எங்கே செல்லும் உன் பாதை..? அங்கே எழுதப்படும் வெற்றியின் சரிதை..!

அப்துல்லாஹ்

 

இப்பூவுலகில் வாழப் பிறந்தவன் மனிதன்! ஆனாலும், அவனது வாழ்வு எப்படியும் அமையலாம் என்பதல்ல இந்த வாழ்தலின் பொருள்!

இப்பூவுலகில் வாழப் பிறந்தவன் மனிதன்! ஆனாலும், அவனது வாழ்வு எப்படியும் அமையலாம் என்பதல்ல இந்த வாழ்தலின் பொருள்!

விருப்பங்கள் மானுட மதிப்புக்களை வடிவமைக்கும் வரைகலைப் பொக்கிஷங்கள்!ஆகுமான நல்அவாக்கள் நானிலம் போற்றும் நேசனாக ஒருவனை முழுமைப்படுத்தும்!வித்தியாசத்தின் பெயரில் ஆரத்தழுவும் நாசகர ஆசைகள் அதே மானுடனை, சத்தியத்தைப் பொறுத்து ஊனமுற்றவனாக ஆக்கிவிடும்!இது மானுட வரலாற்றின் கண்கூட்டு உண்மை!

வாழ்வியல் மதிப்பு

ஒவ்வொருவரும் அவரவர்களின் தேவைகளையும்,விருப்பங்களையும் பூர்த்தி செய்துகொள்ள பயன்படுத்தும் அணுகுமுறை முக்கியமாகும்.இது அவரவர் கொண்டுள்ள வாழ்வியல் மதிப்பு சார்ந்த ஒன்றாகும்.

நல்ல குடும்ப வாழ்க்கை,சுதந்தர உணர்வு,நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்துகொள்ளுதல்,உடல்-மன ஆரோக்கியம் போன்றவை பொதுவான வாழ்வியல் மதிப்புக்களாக கருதப்படுகின்றது.

பகிர்ந்துகொள்ளும் வாழ்வியல் மதிப்புக்கள்

ஒருவரது வாழ்வியல் மதிப்புக்கள் அனைத்தும் அவரது விருப்பத்தின்படியே அமைகின்றது.அதாவது நீங்கள் யாரை முக்கியமாகக் கருதுகின்றீர்களோ, அவர்களைப் போலவே வாழ ஆசைப்படுகின்றீர்கள்.சிலர் தங்களது பெற்றோர்,ஆசிரியர்கள்,மதகுருக்கள் ஆகியோரை முன்மாதிரியாகக் கருதலாம்.உண்ணும் உணவு,பணத்தை செலவிடுதல்,மதப்பற்று,கல்வி,மணவாழ்வு போன்ற அனைத்து செயல்பாடுகளும் உங்களது குடும்பம் சார்ந்தவையே! உங்களுடைய குடும்பத்திற்குக் கிடைத்த வாழ்வியல் மதிப்பு என்பது சந்ததி மற்றும் பாரம்பர்ய கலாச்சாரங்களின் தாக்கத்தின் வெளிப்பாடாகவே பெரும்பாலும் இருக்கும்.

இதில் சிலர் வித்தியாசமாகவும் செயல்படலாம்.இதற்கு அவரது ஆர்வம்,அனுபவம்,வாழும் சூழல் அகியவை வித்தியாசமாக அமைவது முக்கிய காரணம் அகும்.சிலர் ஆரோக்கியமான உணவுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள்.சிலர் கடினமாக உழைத்து நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் அளிப்பார்கள்.சிலர் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள்.சிலர் எதிலும் நாட்டமில்லாமல் பொழுதைக் கழிக்க விரம்புவார்கள்.

உங்களுடைய சுயமதிப்பு மற்றும் மற்றவர்களின் வாழ்வியல் மதிப்பு அகியவற்றை ஒருவருக்கொருவர் அறிந்திருந்தால்தான் உறவுகள் மேம்படும்.

எதைப் பின்பற்றுவது?

ஒவ்வொருவரும் அவரவருடைய தனிப்பட்ட அனுபவம் சார்ந்த வாழ்வியல் மதிப்புக்களை அறிந்திருந்தால்தான் எதற்கு முக்கியத்துவம் அளிக்க முடியும் என்று அறிந்து அதன்படி முடிவெடுத்து செயல்பட முடியும்.சில நேர்வுகளில் உங்களது குடும்பம் மற்றும் சமுதாய கலாச்சாரம் ஆகியவை முக்கியத்துவம் பெற்றிருக்கும்.உங்கள் நண்பர்கள் வேறு வகையான பழக்கவழக்கங்களுக்கு முன்னுரிமை அளி;க்கலாம். இதில் எதனைப் பின்பற்றுவது என்ற குழப்பம் ஏற்படலாம்.

சில வாழ்வியல் மதிப்புக்கள் உங்களுக்கு எப்போதுமே முக்கியமானவையாக தோன்றலாம்.சுதந்தரமாக செயல்படுதல்,இயற்கையை ரசித்தல், எப்போதும் நாணயமாக நடந்துகொள்ளுதல், விலங்குகளிடம் அன்பு பாராட்டுதல் போன்றவை எப்போதும் முக்கியமானவைகளாக சிலருக்குத் தோன்றலாம்.ஆகவே. நீங்கள் எந்த வாழ்வியல் மதிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கின்றீர்களோ அதுவே உங்களது செயலை நிர்ணயிக்கின்றது.

ஒரு படிப்பையோ,வேலையையோ தேர்வு செய்யும்போதும் உங்கள் விருப்ப்ங்கள்,வாழ்வியல் மதிப்புக்கள் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றது. தேர்வுக்குப் பின் உயர்கல்வி,வேலைக்கு முயற்சி செய்யும்போது இந்தக் கருத்துக்களை மனத்தில் நிறுத்தி ஆலோசனை செய்து அவரவரது மனோதர்மத்தின்படி செயல்பட்டால் நிச்சயம் ஒளிமயமான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள முடியும்.

 

Related Post