தேடிப் போகும் யாவும் கூடியே வரும் எமை நாடி…!

– அப்துர் ரஹீம்

தேடிப் போகும் யாவும் கூடியே வரும் எமை நாடி...!

தேடிப் போகும் யாவும் கூடியே வரும் எமை நாடி…!

சைகளும் அடைதல்களும் விருப்பங்களும் வெற்றிகளும் இவ்வுலகம் காணும் இயல்புகளே!எப்போது இவைகள் அரங்கேறும்??அவனி எப்பொது அவற்றை ஏற்றுக் கொள்ளும..?அவன் முயற்சிகள் முதுகெலும்பாய் நின்று , அக்கபூர்வ திட்டங்கள்அழகாய் தீட்டி.., இலட்சியங்களை அடைய அவன் அதற்குள் கரைய வேண்டும். அப்போது இவைகள் அதன் பாதங்களில் சரணடையும்.அதற்கு யாரும் விதிவிலக்கன்று!

அத்தனைக்கும் ஆசைப்படுவது தவறில்லை. ஆனால், உங்கள் விருப்பத்திற்கும் தேவைக்கும் இடையிலுள்ள வித்தியாசத்ததை இனங்கண்டு கொண்டால் நிச்சயம் வாழ்வில் வெற்றி பெற்றுவிடலாம்.

அன்றாட வாழ்வில் நீங்கள் முக்கியமாக கருதும் செயல்பாடுகளைப் பட்டியலிடுங்கள். சிலருக்கு நன்றாக படித்து நல்ல வேலைக்குப் போக வேண்டும். ஆமைதியான குடும்ப வாழ்க்கை,நெருங்கிய நண்பர்கள்,தேவையான உணவு,உடை,இருப்பிடம் இருந்தால் போதும்.இன்னும் சிலர் இளம்வயதில் வாழ்க்கையை ஆடம்பரமாக அனுபவிக்க போதிய பணத்தை விரும்பலாம்.

இவ்வாறு ஒவ்வொருவரின் விருப்பமும் தேவையும் வித்தியாசப்படலாம்.பள்ளி,கல்லூரிகளில் படிக்கும் காலத்திலேயே எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை ஒருவர் அறிந்துகொள்வது அவசியம். அப்போதுதான் அதற்கேற்ப கல்வியையும்,வேலைவாய்ப்பையும் பெற திட்டமிட்டு முயற்சி செய்து வெற்றி பெற முடியும்.

அதற்கான தேவைகள் என்ன?

அடிப்படைத் தேவைகள்

உங்களது அடிப்படைத் தேவை எது என்பதை முடிவு செய்யுங்கள் உணவு,உடை,இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகள் அனைவருக்கும் பொதுவானதாகவே உள்ளது.  இத்தகைய தேவைகள் வாழ்வதற்கு அடிப்படையாக இன்றியமையாதவைகளாக கருதப்படுகின்றன. இவை பூர்த்தியாகும்போது மற்ற டேல்களில் கவனத்தை முழுமையாக செலுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.

ஏற்புடைய சூழல்…

ஆசைப்பட்டால் மட்டும் போதாது, அதனை அடையக்கூடிய வழிமுறைகள் என்ன என்று முயற்சி செய்வது மிக அவசியம்.எனவே, இதற்கான களத்ததை, அதாவது நினைத்ததை நிறைவேற்றும் ஏற்புடைய சூழல் அமைய வேண்டும். ஒவ்வொரு இளைஞனின் தேவை பூர்த்தி அடையும் வகையிலும், திறமை முழுமயாக வெளிப்படும் வகையிலும் ஏற்புடைய சூழலை உருவாக்கிக் கொள்வது முக்கியமான ஒன்றாகும்.

ஓவ்வொரு இளைஞனுக்கும் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும் போது அதனைப் பயன்படுத்தி பணி வாய்ப்புக்களைப் பெற முடியும்.

விருப்பங்கள்

விருப்பங்கள், தேவைகளிலிருந்து மாறுபட்டவை.விருப்பம் என்பது அவரவர் உளப்பாங்கிற்கேற்ப அடைய நினைப்பது.ஆனால். அடிப்படைவ hழ்க்கைக்கு அவை கட்டாயம் கிடையாது.உடை என்பது தேவைதான்.ஆனால், அவை நவீன வடிவமைப்பில் இருக்க வேண்டும்,உயர்ந்தரக ஆடையாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் அவரவர் விருப்பம் சார்ந்தது.

இதுபோலவே, புதிய வாகனம், புதிய இசைக்கருவி,புதிய தொலைபேசி, குளிர்சாதனப் படெ;டி என்று பல்வேறு பொருட்களை வாங்கிப் பயன்படுத்த நினைப்பது தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம்.வாழ்வதற்குக் கட்டாய தேவை எதுவொ அதை ‘அடிபப்டைத் தேவை என்றும், பிறவற்றை ‘விருப்பம் என்றும் கூறலாம். ஒவ்வொரு இளைஞனுக்கும் தனக்க எது தேவை விருப்பம் எது என்று இனங்காணத் தெரிந்திருக்க வேண்டும்.

கல்வி கற்கும் இடத்திலும்.வீட்டிலும்,நண்பர்கள் மத்தியிலும் தனக்கென தனி அங்கீகாரம்,அடையாளம் இருக்க வேண்டும் என்பது இன்றைய இளைஞர்களின் மனநிலையாக உள்ளது. இவை சமூகரிதியாகவும்,உணர்வுரீதியாகவும் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் சமூகத்தெவைகள் என்று கூறலாம்.

பிறரால் ஏற்றுக்கொள்ளப்படுவது, அதாவது, சமூக அங்கீகாரம் என்பது மிகவும் முக்கியம்.படிக்கும்போது சக மாணவ-மாணவியரிடம் நட்பறவடன் பழகுதல்,ஆசிரியர்களிடம் கண்ணியமாக நடந்துகொண்டு அவர்களது அன்பையும்,பாராட்டுக்களையும் பெறுதல் போன்ற அனைத்தும் மாணவ-மாணவிருக்கும் தேவையாகும். நம்மைச் சுற்றி உள்ளவர்களின் பாராட்டுதலும்,அங்கீகாரமும் கிடைக்கும்போது மனம் மலர்;ச்சி அடைகின்றது.

 

 

Related Post