கல்வி பெறாத அவள் உலகம்.., காணுவது அவலம்….!

ஸினூஃபா அன்ஸார்

அடுப்புக் கரியும் அழும் குழந்தையுமே அவளுக்குத் தெரியும் .  சமையலறைக்கே அவள் சரித்திரம் படைத்தாள். சரித்திரத்தில் படைக்க அவள் சித்திரமாகவும் தீட்டப்படவில்லை. –  அன்றிருந்த அவலம் இது! அது அவனி அறியும்!!

அடுப்புக் கரியும் அழும் குழந்தையுமே
அவளுக்குத் தெரியும் .
சமையலறைக்கே அவள் சரித்திரம் படைத்தாள்.
சரித்திரத்தில் படைக்க அவள் சித்திரமாகவும் தீட்டப்படவில்லை. –
அன்றிருந்த அவலம் இது! அது அவனி அறியும்!!

 

வசந்தம்

அடுப்புக் கரியும் அழும் குழந்தையுமே
அவளுக்குத் தெரியும் .
சமையலறைக்கே அவள் சரித்திரம் படைத்தாள்.
சரித்திரத்தில் படைக்க அவள் சித்திரமாகவும் தீட்டப்படவில்லை. –

அன்றிருந்த அவலம் இது! அது அவனி அறியும்!!

விஞ்ஞானம் பெற்று.,
வுpண்ணுலகமும் கண்டாள்.
மருத்துவமும் பெற்றாள்..,
வேதியலும் கற்று வென்றாள்..!

எஞ்ஞானம் கற்றும் …
அவள் சுதந்திரத்தை சுக்காக்கும்
சூத்திரதாரர்கள் இல்லாமலில்லை…
இக்காசினியில்..!
இன்றிருக்கும் சமூகஇழிவு இது! இதனையும் அண்டம் அறியும்!!

அவள் ஒன்றும் ஒடுக்கப்படவேண்டியவளல்ல..!
அவள் கல்வியை முடக்கி தடுக்கப்படவேண்டியவளுமல்ல..!!
அவள் உரிமைகள் நீதிமன்ற வாயிலிலுமல்ல..!!
நியாய சுதந்தரசுலோகமேந்தும் ஊர்வலமும் அவளுக்கில்லை..

அன்றே வரையறுக்கப்பட்டது அவள் கல்வியும், உரிமையும்.!
அதனை அழகுற தீட்டித் தந்து..,
அவளைக் காத்து நிற்கும்காவிய மார்க்கமாய்..,
அவளுக்காக பேசும் அவள் மார்க்கம் இஸ்லாம்..!

Related Post