இன்றைய நவீன இஸ்லாமிய குடும்பம்! -4

– M.S.றியாஸ் முஹம்மத் (நளீமி)

இன்றைய நவீன இஸ்லாமிய குடும்பம்! -4

சவால்களும் தீர்வுகளும்

இன்றைய நவீன இஸ்லாமிய குடும்பம்

இன்றைய நவீன இஸ்லாமிய குடும்பம்

னிதர்களே, உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும், எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ, அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள்! மேலும், இரத்தபந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள்! திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.

4. மஹ்ரமி அஜ்னபி வரையறை பேணப்படாமை

இஸ்லாமிய குடும்பங்களில் இன்று ஏற்பட்டுள்ள மிகப்பெரும் சவாலாக இதனையே குறிப்பிட முடியும். இலங்கைச் சமுகத்தை எடுத்து நோக்கினால்இ இன்று சகல மட்டத்திலும் இந்த நிலை ஒரு பொதுப்பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கல்விக்கூடங்கள்இ தொழில் நிலையங்கள்இ போக்குவரத்துச் சாதனங்கள்இ மருத்துவ நிலையங்கள் என்று நாட்டில் உள்ள சகல இடங்களிலும் அஜ்னபிஇ மஹ்ரமி பேணப்பட முடியாத நிர்ப்பந்தம் இன்று காணப்படுகிறது. இது தவிரஇ இன்றைய நவீன தொழில்நுட்பம் இளைஞர் யுவதிகளுக்கிடையில் தொலைபேசிஇ இணையம் என்பவற்றின் மூலமான வரையரையற்ற தொடர்பாடல்இ பேச்சுப்பரிமாற்றங்களுக்களுக்கான வழிகளை இலகுவாக்கியுள்ளன. இதன்மூலம் மறைமுகமாக ஆண் பெண் கலப்புக்கான அத்திபாரமிடுவதனை அவதானிக்கலாம்.

இது ஒரு புறமிருக்கஇ மஹ்ரமிஇ அஜ்னபி பேண முடியுமான குடும்பச்சூழலில்இ வீடுகளில் கூட அது பற்றிய அறிவின்மைஇ தெளிவு போதாமைஇ அதன் பாரதூரத்தை உணராமை போன்ற காரணங்களினால் இந்நிலை பேணப்படாமை கவளை தரும் விடயமாகும்.

மஹ்ரமி அஜ்னபி வரையறை பேணப்படாமை இஸ்லாமிய குடும்பங்களில் பல விரும்பத்தகாத விடயங்களைத் தோற்றுவிக்கும். ஹறாமானஇ வெறுக்கத்தக்க நிகழ்வுகளுக்கு அது இட்டுச்செல்லும் என்பதாலேயே இஸ்லாம் அதனை மிக கண்டிப்பாக தடைசெய்கிறது.

இன்று தழிழ் மொழியிலுள்ள குறைபாடும் நம் நாட்டு முஸ்லிம்கள் மஹ்ரமி அஜ்னபி வரையறை பேணாமைக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. தமழ் மொழியில் தந்தையின் சகோதரர்களது பிள்ளைகளை அண்ணன் என்றும் தம்பி என்றும்இ தங்கையென்;றும்இ அக்கா என்றும் உறவு பாராட்டுவது வழமை. தமிழ் மொழியை பேசும் முஸ்லிம்களும் இன்று அவ்வுறவை அவ்வாறே கருதுகின்றனர். அவர்களையும் மஹ்ரம்களாகவே கருதுகின்றனர். மஹ்ரம்களோடு எவ்வாரெல்லாம் கதைக்க முடியுமோ அவ்வாறே அவர்களுடனும் கதைக்கின்றார்கள். குடும்பத்தில் மரணம் ஏற்பட்டால் மாத்திரம் இத்தாவில் இருக்கும் பெண்ணுடன் மஹ்ரமி அஜ்னபி வரையறை பேணுவதற்காக பத்வா கேட்டு வருபவர்கள் இத்தாக்காலம் முடிந்ததும் அதனை முற்றாக மறந்து விடுகிறார்கள். மஹ்ரமிஇ அஜ்னபி பேணப்படுவது பெண் இத்தாவில் இருக்கும் போது மட்டும் தான் என்ற மனோநிலையில் எமது சமுகம் மாறிப்போயுள்ளது.

இது ஒருபுறமிருக்கஇ இதையும் தாண்டிய மஹ்ரமி அஜ்னபி வரையறைகளை இஸ்லாம் முன்வைக்கிறது. நபி(ஸல்) அவர்கள் கூறியதாக உக்பா இப்னு ஆமிர்(ரழி)     .அறிவிக்கிறார்கள்இ ‘பெண்களிடம் நுழைவதையிட்டு நான் உங்களுக்கு எச்சரிக்கிறேன்’ என்றார்கள். அதன்று ஒரு அன்ஸாரி ஸஹாபி நபியவர்களிடம்இ ‘நெருங்கிய உறவுகளைப் பற்றி (அல்ஹமூவு) என்ன கருதுகின்றீர்கள்’ எனக்கேட்டதற்குஇ ‘நெருங்கிய உறவினர் மரணமாகும்’ (புஹாரிஇ முஸ்லிம்)

இந்த ஹதீஸை விளக்கும் இமாம் நவவி (ரஹ்) அவர்கள் தனது முஸ்லிம் கிரந்தத்துக்காக விளக்கவுரையில் பின்வருமாறு கூறுகின்றார்கள்இ ‘ ‘ஹமூவு’ எனற சொல் மூலமாக நாட வருவது மனைவியின் பெற்றோர்இ பிள்ளைகள் தவிர்ந்த ஏனை உறவினர்களைக் குறிக்கும். அவர்களுடன் திருமணம் செய்வது மனைவிக்கு நிரந்தரமாக தடுக்கப்பட்டுள்ளது என்ற வகையில்இ அவர்களுடன் தனித்திருப்பதை இந்த சொற்பிரயோகம் குறிக்கவில்லை. இதன் மூலம் நாடப்படுவதுஇ சகோதரர்இ அவரது மகன்இ சிறிய தந்தைஇ அவரது மகன் அவர்களை ஒத்தவர்களையோகும். கணவனின் சகோதரனுடன் தனித்திருப்பதும் ‘மரணம்’ என்பதைக் குறிக்கும். அதுதான் சாதாரண அஜ்னபிகளை விட அவர்களே கடுமையாக தடைசெய்யப்பட்டோராவர். இதுதான் அந்த ஹதீஸூக்கு பொருத்தமான விளக்கமாகும்’.

இந்த விளக்கத்தின் படி கணவனின் சகோதரர்களுடனேயே இந்தளவு மஹரமிஇ அஜ்னபி விடயத்தில் வலியுறுத்தியுள்ள இஸ்லாம்இ அந்நிய ஆண்களுடன் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்கிறது.

குறிப்பாகஇ இன்று காணப்படும் கூட்டுக் குடும்ப கட்டமைப்பில் ஏற்படும் பெரும் சவாலாகவே அனேகமாக இந்தத் தவறு தடைபெறுகின்றது.

சொந்த வீட்டில் நுழைவதாக இருப்பினும் அனுமதி பெற வேண்டும் என வலியுறுத்துகின்றது இஸ்லாமிய போதனைகள். ஆயின்இ அடுத்தவர் வீட்டில் நுழையும் போது கூட உள்ளே சென்று விட்டுத்தான் தான் வந்திருப்பதை அறிவிக்கும் நிலைப்பாட்டில் இன்றைய சமுக நிலை காணப்படுகின்றது.

இன்றைய குடும்ப வாழ்வை பாழாக்கும்இ சிதைக்கும் பல சம்பவங்கள் இக்காலத்தில் இந்த மஹ்ரமிஇ அஜ்னபி பேணாமையால் ஏற்படுவதை இன்றைய சமுக சூழல் உறுதி செய்கிறது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்இ ‘யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசித்திருக்கிறாரோஇ அவர் ஒரு மஹ்ரமுடனல்லாது அஜ்னபியான பெண்னுடன் தனித்திருக்க வேண்டாம். ஏனெனில்இ அவர்களோடு ஷைத்தான் மூன்றாமவனாக இருப்பான்’ (அஹ்மத்இ திமிமிதிஇ ஹாகிம்) இந்த ஹதீஸை விளக்கும் முகத்திஸீன்கள், அவர்கள் செய்யும் தவறுகளில் ஷைத்தானும் பங்குகொள்கிறான். அந்தப்பெண்ணுக்கு ஆண் அசிங்கமானவனாக இருந்தாலும் அழகானவனாகக் காண்பிக்கிறான். பெண் அவலட்சனமானவனாக இருப்பினும் அவனுக்கு அழகானவனாக காண்பிக்கின்றான். எனவேதான்இ அழகான மனைவிரை பெற்றுள்ள பலரும் கூட அவலட்சனமானஇ மார்க்கமில்லாத பெண்களை நாடிச் செல்கின்றனர். என்ற விளக்கத்தினை வழங்குகின்றனர்.

இத்தகைய ஆண், பெண் கலப்புக்குரிய சில காரணங்களை அடையாளம் காணலாம்.

  1. இஸ்லாமிய ரீதியில் தீர்வுகாண வேண்டிய அவசர அவசியத் தேவை இருக்கிறது

    இஸ்லாமிய ரீதியில் தீர்வுகாண வேண்டிய அவசர அவசியத் தேவை இருக்கிறது

    மேற்கத்தைய கலாசாரத்தின் ஊடுருவல்: யூதஇ கிருஸ்தவர்களது இஸ்லாத்திற்கெதிரான சதிகள் இன்று நேற்று தோன்றிய ஒன்றல்ல. நபி (ஸல்) அவர்களது காலம் தொட்டு இருந்து வரும் ஒன்றாகும். அவர்களது வழித்தோன்றல்களான இன்றைய மேற்குலகு இஸ்லாத்தின் உயிரோட்டத்தையும்இ அதன் தனித்துவத்தையும் சீர்குழைப்பதற்காகவென எல்லாவிதத்திலும் முயன்று வருகின்றன. அந்தவகையில்இ நவ நாகரிகம் என்ற போர்வையில் தந்திரமான முறைகளில் இந்த ஆண் பெண் கலப்பு முறைகளை அறிமுகம் செய்துள்ளனர்;.

  2. ஊடகங்களும் வர்த்தக நிலையங்களும் : மனித வாழ்வுடன் இன்று மிக நெருங்கிய தொடர்பு கொண்ட இரு அம்சங்களே ஊடகங்களும்இ வர்த்தக நிலையங்களும். இவை இரண்டின் மூலமும் ஏராலமான நல்ல ஆரோக்கியமான விடங்கள் கிடைத்தாலும் கூட இவை இரண்டின் மூலமும் கலப்பு நிகழ்வதற்குரிய வாய்ப்பே அதிகம். இன்று வர்த்தக நிலையங்களை நிர்வகிப்பதற்கு கவர்ச்சியான பெண்களை வேலைக்கமர்த்துவது வாடிக்கையாகி விட்டுள்ளதை நாம் அறிவோம்.
  1. சமுகத்தின் தூதநோக்கு சிந்தனையும்இ இஸ்லாமிய சிந்தனையும் இன்மை : தூர நோக்கற்ற எமது சமுகத்தின் செயற்பாதுகளினாலும் இஸ்லாத்தைப் பற்றிய தெளிவு விளக்கமின்மையாலும் இத்தகைய நிலை ஏற்படுகிறது. எதிர்காலத்தைப்பற்றி சிந்திக்கும் சமுகம் முதலில் தமக்கென ஆண்களுக்கு வேறாகவும்இ பெண்களுக்கு வேறாகவுமென பாடசாலைகளை ஏற்படுத்தும். மார்கத்தின் யதார்த்தத்தினை விளக்கவும் ஆண்இ பெண் கலப்பு மூலம் ஏற்படும் பாதிப்புகளை தூரநோக்குடன் சிந்திக்கும் சமுகமாக இருந்தால் நிச்சயம் தீர்வை நோக்கு இதுவரை காலமும் நகர்ந்திருகும். ஆனால்இ அசைவைக் காண முடிவதில்லையென்பது கவலைக்குரியது.

எனவே, இதற்கும் இஸ்லாமிய ரீதியில் தீர்வுகாண வேண்டிய அவசரஇ அவசியத் தேவை இருக்கிறது. இதற்கு முதலில் மஹ்ரமிஇ அஜ்னபி பற்றிய தெளிவை வழங்க வேண்டிய அவசியத் தேவை காணப்படுகின்றது. மக்கள் இவ்வாறான தவறுகளில் ஈடுபட அடிப்படைக் காரணம் அது பற்றிய அறிவு குறைவேயாகும். எனவேஇ குத்பா மேடைகளிலும்இ ஆண்கள்இ பெண்களுக்காண விளிப்பூட்டல் நிகழ்ச்சிகளை ஏற்படுத்திஇ அதன் பாரதூரத்தை விளக்குவது காலத்தின் தேவையாக உள்ளது. முதலில் இஸ்லாமிய சிந்தனைக்குற்பட்டிருக்கும் இயக்கங்கள் மூலம் இந்நடைமுறையை எடுத்து நடப்பதற்குரி வழிவகைகளை ஏற்பதுத்தல்இ அது தொடர்பான விளிப்பூட்டல் கருத்தரங்குகளை பொதுவாக நாடலாவிய ரீதியில் ஏற்பாடு செய்து அதன் மூலம் இப்பிரச்சினைக்குரிய தீர்வை காணமுடியும்.

 

Related Post