முதியோரை மதிக்கும் இஸ்லாம்!

ச. முஹம்மது இல்யாஸ்

வன்தான் அல்லாஹ், அவனைத் தவிர வணக்கத்திற் குரியவன் வேறெவரும் இல்லை. அவன் மறைவான மற்றும் வெளிப்படையான அனைத்தையும் அறிபவன். அவன் அளவிலாக் கருணையும் இணையிலாக்கிருபையும் உடையவன். அவன்தான் அல்லாஹ்! அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவரும் இல்லை. அவன்தான் அரசன்; மிகவும் தூய்மையானவன். முழுக்க முழுக்க சாந்தியுடையவன்; அமைதி அளிப்பவன்; பாதுகாவலன்; அனைவரையும் மிகைத்தவன்; தனது கட்டளையை வலிமையுடன் செயல்படுத்தக் கூடியவன்; பெருமைக்குரியவன். தூய்மையானவன் அல்லாஹ், மக்கள் புரியும் இணைவைப்புச் செயல்களை விட்டு! அந்த அல்லாஹ்தான் படைப்புக்கான திட்டம் வகுப்பவனும் அதனைச் செயல்படுத்துபவனும் அதற்கேற்ப வடிவம் அமைப்பவனுமாவான். அவனுக்கு மிக அழகிய பெயர்கள் இருக்கின்றன. வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொன்றும் அவனைத் துதித்துக் கொண்டிருக்கிறது. மேலும், அவன் யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவுடையவனுமாய் இருக்கின்றான்.

உங்கள் தாய் தந்தையர்களில் எவரேனும் முதுமை அடைந்து விட்டால் அவர்களிடம் கடிந்து பேசாதீர்கள்

உங்கள் தாய் தந்தையர்களில் எவரேனும் முதுமை அடைந்து விட்டால் அவர்களிடம் கடிந்து பேசாதீர்கள்

உங்கள் தாய் தந்தையர்களில் எவரேனும் முதுமை அடைந்து விட்டால் அவர்களிடம் கடிந்து பேசாதீர்கள். ‘சீ’ என்று கூட சொல்லாதீர்கள். மென்மையாக கடந்து கொள்ளுங்கள்’ என திருக்குர்ஆன் எடுத்தியம்புகின்றது.

தற்போதைய கணக்கெடுப்பின்படி உலக மக்கள் தொகையில் 6 கோடி பேர் முதியவர்கள். இந்த எண்ணிக்கை 2025–ம் ஆண்டுக்குள் இருமடங்காகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதியோர் இல்லங்கள் பெருகிவரும் இன்றைய உலகில் மேற்கூறிய இறை வசனம் கூறும் கருத்து எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிய முடிகிறது.

நபி (ஸல்) ஒருமுறை, ‘சிறியோர்களுக்கு இரக்கம் காட்டாதவரும் முதியோருக்கு மரியாதை செய்யாதவரும் நம்மை சார்ந்தவன் அல்ல’ என்றார்கள்.

பெரியவர்கள், சிறியவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும். சிறியவர்கள் பெரியவர் களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்ற இரண்டுமே முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில், நம்முடைய சமுதாயத்தில் இரு பெரும் பிரிவுகள் என்பன இவை இரண்டும் தான்.

மேற்கூறிய நபிமொழி என்பது இருபிரிவினருக்கும் இடையே ஒரு பாலம் போல அமைகிறது. முதியவர்களுக்கு உரிய மரியாதை சிறியவர்கள் கொடுக்கும் போது சிறியவர் களுக்கு காட்ட வேண்டிய இரக் கத்தை முதியவர்கள் காட்டுவார்கள்.

நபி (ஸல்) அவர் களுடைய தாய் தந்தை அவர்கள் சிறு வயதில் மரணித்து விட்டனர். நபி (ஸல்) அவர்களுக்கு பால் புகட்டிய ஹலீமா (ரலி) அன்னையார் அவர்கள் ஒருமுறை நபி (ஸல்) அவர்களின் திருச்சமூகத்திற்கு வந்தார்கள். அப்பொழுது நபிகளார் எழுந்து சென்று தன் மேல் போத்தியிருந்த துண்டை எடுத்து கீழே விரித்து அதில் தனக்கு பாலூட்டிய ஹலீமா (ரலி) அவர்களை அமரச் செய்தார்கள்.

இது தான் தாய்க்கு செய்ய வேண்டிய கண்ணியம்.

ஒருவன் தன் தந்தைக்கு எல்லாமே தெரியும் என்று நினைப்பது 10 வயதிற்கு முன்னும் 40 வயதிற்கு பின் மட்டுமே. ஆனால் அப்பொழுது அதைத் தெரிந்து ஒரு பயனும் இருக்கப் போவதில்லை.

நாம் நம் பெற்றோர்களை நம் பிள்ளைகள் முன்பு மரியாதைக்குறைவாக நடத்தக்கூடாது. அது அவர்களது மனதில் பதிந்து விடும். அவர்கள் நாளை நம்மையும், நம்முடைய முதுமையின் பொழுது இப்படித்தான் அழைக்கப் போகிறார்கள் என்பதை நாம் நினைத்துப் பார்க்க போவதில்லை.

முதுமை என்பது தள்ளாமையின் வயது. அவர்களால் எதுவும் செய்ய இயலாது. சிறு சிறு விழாக்களின் போது குடும்பத்தில் உள்ள பெரியவர்களை சந்தித்துப்பேசி அன்பையும் பரிசுகளையும் பரிமாறிக்கொண்டு அவர்களை மகிழ்விக்க நாம் முயற்சிக்க வேண்டும்.

பிள்ளைகள் செய்யும் 100 தவறுகளை பெற்றோர் மன்னிக்க தயங்குவதில்லை. ஆனால் பெற்றோர் தெரியாமல் செய்யும் ஒரு தவறைக் கூட பிள்ளைகள் மன்னிக்க தயாராவதில்லை.

என்ன விந்தை, இந்நிலை மாறவேண்டும்.

நபி (ஸல்) சொன்னார்கள், ஒரு கூட்டத்தில் இருக்கும் முதியவர் அவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசியை போன்றவர். இதனை எப்பொழுது நாம் புரிந்து கொள்கிறோமோ அப்பொழுது நம்மீது இறையருள் மழை பொழியும்’.

ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் கூறியதாக அழகான முறையில் கூறிக்காட்டுவார்கள். ‘நீங்கள் உணவளிக்கப்படுவது எல்லாம் உங்களில் பலகீனமானவர்களைக் கொண்டு தான்’ என்றார்கள்.

முதியோர்கள் தான் பலகீனமானவர்கள் என்பதிலே இருவேறு கருத்திற்கு இடமிருக்க முடியாது. நாம் நாமாக சம்பாதிக்கிறோம் என்று நினைத்துக் கொள்கிறோம். ஆனால் இறைவனோ உங்களுடைய அத்தியாவசிய தேவை முதல் ஆடம்பர தேவை வரை அனைத்தையும் நிறைவேற்றுவது பலகீனமானவர்கள் மூலமாகத்தான் என்கிறார்.

அன்று உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்   காலத்தில் மழை பொய்த்தது. அப்போது உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள்:

‘இறைவா! எங்களுக்கு நீ நபிகளாரின் தந்தையின் சகோதரரான அப்பாஸ் (ரலி) அவர்களின் பொருட்டினால் மழையை பொழியச்செய்வாயாக’ என்றார்கள். மழையும் பொழிந்தது.

காரணம் அன்னார் முதியவர் என்பது தான் என்பதனை வரலாறுகளின் வாயிலாக நாம் காணமுடிகின்றது.

மேலும் நம்முடைய சமுதாயத்திற்கு முந்தைய சமூக மக்கள் பாவம் செய்த உடனேயே அழிக்கப்பட்டார்கள். ஆனால் நாம் செய்யும் பாவத்திற்கு கொஞ்சமும் குறைவில்லை. ஆனால் நாம் அழிக்கப்படாமல் இருக்கின்றோம். அதற்கு காரணம் என்னவென்று நாம் சிந்தித்ததுண்டா?

ஆம்! அதற்கு காரணமும் முதியோர்கள் தான் என்றால் நம்புவீர்களா?

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள், ‘உங்களில் கூன் விழுந்த முதியோர்கள் மட்டும் இருந்திராவிட்டால் உங்கள் மீது வேதனை கூடியிருக்கும்’ என்றார்கள்.

‘சீ’ என்று கூட சொல்லாதீர்கள்.

‘சீ’ என்று கூட சொல்லாதீர்கள்.

நாயகத்தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களின் தந்தை தன் தள்ளாமை வயதில் நபி (ஸல்) அவர்களை பார்க்கவேண்டும் என பேராவல் கொண்டார்கள். அந்த பேராவலை நிறைவேற்றம் பொருட்டு அவர்களும் தன் தந்தையை நபியின் திருச்சமூகத்திற்கு தூக்கிக்கொண்டு வந்தார்கள்.

இதைக்கண்ட இரக்கமே உருவான இறைவனின் திருத்தூதர் ‘என்ன அபூபக்கரே! இப்படிச்செய்து விட்டீர்! நீர் சொல்லியிருந்தால் உங்கள் தந்தையைப்பார்க்க நானே வந்திருப்பேனே’ என்றார்களாம்.

வலது புறத்திலிருந்து தான் எதையும் ஆரம்பிக்க வேண்டும் என்பது இஸ்லாம் காட்டும் வழிமுறை. அது செருப்பு அணிவதாயினும் சரி, தலைமுடி சீவுவதாக இருப்பினும் சரி.

ஆனால் முதியவர் ஒருவர் இடப்புறம் அமர்ந்திருந்தால் அவருக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பதும் இஸ்லாம் நமக்கு காட்டும் வழிமுறையாகும்.

இஸ்லாம் காட்டும் வழிமுறைகளை நம் சமூகம் முழுமையும் பின்பற்ற வல்ல அல்லாஹ் உதவி புரிவானாக.

ச. முஹம்மது இல்யாஸ் பிலாலி, பேராசிரியர், அரூஸிய்யா அரபிக்கல்லூரி, கீழக்கரை.

Related Post