நல்லதொரு குடும்பம்..! அது இறையருள் பெறும்..!

-ஜியோ

“இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!”. “இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!”. “இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!”. “இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக!” -- திருக் குர்ஆன்

“இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!”. “இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!”. “இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!”. “இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக!” — திருக் குர்ஆன்

இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!”. “இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!”. “இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!”. “இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக!” — திருக் குர்ஆன்

ஒரு குடும்ப வாழ்க்கையில் ஆண், பெண், குழந்தைகள், உறவினர்கள் ஆகியோர் அடங்குவர். இது பல கிளைகளைக் கொண்டது. மேலை நாட்டுக் கலாச்சாரத்தை எடுத்துக் கொண்டால், அது ஒரு சீர் குலைந்த கலாச்சாரமாகும். ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அழகிய சமூக அமைப்பை நமக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

இஸ்லாமியத் திருமணம்

இஸ்லாமிய குடும்ப வாழ்க்கையில் திருமணம் தவிர்க்க முடியாத நிகழ்ச்சியாகும். இஸ்லாத்தில் திருமணத்தை வெறுப்பவர்கள் அரிதாகவே காணப்படுவதிலிருந்து திருமணத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம். திருமணங்கள் இரு காரணங்களுக்காக நடத்தப்படுகின்றது. அல்லாஹ் கூறுகிறான்:

‘மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள்: அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான்: அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான், பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான், ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்..’ (அருள்மறை குர்ஆனின் 4வது அத்தியாயம் ஸுரத்துன்னிஸாவின் முதல் வசனத்தில் ஒரு பகுதி).

சந்ததிகள் பெருகுவது திருமணத்தின் நோக்கம் என்று இதன் மூலம் அறியலாம். தகாத நடத்தையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதும் திருமணத்தின் மற்றொரு நோக்கமாகும்.

கணவன் மனைவி இருவருக்கிடையே உள்ள க

இஸ்லாமிய குடும்ப வாழ்வில் கணவன், மனைவி ஆகிய இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, திருப்திபடுமாறு நடந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாமிய குடும்ப வாழ்வில் கணவன், மனைவி ஆகிய இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, திருப்திபடுமாறு நடந்து கொள்ள வேண்டும்.

டமை

இஸ்லாமிய குடும்ப வாழ்வில் கணவன், மனைவி ஆகிய இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, திருப்திபடுமாறு நடந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாமிய குடும்ப வாழ்வில் ஆண், பெண்ணை நிர்வகிக்க கூடியவனாக இருக்கிறான். ஒரு மனைவியாளவள் தன் கணவரிடம் அல்லாஹ்விற்கும், அவனது தூதருக்கும் மாற்றமில்லாக் காரியங்களில் அவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பதும், அவனது உணவு, குடிப்பைத் தயார் செய்து கொடுப்பதும், அவனது விரிப்பைச் சீராக வைத்திருப்பதும், அவனது குழந்தைக்கு பாலூட்டுவதும், சீராட்டுவதும் அதி முக்கியமான கடமையாகும்.

‘…கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று: முறைப்படி அவர்கள் மீது பெண்களுக்கும் உரிமையுண்டு…’ (அருள்மறை குர்ஆனின் 2வது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 228வது வசனத்தில் ஒரு பகுதி)

அதுபோல ஆண்களும் அவளது மானம், உடல், பொருள், மரியாதை ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டும். அவளிடம் சொல்லிலும், செயலிலும் அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். மார்க்கக் கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டும். தன்னால் இயலாவிட்டால் மார்க்கக் கல்வி கற்றுக் கொடுக்கும் இடத்திற்குச் சென்று கற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும்.

மாற்று மதங்களில் உள்ளது போன்று ‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’ என்று எண்ணம் இல்லாமல் கணவன், மனைவி இருவருக்கும் சம அந்தஸ்து வழங்குவது இஸ்லாமிய மார்க்கம் மாத்திரமே.

நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்:-
‘உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே! நான் எனது மனைவியரிடத்தில் சிறந்தவராயிருக்கிறேன்.’

தாய் தந்தையரைப் போற்றிப் பாதுகாத்தல் 

ஒவ்வொரு ஆண்மகனும், பெண்மகளும் தாய் தந்தையரைப் போற்றிக் காக்கக் கடமை பட்டுள்ளனர். ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்:
‘நான் யாருக்கு அதிகம் கடமைப்பட்டுள்ளேன்?’

‘உனது தாய்க்கு’

‘பிறகு நான் யாருக்கு அதிகம் கடமைப்பட்டுள்ளேன்?’

‘உனது தாய்க்கு’

‘பிறகு நான் யாருக்கு அதிகம் கடமைப்பட்டுள்ளேன்?’

‘உனது தந்தைக்கு’ என்று நபி (ஸல்) அவர்கள் பதிலுரைத்தார்கள். இந்த ஹதீஸ் மூலம் இஸ்லாம் தாய்க்கு அளிக்கும் மரியாதையைக் காண்கிறோம்.

நாம் பெற்றெடுத்த மக்கட் செல்வங்களை பாலூட்டி, சீராட்டி, அன்பு செலுத்தி, அறிவு புகட்டி வளர்த்த நம் பெற்றோரை மனம் நோகாமல் கடைசி வரை அன்பொழுக கவனித்துக் கொள்வது குழந்தைகளின் கடமையாகும்.

இஸ்லாத்தில்; குழந்தை வளர்ப்பு முறை 

இஸ்லாமிய குடும்ப வாழ்க்கையில் குழந்தைகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பது தாய், தந்தையர் கையில் அடங்கியுள்ளது.

இஸ்லாமிய குடும்ப வாழ்க்கையில் குழந்தைகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பது தாய், தந்தையர் கையில் அடங்கியுள்ளது.

இஸ்லாமிய குடும்ப வாழ்க்கையில் குழந்தைகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பது தாய், தந்தையர் கையில் அடங்கியுள்ளது.

‘ஒரு தந்தை தனது குழந்தைக்குக் கொடுக்கும் அன்பளிப்புகளில் சிறந்தது அவனுக்குக் கொடக்கும் நல்லொழுக்கமேயாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.

குழந்தைகளை ஏழு வயது முதல் தொழக் கற்றுக் கொடுக்க வேண்டும். பத்து வயதிற்குள் குழந்தைகள் குர்ஆன் முழுவதும் ஓதும்படிச் செய்ய வேண்டும். இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வழி முறைகளையும் கற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும். அத்துடன் சிறந்த நல்லொழுக்கங்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

‘ஊhயசயஉவநச ளை டழளவஇ நஎநசலவாiபெ ளை டழளவ’ என்கிறது ஓர் ஆங்கிலப் பழமொழி. ‘ஒழுக்கம் இழந்தவன் அனைத்தையும் இழந்தவனாகிறான்’ என்பது அதன் பொருள்.

‘மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி – இவன் தந்தை
என்நோற்றான் கொல் எனுஞ் சொல்’ – என்று குறள் கூறுவதுபோல்

இந்த மகனை பெற்றெடுக்க இவன் தந்தை என்ன நலன் செய்தானோ என்று பிறர் போற்றும் அளவுக்கு பெற்றோருக்கு புகழைத் தேடித் தர வேண்டியது பிள்ளைகளின் கடமையாகும்.

இஸ்லாத்தில் பிற அதிமுக்கியமான கடமைகள் 

இஸ்லாத்தில் சிற்நத மகிதருக்கு அத்தாட்சி அவர் மார்க்க நடந்து கொள்வதேயாகும். இஸ்லாம் ஓர் அமைதியான,

'அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறாற உண்பவன், ஓர் உண்மையான இறை நம்பிக்கையாளராக இருக்கமாட்டான்' என நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.

‘அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறாற உண்பவன், ஓர் உண்மையான இறை நம்பிக்கையாளராக இருக்கமாட்டான்’ என நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.

எளிமையான மார்க்கமாகும். அது பணிவையும், ஒழுக்கத்தையும், பொறுமையையும் அதிகமதிகம் வலியுறுத்துகின்றது. அண்டை வீட்டாருடன் நட்பாக இருக்கக் கூறுகிறது.
‘அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறாற உண்பவன், ஓர் உண்மையான இறை நம்பிக்கையாளராக இருக்கமாட்டான்’ என நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.

மேலும்; தனது சகோதர, சகோதரிகளுடன் நட்பாக இருக்கக் கூறுகிறது.
‘தனது சகோதரனுடன் மூன்று இரவுக்கு மேல் பேசாதிருக்க அவனுக்கு அனுமதியில்லை’ என நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.

இஸலாத்தின் தூண்களாக இறைவிசுவாசம், தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் ஆகிய ஐந்து கடமைகள் உள்ளன. இன்றைய இஸ்லாமிய சமுதாயத்தில் உள்ள பலர் இந்த ஐந்து கடமைகளையும் மறந்து, இவ்வுலக வாழ்வின் மகிழ்ச்சியில் – இறப்புக்குப் பின் உள்ள மறுமை வாழ்க்கையை மறந்து உழல்கின்றனர். இது முற்றிலும் தவறானது.

‘உலகமானது முஃமின்களுக்கு சிறைச்சாலை. இறை மறுப்பாளர்களுக்கு பூஞ்சோலை’ என நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.

ஆகவே அல்லாஹ்வுக்கும், மறுமைநாளுக்கும் பயந்து, நமக்கும், நம் குடும்பத்தாருக்கும் சொர்க்கத்தில் இடம் வேண்டி வல்ல அல்லாஹ்வை பிரார்த்திபோம்..!

Related Post