New Muslims APP

கொடுமைகள் களைய..!

– ஜெம்ஸித்

னிதாபிமானம் என்பது நாட்கள் பார்த்து வருவதல்ல..! அது மனித உரிமைகளின் தாத்பர்ய உணர்வுகள் தொடர்புடையது..! மனிதாபிமானம் உயிர் பெற வேண்டுமென்றால், மனித உரிமைகளின் உன்னத அம்சங்களை மனித இனம் உணர வேணடும்.

சர்வதேச மனிதாபிமான தினம்..!

சர்வதேச மனிதாபிமான தினம்..!

இஸ்லாம் கூறும் மனித உரிமைகள்  மனித குலத்திற்கு பொருத்தமானவை..!
இஸ்லாத்தில் பேசப்படுகின்ற மனித உரிமைகள் இறைவனால் வழங்கப்பட்ட உரிமைகளே. அவை ஏதோ ஒரு அரசாலோ, சட்ட மன்றத்தினாலோ வழங்கப்பட்டவையல்ல. மன்னர்கள் அல்லது சட்ட மன்றங்கள் வழங்கும் உரிமைகள் ஒரு காலத்தில் ரத்துச் செய்யப்பட்டு விடலாம். சர்வாதிகாரிகளின் அரசாணையும் இவ்வாறு மாற்றப்படக் கூடியதே! அவர்களுக்கு ஒத்துவரக்கூடிய சூழலில் அவர்கள் அதை நிறைவேற்றுவார்கள். இல்லையென்றால் விலக்கி விடுவார்கள். ஆனால் இஸ்லாத்தில் சட்ட மன்றத்திற்கும், அரசுக்கும் எவ்வித உரிமையுமில்லை. ஏனெனில் அவையனைத்தும் இறைவனால் வழங்கப்பட்டவை. அவற்றை யாருக்கும் திரும்பப் பெறவோ மீறவோ மாற்றவோ அதிகாரமில்லை.

இஸ்லாம் அளித்திருக்கும் உரிமைகள் உலகளாவியவை. மனித குலம் முழுவதற்கும் பொருந்தக்கூடியவை. அந்த உரிமைகள் ஓர் இஸ்லாமிய அரசுக்குட்பட்ட எல்லையில் வாழ்ந்தாலும் சரி, அதற்கு வெளியே வாழ்ந்தாலும் சரி, போரிட்டாலும் சரி எந்த நிலைமையானாலும் கடைப்பிடிக்க வேண்டியவையே!
அல்குர்ஆன் இவ்வாறு தெளிவாகக் கூறிகின்றது: ‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்காக வாய்மையில் நிலைத்திருப்போராயும் நீதிக்குச் சான்று வழங்குவோராயும் திகழுங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருநது பிறழச் செய்து விடக் கூடாது. நீங்கள் நீதி செலுத்துங்கள். இதுவே இறையச்சத்திற்கு மிகப் பொருத்தமானது’ (5 : 8)
மனித இரத்தம் புனிதமானது. எந்நிலையிலும் அதனை அநியாயமாகச் சிந்தக் கூடாது. இந்தச் சட்டத்தை மீறி ஒரு மனித உயிரை அநியாயமாக கொலை செய்பவர் மனிதகுலம் முழுவதையும் கொலை செய்தவரைப் போன்றவராவார்.
குர்ஆன் கூறுகிறது: ‘பூமியில் குழப்பம் ஏதுமற்ற நிலையில் அநியாயமாக ஒருவரை கொலை செய்பவர் (இறந்தவர் மீது கொலைப் பழி இல்லாத நிலையில்) மனித குலம் முழுவதையுமே கொன்றவர் போன்றவராவார்.’ (5:32)
பெண்கள், மழலைகள், வயது முதிர்ந்தோர், நோயாளிகள், காயமடைந்தோர் ஆகியோரைக் கொடுமைப்படுத்துவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. எல்லா சூழலிலும் பெண்களின் கற்பும் கண்ணியமும் மதிக்கப்பட வேண்டும். அவர்கள் எதிரிகளாக இருந்தாலும் சரி, இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தாலும் சரி. யாராக இருந்தாலும் வறியவர்கள், காயமடைந்தோர், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பரிகாரம் அளிக்கப்பட வேண்டும்.
இறைவன் வழங்கிய இவ்வுரிமைகளை மாற்றினாலோ, திருத்தினாலோ, மறுத்தாலோ, அமுல்படுத்தத் தவறினாலோ குர்ஆன் எச்சரிப்பதைப் பாருங்கள்:
‘எவர்கள் அல்லாஹ் அருளிய சட்டத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கவில்லையோ, அவர்கள் தாம் நிராகரிப்பாளர்கள்.’ (5 : 44)
மனித உரிமைகள் முறையாகப் பேணப்படுவது அவசியம். இஸ்லாமிய அரசும் குடிமக்களும் அதனைப் பேணி நடக்க வேண்டும்.
உயிர் மற்றும் உடமைப் பாதுகாப்பு குறித்து நபியவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
இறுதி ஹஜ்ஜின்போது முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இறைவனை நீங்கள் சந்திக்கும் இறுதித் தீர்ப்பு நாள் வரை) ஒருவர் மற்றவரின் உடைமையை, உயிரைப் பறிக்கக் கூடாது. முஸ்லிம் நாட்டில் வாழும் முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள் குறித்து நபி (ஸல்) அவர்கள்,
‘ஒரு திம்மியை (முஸ்லிமல்லாத குடிமகனை) கொலை செய்பவன் சுவனத்தின் வாடையைக் கூட நுகர முடியாது’ எனக் கூறினார்கள்.
ஒருவரை ஒருவர் பரிகாசம் செய்யாதீர்கள்;அவதூறு கற்பிக்காதீர்; பட்டப் பெயர் சூட்டி இழிவுபடுத்தாதீர்; புறங்கூறாதீர், தரக் குறைவாகப் பேசாதீர்.

உளவு பார்க்க வேண்டாம், உரியவரின் அனுமதியின்றி ஒருவரின் வீட்டுக்குள் நுழைய வேண்டாம் என மனித மாண்பின் பாதுகாப்பு குறித்துக் கூறும் அல்குர்ஆன் தனிநபர் வாழ்வின் புனிதத்தை எடுத்தியம்புகிறது.
அவ்வாறே தனிநபர் சுதந்திரம் குறித்தும் இஸ்லாம் பேசுகிறது.
எந்தவொரு மனிதனின் குற்றமும் பகிரங்கமாக நீதிமன்றத்தில் நிரூபணமாகாத வரை, அவரை சிறையிலடைக்கக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. சந்தேகத்தின் அடிப்படையில் மாத்திரம் ஒருவரை சிறையிலடைக்கக் கூடாது. நீதிமன்றத்தில் ஒருவரைப் பாதுகாத்துக் கொள்ள வாய்ப்பளிக்காமல் சிறையிலடைக்க இஸ்லாம் அனுமதியளிக்கவில்லை.
இஸ்லாம் வழங்கிய மனித உரிமைகளில் மற்றொன்று அரசுக் கொடுங்கோண்மைக்கெதிராக பேசுவதாகும். அது குறித்து ஸ¥றா அந்நிஸாவின் 148 வசனம் இப்படிச் சொல்கிறது.
‘அநியாயம் செய்யப்பட்டவர்களைத் தவிர (வேறு யாரும்) வார்த்தைகளில் தீயவற்றை பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்பவில்லை. அல்லாஹ் நன்கு செவியுறுவோனாகவும் யாவற்றையும் அறிபவனாகவும் இருக்கின்றான்.’
இஸ்லாத்தில் அனைத்து அதிகாரங்களும் இறைவனுக்கே உரியவை. மனிதனுக்கு வழங்கப்பட்டதெல்லாம் பிரதிநிதிக்குரிய அதிகாரமே! இத்தகைய அதிகாரங்களைப் பெற்றவர், மக்களின் முன் தூய்மையானவராக அப்பழுக்கற்றவராக காட்சியளிக்க வேண்டும். அந்த மக்களின் நன்மையை ஒட்டியே அதிகாரம் பயன்பட வேண்டும்.
இதனை உறுதிப்படுத்தி அபூபக்கர் (ரழி) அவர்கள் பதவியேற்ற பின் தம்முடைய முதல் உரையில் கூறுகிறார். நான் நல்லது செய்தால் என்னோடு ஒத்துழையுங்கள். நான் தவறு செய்தால் என்னைத் திருத்துங்கள். இறைவனின் இறைத்தூதரின் ஆணைகளை நான் நிறைவேற்றும் வரை எனக்குக் கீழ்ப்படியுங்கள். நான் வழி தவறி நடந்தால் எனக்குக் கீழ்ப்படிய வேண்டாம்.’
இஸ்லாம் குடிமக்களின் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு முழு உத்தரவாதம் அளிக்கிறது.

இஸ்லாத்தில் அனைத்து அதிகாரங்களும் இறைவனுக்கே உரியவை.

இஸ்லாத்தில் அனைத்து அதிகாரங்களும் இறைவனுக்கே உரியவை.

ஆனால் ஒரு நிபந்தனை, ஒழுக்க மேம்பாட்டிற்கும் வாய்மைப் பரவுதலுக்கும் துணையாக அது அமைய வேண்டும். கொடுங்கோண்¨மை மற்றும் தீங்கு அதி கரிக்கலாகாது.
கருத்துச் சுதந்திரம் பற்றி மேற்கத்தேயமத்தினர் கொண்டுள்ள கருத்தோட்டத்தை விட இஸ்லாம் அளித்துள்ள கருத்துச் சுதந்திரம் சிறப்பானது. எந்தக் காரணத்தாலும் தீமைகள், அநியாயங்கள் பெருகுவதை இஸ்லாம் அனுமதியளிப்பதில்லை. விமர்சனம் என்ற பெயரில் பழி தாக்குதல், அத்துமீறல்களை இஸ்லாம் அனுமதிப்பதில்லை.
தீர்மானிக்கும் உரிமை குறித்தும் இஸ்லாம் பேசுகிறது:
‘இறைமார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை.’ (2 : 256)
சர்வாதிகார சமூக அமைப்பில் தனிநபர் உரிமை என்பதே எதுவும் இல்லை. அரசிற்கு அளிக்கப்படும் வரையறையற்ற அதிகாரங்கள், மனித அடிமைத் தனத்தையும் சிறுமையையும் உண்டாக்கும். ஒரு காலத்தில் மனிதன் மீது முழு அதிகாரம் செலுத்தும் அடிமை முறை அமுலில் இருந்தது. இப்பொழுது அத்தகைய அடிமை முறை சட்டபூர்வமாக ஒடுக்கப்பட்டு விட்டது. ஆனால் அடிமைத்துவத்திற்குச் சமமான தனிநபர் கட்டுப்பாடுகளை சர்வாதிகார அமைப்பு விதித்துள்ளதை நாம் இன்று கண்கூடாகவே காண்கிறோமல்லவா?
சுய தீர்மான உரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை இஸ்லாம் வலியுறுத்துகிற அதேநேரத்தில், தனிநபரின் உணர்ச்சிகளுக்கு உரிய மதிப்பளிக்கவும் தவறவில்லை. சமய விவகாரத்தில் ஒருவரின் உரிமையை ஆக்கிரமிக்கும் வகையில் எந்தச் செயலும் அமைந்துவிடக் கூடாது, எந்தப் பேச்சும் கூடாது என இஸ்லாம் அறிவுறுத்துகிறது.
தவறான தண்டனையிலிருந்து பாதுகாப்புப் பெற்றுத் தருகிறது இஸ்லாம்.
வேறொருவர் செய்த குற்றத்திற்காக ஒருவர் தண்டிக்கப்படுவதை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை.
இது குறித்து குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது:
‘ஒருவரின் சுமையை மற்றவர்கள் சுமக்க மாட்டார்கள்.’ (6 : 164)
வாழ்வாதார அடிப்படைக்கான உரிமை குறித்தும் பேசுகிறது இஸ்லாம். தேவையுள்ளோருக்கும் வறியோருக்கும் உரிய உரிமைகள் மற்றும் அவர்களின் நியாயமான தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டும் என இயம்புகிறது அல்குர்ஆன்.
‘அவர்களின் பொருட்களில் (பிறருக்கு நிர்ணயிக்கப்பட்ட பங்குண்டு) யாசிப்போருக்கும் வறியோருக்கும் (அவர்களின் பொருட்களில் பங்குண்டு.)’ (70 : 24, 255)
(தொடரும்)
– னுiயெமயசயn

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...

Leave a Reply


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.