அரபி இலக்கணம் – பாடம் 7

http://youtu.be/DTXUHgInDJ0

(நபியே!) வஹியின் மூலம் உமக்கு அனுப்பப்பட்டிருக்கும் இந்த வேதத்தை நீர் ஓதுவீராக! மேலும், தொழுகையை நிலை நிறுத்துவீராக! திண்ணமாக, தொழுகை மானக்கேடான மற்றும் தீயசெயல்களைத் தடுக்கின்றது. மேலும், அல்லாஹ்வை நினைவுகூர்வது இதைவிடப் பெரிய விஷயமாகும். நீங்கள் செய்கின்ற அனைத்தையும் அல்லாஹ் அறிகின்றான். மேலும், வேதம் வழங்கப்பட்டவர்களிடம் மிக அழகிய முறையிலன்றி நீங்கள் தர்க்கம் செய்ய வேண்டாம். ஆனால், அவர்களுள் கொடுமையாளர்களிடம் தவிர! மேலும், அவர்களிடம் கூறுங்கள்: “எங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பவற்றின் மீதும் உங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பவற்றின் மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். எங்களுடைய இறைவனும் உங்களுடைய இறைவனும் ஒருவனே! மேலும், நாம் அவனுக்கே கீழ்ப்படிந்தவர்களாய் (முஸ்லிம்களாய்) இருக்கின்றோம்.” (நபியே!) இதே போன்று உமக்கும் வேதத்தை இறக்கியருளியிருக்கின்றோம். ஆகையால், முன்னர் எவர்களுக்கு வேதம் வழங்கியிருந்தோமோ அவர்கள் இதனை நம்புகின்றார்கள். இவர்களிலும்கூட பெரும்பாலோர் இதன்மீது நம்பிக்கை கொண்டு இருக்கின்றார்கள். மேலும், இறைநிராகரிப்பாளர்கள் மட்டுமே நம்முடைய வசனங்களை மறுக்கின்றனர். 29:48 (நபியே!) இதற்கு முன்னர் எந்த வேதத்தையும் நீர் படித்ததில்லை. உம்முடைய கையால் எழுதியதுமில்லை. அவ்வாறிருந்திருந்தால் அசத்தியவாதிகள் சந்தேகம் கொண்டிருப்பார்கள். உண்மையில் இவை ஞானம் வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் தெளிவான சான்றுகளாய்த் திகழ்கின்றன. நம்முடைய வசனங்களை எவரும் மறுப்பதில்லை கொடுமைக்காரர்களைத் தவிர! இவர்கள் கேட்கின்றார்கள், “இவருடைய இறைவனிடமிருந்து இவருக்கு ஏன் சான்றுகள் இறக்கியருளப்படவில்லை” என்று! அதற்கு நீர் கூறும்: “சான்றுகள் அல்லாஹ்விடம் உள்ளன. நானோ தெள்ளத்தெளிவாக எச்சரிக்கை செய்பவனாகவே இருக்கின்றேன்.” அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படுகின்ற வேதத்தை உம் மீது நாம் இறக்கியருளி இருப்பது அவர்களுக்குப் போதுமான சான்றாக இல்லையா? திண்ணமாக, நம்பிக்கை கொள்ளும் சமூகத்தினர்க்கு இதில் கருணையும் நல்லுரையும் இருக்கின்றன. திருக் குர்ஆன் 29:50

Related Post