இஸ்லாத்தில் குடும்ப வாழ்க்கை

ஒளிப்படம்: ஐ.எஃப்.டி.

இஸ்லாத்தில் குடும்ப வாழ்க்கை:-

http://youtu.be/RyrRg2G-IPU

தவறுக்கும், உண்மைக்கும், சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் உள்ள வேறுபாடுகளை பிரித்துணரும் ஆற்றல் என்னிடம் இருந்தது. எனினும் இஸ்லாமைப்பற்றி, அது உண்மையாக அறிந்து கொள்ள வேண்டும். அதே சமயம், நான் அதை ஏற்று பின்பற்றப்பட வேண்டிய மார்க்கம்தான் என்ற நோக்கில் சிந்திக்க முன்வரவில்லை. ஏனெனில் இஸ்லாத்தைப்பற்றி அது ஒரு யுத்த மார்க்கம். கடினத்தை விரும்பும் மார்க்கம் எனவும், அதனைப் பின்பற்றும் முஸ்லிம்கள் கொலை, கொள்ளை, அநியாயம் போன்றவைகளை ஆதரிக்கும் பயங்கரவாதிகள் எனவும் தான் விளங்கி இருந்தேன்.

எதிர்பாராத விதமாக கண்ணியமான இஸ்லாமியக் குடும்பத்துடன் ஒரு தொடர்பு ஏற்பட்டது. அவர்களின் வாழ்க்கை முறை, இல்லற வாழ்க்கையில் அமைந்திருந்த ஒழுக்க முறைகள், குழந்தைகளை பராமறிப்பது, அவர்கள்மீது அன்பு செலுத்துவது போன்றவைகளைப் பார்த்து அப்படியே அசந்து போனேன்.

கணவன் மனைவி இருவரும் ஒருவரையொருவர் அன்பு காட்டி வாழ்கிறார்கள். ஒவ்வொருவரும் தத்தமது கடமையை உணர்ந்து வாழ்கிறார்கள். கணவன் மனைவி, ஒருவர் மற்றொருவருக்குச் செய்யும் பணிகளை கண்ணியத்துடன் செய்து கொள்கிறார்கள். இந்நிலை அமெரிக்காவின் பெரும்பாலானக் குடும்பத்தில் காணப்படுவதில்லை.

இஸ்லாத்தில் பெண்களுக்கென தனிப்பட்ட சில சட்டதிட்டங்கள் இருக்கின்றன. அவைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தமானது எது? என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, பட்டென்று கிடைத்த பதில்; ‘பர்தா அணிவது!

அபூ நாஹிதா லுபானா

 

Related Post