அன்புள்ள சகோதரிக்கு ஒரு அழகிய மடல்..!

தமிழில்: ஸினூஃபா அன்ஸார்

அன்புள்ள சகோதரிக்கு ஒரு அழகிய மடல்..!

பொறுமையாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

பொறுமையாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

பொறுமையாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

வாழ்வு என்பது இன்பத்தையும் துன்பத்தையும் கொண்டது. எனவே எவ்வாறான நிலையிலும் தளர்ந்து விடாது பொறுமையுடனும் சகிப்புதத்தன்மையுடனும் நடந்து கொள்வது அவசியமாகும். இது வாழ்வை பிரகாசிக்கச்செய்வதுடன் தன் பொறுப்புக்களைத் தைரியத்துடன் முன்னின்று நிறைவேற்றச்செய்யக்கூடியது.

உங்களைச் சூழ இருப்பர்களுடன் பாசத்துடனும் கனிவுடனும் நடந்து கொள்ளுங்கள்.
அவர்களின் தேவைகளையெல்லாம் பூரணமாக நிறைவேற்றிக்கொடுங்கள். வீட்டிலுள்ளவர்களுடன் மட்டுமன்றி வரக்கூடிய விருந்தினர்களுடனும் இரக்கத்துடன் நடந்து கொள்ளுங்கள். அவைகளுக்காகவே நீங்கள் நியமிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதனையும் உங்கள் மனதில் அடிக்கடி பதித்துக்கொள்ளுங்கள்.

எல்லா நிலையிலும் இறைவனுக்கு அஞ்சுவது அவசியமாகும்.
படைப்பாளன் இறைவன் நம்மை எல்லா சந்தர்பத்திலும் கண்காணிக்கிறான். நீங்கள் சகல பாவங்களிலிருந்தும் உங்களை பாதுகாத்துக்கொள்ளும் போது அவ்விறைவன் நம்மை பாதுகாப்பான் என்பதை விசுவாசியுங்கள். அவனின் நியமனத்தின் மூலமே உங்கள் வருகை இடம்பெற்றுள்;ளது. இவ்வாய்ப்பு உங்களுக்குக்கிடைத்த ஒரு பெரும் அருளாகும். இந்த வாய்ப்பை உங்களுக்குப் பயன்மிக்கதாகவும் பிரயோசனமானதாகவும்; ஆக்கிக்கொள்ளுங்கள். இவ்வாய்ப்பை வீணாக்குவதன் மூலம் நீங்கள் நஷ்டப்படுவீர்கள், கைசேதப்படுவீர்கள்.

உங்களை கவனிப்பதிலும் பாதுகாப்பதிலும் நீங்கள் ஆர்வம் செலுத்துங்கள்.
அதாவது உங்களின் உடல் உடை தங்குமிடச்சுத்தங்கள் மிகவும் பிரதானமானது. அவர்கள் அதை பெரிதும் விரும்புவார்கள், எதிர்பார்ப்பார்கள். மேலும் எல்லா பாவங்களிலிருந்தும் உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள். பிற ஒரு நாட்டில் உங்கள் பாதுகாப்பிற்கான உத்தரவாதம் உங்களிடம் மட்டுமே உள்ளது என்பதை நினைவில் வைக்கவும்.
மேலும் சகோதரி இவ்வுபதேச வாசகங்கள் உங்களுக்கு இக்குவைத் நாட்டில் சிறப்புமிக்கமிக்க வாழ்க்கையை அமைத்துத்தரும் என்று கருதுகிறோம். அவ்வாறே அமைய வேண்டி பிரார்தித்து விடைபெறுகின்றோம்;.

Related Post