பணிப்பெண் பாவையர்..!

– மு.அ. அப்துல் முஸவ்விர்

நாம் கத்தாமா என்றும் வேலைக்கார் என்றும் கூறுகின்றோமே உண்மையில் அப்படி வேலைக்காரர் என்றொரு இனமே கிடையாது.

நாம் கத்தாமா என்றும் வேலைக்கார் என்றும் கூறுகின்றோமே உண்மையில் அப்படி வேலைக்காரர் என்றொரு இனமே கிடையாது.

ம்ப்பா.., கத்தாமா ஒருத்தி இருந்தால் சொல்லேன்! வேலைக்கும் போய்ட்டு, வீட்டையும் கவனிச்சுக்குறது ரொம்ப கஷ்டமா இருக்குப்பா. ஒரு வருஷத்துலே நான்கு கத்தாமா மாறி;ட்டாங்க!’ இது மத்தியில் நாட்டு வேறுபாடு இன்றி குவைத்வாழ் அந்நியர்களாக இருக்கம் நெருங்கிய தோழியர் இல்ல வட்டங்களில் அடிக்கடி வளைய வரும் நொந்துபோன அங்கலாய்ப்புக்கள். வெளிநாடுகளில் குடும்பத்தினருடன் வசிப்போர் என்று இல்லை.., தத்தமது தாய்நாடுகளிலும் இதேபோன்று வருத்தங்கள்.

மாறிவரும் தாராளமயமாக்கல் உலகம் இந்த பிரச்னையை மேலும் சிக்லாகிவிட்டிருக்கின்றது.

ஆனால், நாம் கத்தாமா என்றும் வேலைக்கார் என்றும் கூறுகின்றோமே உண்மையில் அப்படி வேலைக்காரர் என்றொரு இனமே கிடையாது.ஏதோ அவர்களது விதி அல்லது தன்மானத்தோடு  தமது வாழ்வை நகர்த்த விழையும் பெண்கள்,தமது சொந்தக்கால்களில் நிற்க வேண்டும் என்று வைராக்கியத்துடன் வாழ நினைக்கும் பெண்கள் அல்லது வாழ்க்கைத் துணையால் கைவிடப்பட்டு தனது மழலைகளுக்காக வாழ நினைக்கும் பெண்கள்… இதுபோன்ற வகையினர்தான் நமது இல்லங்களில்…, நமக்காக உழைத்து.., தம் வயிற்றைக் கழுவ வரும் தியாக உள்ளங்கள்!

அவர்களுடன் நமது நடத்தைகள்தான் நம்முடன் இணைந்து.. நம்மைவிட்டு விலகிச் செல்ல விரும்பாமல்..நமக்காக உழைத்து.. தம் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ளச் செய்யலாம்!அதற்காக நாம் என்ன செய்யலாம்?

அவர்களின் ஏதேச்சையான சிறு தவறுகளுக்கும் உங்களின் கடும் விமர்சனம்தான் அவர்களை வேறு இடம் செல்ல தூண்டுகின்றது.

முதலில் அவர்களை நம் குடு;ம்ப உறுப்பினர்களில் ஒருவராகக் கருதி மரயாதையுடன் பழகக் கற்றுக் கொள்ளுங்க்!

அவர்களது குடும்பப் பின்னணி,நாட்டில் வசிக்கும் பகுதி,தொடர்புகள், எண்ணங்கள், விரப்பங்கள் ஆகியவற்றைக் கேட்டுத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

வீட்டில் விசேஷ சிகழ்வுகளில் அவர்களையும் கலந்துகெர்ளச் செய்யுங்கள். அந்நிகழ்ச்சகளுக்கான உடல்ரீதியான கடின உழைப்ப அவர்களுடையதே என்பதை மறவாதீர்கள்.

கெட்டுப்போன பண்டங்களையும் பழையதாகிப்போன குளிர்சாதனப் பொருட்களையும் நீங்களே தொடாதபோது அவர்களுக்கு உண்ணத் தராதீர்கள்.

அவர்களுக்க குழந்தைகள் இருப்பின், அவர்களையும் உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து உணவளியுங்கள்.

துணிகள் மட்டுமல்ல, சற்றே பழசாகிப்போனாலும், நல்ல நிலையில் இருக்கும் போர்வைகள், தலையணைக்,மிதியடிகள் உள்ளிட்ட உபயோகமான பொருட்ககையும் அவர்களுக்குத் தந்து உதவுங்கள்.

அவர்களுக்கு உடல்நலமில்லாத நேரங்களில், உங்கள் ஒரு நாள் சம்பளம் போனாலும் பரவாயில்லை என்று, நீங்கள் வீ;ட்டில் இருந்து வேலைகளைக் கவனித்து அவர்களுக்கு ஒருநாளாவது ஒய்வு கொடுங்கள்.

அவர்களுடைய உறவினர்களோ அல்லது உங்களுக்கம் அவர்களுக்கும் நன்கு பரிச்சயமானவர்களோ உங்கள் இல்லங்களுக்கு வந்தால், அவர்களையும் உபசரிங்கள். அல்லது அவர்கள் வீ;ட்டுக்கு உங்களை அழைத்தால் றீங்களும் சென்று வாருங்கள். கவுரவம் பார்க்காதீர்கள்!

நம் வீட்டில் திடீரென உறவினர்களோ,நண்பர்கள் பட்டாளமோ குவிந்தால்…. அவர்களிடம் அவர்களை அறிமுகப்படுத்தி வையுங்கள். ‘எங்களவள் வீட்டை சுத்தப்படுத்தினா வீடு ‘அமீர் பேலஸ்’ மாதிரி ஜொலிக்கும் போங்க..! பாத்திரங்கள் துலக்கினால்..,கண்ணாடியா ஜொலிக்கும்..! எங்கள் குழந்தைகள் அவளிடம் அடம் பிடிக்காமல் சாப்பிடுவாங்க!’ என்று பெருமையாக அவர்களின் காதுபட அவர்களைப் புகழுங்கள். ஆனால், அதில் ஏளனமோ, குத்தலோ, சுயஇலாபமோ கிஞ்சுற்றும் தொங்கலாக இருக்கக் கூடாது.

இயன்றவரை அவர்களின் குழந்தைகளுக்க கல்வி உதவிகளைச் செய்யுங்கள். அவர்களுக்க பள்ளிப் புத்தகங்கள் வாங்கித் தருவது, நீங்கள் நன்கு படித்தவராக இருப்பின் (உங்களுக்கு நேரம் கிடைப்பின்) அவர்களின் பிள்ளைகளுக்கம் பாடங்கள் சொல்லிக் கொடுப்பது போன்ற அக்கறைகளைக் கையாளுங்கள்!

பிறர் எதிரில், குறிப்பாக உங்கள் பிள்ளைகளின் எதிரே, ‘வேலைக்காரி.., வந்துட்டா..!’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தாமல்.. அவர்களுடைய பெயர் சொல்லியே.., ‘ருகையாக்கா.. அல்லது ருகையா தாத்தா வந்துட்டாங்க..!’, ஜெயாம்மா.. அல்லத ஜெயா தாத்தா வந்துட்டாங்க என்று கூறப் பழகுங்கள்.., உங்களின் பிள்ளைக் கண்மணிகளையும் அவ்வாறே பழக்குங்கள்!

அனைத்துக்கும் மேலாக, எங்களது வாழ்வின் அனைத்து அம்சங்களுக்கம் முன்மாதிரியாக இருக்கும் நம்பெருமானார் (ஸல்) அவர்கள், தமது பணியாளராக இருந்த அனஸ் (ரலி) அவர்களை எவ்வாறு நடத்தினார்கள் என்று நீங்கள் சற்று அவர்களின் வாழ்க்கைச் சம்பவங்களினூடே வளைய வந்தால், பணியாளர் பெருமையும் முதலாளியின் தன்னடக்கமும் தெரியவரும்.

அனஸ் (ரலி) அவர்களின் வாய்மொழிச் சான்று பணியாளருடனான எமது தொடர்புகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அதாரம்!

உங்கள் பணியாளர்கள் முஸ்லிம்களாக இருந்தால், அவர்களின் மார்க்க கடமைகளுக்கும் முக்கியத்துவம் தாருங்கள். முஸ்லிமல்லாதவர்களாக இருந்தால், கொள்கைகளில் சமரசம் செய்துகொள்ள வேண்டாம். ஆனால், அதேவேளை, அவர்தம் உணர்வுகளையம் காயப்படுத்த வேண்டாம்! அவர்களுடன்,அழைப்புப்பணிக்கான எந்தவொரு வாய்ப்பும் உங்களுக்குக் கிடைப்பின் அதனைத் தவற விடாதீர்கள்!

எந்தநிலையிலும் அவர்களிடம் அடிமை மனோபாவத்தைக் காட்டாதீர்கள்.

இனி, உங்கள் உள்ளம் ஒரு கேள்வி கேட்கக் கூடும். ஏன்னதான் கவனித்தாலும், ஒருசிலர் எமக்கு துரோகம் இழைத்து ஏமாற்றிவிடுகின்றார்களே..!

அப்படிப்பட்ட ஐயம் எழுந்தால் நாசூக்காக அவர்களை திருத்துங்கள். அல்லது உங்கள் முன்னெச்சரிக்கையைக் கைகொள்ளுங்கள்! எந்தவொரு நிலையிலும் ஆதிக்க மனப்பான்மையும் அரக்கத்தனமும் உதவாது..! மாறாக, அழகிய நடத்தையே எம் இல்லங்களை அழகுறச் செய்யம் என்பதை நினைவிற் கொள்ளுங்கள்!

 

Related Post