட்டோம். அவ்வாறு அழைத்தால் திண்ணமாக நாங்கள் முறையற்ற பேச்சை பேசியவர்களாவோம்” என்று துணிந்து பிரகடனம் செய்தபோது அவர்களின் உள்ளங்களை நாம் திடப்படுத்தினோம். 18:15 (பிறகு, அவர்கள் தங்களுக்குள் கூறிக் கொண்டார்கள்:) “இந்த நம்முடைய சமுதாயத்தினர் பேரண்டத்தின் அதிபதியை விடுத்து பிறவற்றைத் தெய்வங்களாக்கி உள்ளார்கள். அவை தெய்வங்கள்தாம் என்பதற்கு ஏதேனும் தெளிவான சான்றினை இவர்கள் ஏன் கொண்டு வருவதில்லை? அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனை விட பெரும் கொடுமைக்காரன் வேறு யார்? 18:16 நீங்கள் இவர்களை விட்டும், அல்லாஹ்வை விடுத்து, இவர்கள் அழைத்து வருகின்ற பிற தெய்வங்களை விட்டும் விலகிக் கொண்டீர்கள் என்றால், இன்ன குகைக்குள் சென்று அபயம் தேடுங்கள்! உங்கள் இறைவன் தன் கருணையை உங்கள் மீது இன்னும் விரிவாக்குவான். மேலும், உங்கள் பணிகளுக்கு வேண்டிய அனைத்து வசதி வாய்ப்புகளையும் உங்களுக்கு உருவாக்கித் தருவான்.” 18:17 (நீர் குகையில் அவர்களைப் பார்த்தால்) சூரியன் உதயமாகும்போது அவர்களின் குகையைவிட்டு விலகி வலப்பக்கமாக உயர்வதையும் அது மறையும்போது அவர்களை விட்டுக் கடந்து இடப்பக்கமாகத் தாழ்வதையும் காண்பீர்; ஆனால், அவர்களோ குகையினுள் ஒரு விசாலமான இடத்தில் இருப்பார்கள். இது அல்லாஹ்வின் சான்றுகளில் ஒன்றாகும். யாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ அவரே நேர்வழி பெற்றவராவார். மேலும், யாரை அல்லாஹ் நெறிபிறழச் செய்கின்றானோ அவருக்கு உதவி புரிந்து வழிகாட்டுபவரை ஒருபோதும் நீர் காணமாட்டீர்.தாங்கள் தங்கியிருந்த காலத்தை மிகச்சரியாக கணக்கிடுகிறார்கள் என்பதை நாம் அறிந்துகொள்வதற்காக!

 

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...

Leave a Reply


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.