இஸ்லாம் போற்றும் பெண் கண்ணியம்!

அஹ்மத் பாகவி 

இஸ்லாம் போற்றும் பெண் கண்ணியம்!

பர்தா அனுபவத்தைப் பறிக்காதீர்கள்

பர்தா அனுபவத்தைப் பறிக்காதீர்கள்

இறைநம்பிக்கை கொண்டவர்களே! விதவைப் பெண்களுக்கு பலவந்தமான வாரிசுதாரர்களாய் நீங்கள் திகழ்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல! மேலும், அவர்களுக்கு நீங்கள் அளித்த மஹ்ரின் ஒரு பகுதியைப் பறித்துக் கொள்வதற்காக அவர்களைக் கஷ்டப்படுத்துவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல; அவர்கள் ஏதேனும் வெளிப்படையான இழிசெயலைச் செய்தாலேயன்றி! அவர்களோடு நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். அவர்களுடன் சேர்ந்து வாழ நீங்கள் விரும்பாவிட்டாலும் பொறுமையைக் கைக்கொள்ளுங்கள். ஏனெனில், ஒரு விஷயம் உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் அல்லாஹ் அதில் பல நன்மைகளை வைத்திருக்கக் கூடும். நீங்கள் ஒரு மனைவிக்குப் பதிலாக வேறு ஒருத்தியை மனைவியாகக் கொண்டு வர நாடினால் நீங்கள் அவளுக்கு பணக்குவியலையே (மஹ்ராக) கொடுத்திருந்தாலும் கூட, அதிலிருந்து கொஞ்சம் கூட திரும்பப் பெறாதீர்கள். நீங்கள் அவதூறு கூறியும், வெளிப்படையாக கொடுமை இழைத்தும் அதனைத் திரும்பப் பெறுவீர்களா? சந்தேகமின்றி நீங்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து இன்பம் துய்த்திருக்கின்றீர்களே! மேலும் அந்த மனைவியர் உங்களிடமிருந்து உறுதியான ஒப்பந்தத்தையும் பெற்றிருக்கின்றார்களே! (அவ்வாறிருக்க) அப்பொருளை அவர்களிடமிருந்து எவ்வாறு திரும்பப் பெற முடியும்? மேலும், உங்கள் தந்தையர் மணமுடித்திருந்த பெண்களை நீங்கள் ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளாதீர்கள்! முன்னால் நடந்தது நடந்துவிட்டது. உண்மையில் இது ஒரு மானக்கேடான, வெறுக்கத்தக்க செயலாகும். கீழ்த்தரமான நடத்தையுமாகும்.

உலகில் இஸ்லாத்தைப் பற்றி பல்வேறு வகையில் விமர்சிக்கக் கூடியவர்களால், இஸ்லாமிய பெண்களைப் பற்றி அவர்களுக்கு இஸ்லாம் எந்த உரிமையையும் வழங்கவில்லை என்றும், வீட்டுக்குள் பூட்டி வைத்து அவர்களை அடக்கி வைத்துள்ளது என்றும் பரவலாக பேசப்படுகிறது.இது அப்பட்டமான பொய் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

அல்லாஹ் அருளிய அற்புத வேதமாம் அல்குர்ஆன் ஷரீஃபும்,அண்ணல் நபி ஜஸல்ஸ அவர்களின் மணிமொழிகளும் பெண்களை மனிதர்களாக மதித்து அவர்களுக்கு வழங்க வேண்டிய நியாயமான மனித உரிமைகளை முழுமையாக வழங்கியுள்ளது.

பெண்களுக்கென்று கடமைகள் இருப்பது போல் அவர்களுக்கென உரிமைகளும் உண்டு ஜ2: 228ஸஎன்பதை திருமறை நிலை நாட்டியுள்ளது. வாழும் உரிமையில் “பெண்கள் ஆண்களுக்கு நிகர்” என்று கண்மனி நாயகம் ஜஸல்ஸ அவர்களும் பெண்களுக்கு கரிசனம் காட்டியுள்ளார்கள்.

இந்த திருக்குர்ஆன் வசனம் மற்றும் நபிமொழியின் கனத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், சற்று பின்னோக்கி செல்ல வேண்டும்.பெண்களின் நிலை பற்றி உலகம் கொண்டிருந்த கருத்து என்ன? என்பதைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ரொம்ப காலமாகவே இந்த உலகம் பெண்களை அவர்களும் மனிதர்கள் தான் என்பதை ஏற்றுக் கொள்ளவே இல்லை.

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பிறந்த பிறகு கி.பி. 586 -ல் ஃபிரான்ஸில் பெண்களின் அந்தஸ்து பற்றி தீர்மானிக்க கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் நீண்ட விவாதங்களுக்குப் பிறகு அதிகமான கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் பெண்ணும் மனித இனம் தான். ஆனால் ஆண்களுக்கு உழியம் செய்வதற்காக படைக்கப்பட்டவர்கள் என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள்.
இதற்கு முன்னதாக ரோமானியர்கள், பெண்களை ஒரு அசுத்த பிராணி என்றனர்.

சீனர்கள், பெண்களுக்கு ஆன்மா இல்லை என்றனர்.
கணவன் மனைவியை கொன்றால் குற்றமில்லை.
பொதுவாக தந்தைக்கு தன் மகளை கொல்லக்கூடிய உரிமை இருந்தது,
அரபு நாட்டில் பெண் குழந்தைகளை உயிரோடு புதைக்கும் பயங்கரம் நடைமுறையில் இருந்தது. இது தந்தையின் கௌரவமாக கருதப்பட்டது.
இதல்லாமல் ஒரு கணவர் இறந்து விட்டால், அவரது உடமைகளை வாரிசுகளுக்கு பங்கிடும் போது அவர் விட்டுச் சென்ற சொத்துப் பட்டியலில் அவருடைய மனைவிமார்களும் இடம்பெற்றிருப்பர். இந்த வகையில்,அந்த அபலைகள் கூறு போட்டு கபளிகரம் செய்யப்படுவர்.
இன்னும் சிலர்,பெண்ணை யார் கொலை செய்தாலும் அது குற்றச்செயல் அல்ல என்றனர்.
இந்தியாவில் கணவர் இறந்த விட்டால், அவரது பிணத்தோடு மனைவியையும் சேர்த்து உயிரோடு உடன் கட்டை ஏற்றி தீயினால் பொசுக்கும் பொல்லாத பாவம் புனிதமாக கருதப்பட்டது.

இந்தப் பின்னனியில் தான் இஸ்லாம் பெண்களுக்கு மனித அந்தஸ்து மட்டுமல்ல, அவர்களை ஆண்களுக்கு சரிநிகர் சமானம் என்று சமத்துவம் பேசி, அவர்களுக்குத் தேவையான வாழ்வியல் உரிமைகள் அனைத்தையும் வழங்கியது. அரசியல்,குடும்பவியல்,மாத்திரமல்ல ஆன்மீகத்திலும் கூட அவர்களுக்கு உயர்ந்த ஸ்தானம் இஸ்லாத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

பர்தா அனுபவத்தைப் பறிக்காதீர்கள்..!

பர்தா அனுபவத்தைப் பறிக்காதீர்கள்..!

இந்தியாவில் இந்துப்பெண் வேதத்தை ஓதுவது ஒருபுறம் இருக்கட்டும் அதைக் கேட்கக்கூட கூடாது.இஸ்லாத்தில் வேதத்தை – குர்ஆனை ஓதக்கேட்கலாம்,ஓதலாம் என்பதல்ல,அவசியம் ஓத வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

புத்தர் பெண்களுக்கு தீட்சை கொடுக்கத் தயங்கினார்.கொடுக்கவும் இல்லை.ஆனால்,அல்குர்ஆனில் அல்லாஹ்,நம்பிக்கைக் கொண்ட பெண்களுக்கு தீட்சை வழங்கும்படி நபிக்கு உத்தரவிடுகிறான்.

நபியே! இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் பைஅத் – தீட்சைப் பிரமானம் – செய்வதற்காக வந்து, அவர்கள் அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணை வைப்பதில்லையென்றும்,திருடுவதில்லை யென்றும்,விபச்சாரம் செய்வதில்லையென்றும்,குழந்தைகளை கொல்வதில்லையென்றும், தங்களுடைய கை,கால்களுக்கிடையே எந்த அவதூறையும் இட்டுக்கட்டுவதில்லையென்றும்,எந்த ஒரு நல்ல காரியத்திலும் உமக்கு மாறு செய்வதில்லையென்றும் வாக்குறுதி அளித்தால் அப்போது அவர்களிடமிருந்து அந்த பைஅத்தை – தீட்சைப் பிரமானத்தை – ஏற்றுக் கொள்ளுங்கள்.மேலும் அவர்களுக்கு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேளுங்கள்.நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபையுள்ளவனாகவும் இருக்கிறான்.  அல்குர்ஆன்: 60 ;12

கிருஸ்தவ மதத்தில் பெண்கள் மத குருமார்களாக முடியாது.ஆனால் இஸ்லாமிய வரலாற்றில் ராபியத்துல் பஸரிய்யா,நஃபீஸத்துல் மிஸ்ரிய்யா போன்ற பெண் ஞானிகள் ஹஸன் பஸரி,இமாம் ஷாஃபி போன்ற ஞான மேதைகளுக்கு பல ஞான உபதேசங்களை வழங்கி வழிகாட்டி யிருக்கிறார்கள். அன்னை ஆயிஷா ஜரலிஸ அவர்கள் நபித்தோழர்களுக்கு மார்க்க ஞானத்தை வழங்கும் ஆசிரியராகத் திகழ்ந்திருக்கிறார்கள்.

அண்ணல் நபிகள் நாயகம் ஜஸல்ஸ அவர்களும் இந்த {ஹமைரா ஜசின்ன சிகப்பியான ஆயிஷாஸ விடம் மார்க்கத்தின் மூன்றில் இரண்டு பகுதி ஞானத்தை கற்றுக் கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டதின் மூலம் அன்னை அவர்களுக்கு ஸனதை ஜகல்விச் சான்றிதலைஸ யும் வழங்கியிருக்கிறார்கள்.

உம்மு வரகா என்ற பெண்மனியை அவர்களின் வீட்டிலுள்ளவர்களுக்கு இமாமாக ஜதொழுகையை முன்னின்று நடத்தக் கூடியவராகஸ நியமித் திருந்தார்கள். இறைத்தூதர், அன்னை அவர்களை, அவர்களின் வீட்டிற்கு சென்று சந்திப்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.அன்னை அவர்களுக்காக வயதான முதியவர் ஒருவரை தொழுகையின் நேரத்தை அறிவிக்கக்கூடிய முஅத்தினாக ஏற்பாடு செய்திருந்தார்கள். அன்னை திருக்குர்ஆனை ஓதி மனப்பாடம் செய்து திறம்பட ஓதக்கூடிய அந்த காலத்து பெண்களில் ஒருவராகத் திகழ்ந்தார்கள்.

பிரபலமான இறைஞானி முஹ்யித்தீன் இப்னு அரபி ஜரலிஸ அவர்களின் வரலாற்றைப் படித்தால்,அவர்களுக்கு ஞானம் போதித்த பல குருமார் களின் பட்டியலில் பல பெண்மனிகள் இடம் பெற்றிருப்பதைப் பார்க்கலாம்.

மகாவீர், பெண்கள் ஞானம் பெற முடியாது என்றார். சமண மதத்தில் பெண்கள் சொர்க்கம் செல்ல முடியாது. நல்வினை செய்து அடுத்தப் பிறப்பில் ஆணாகப் பிறக்க வேண்டும். அப்போது தான் ஞானம் பெறவோ, சொர்க்கம் செல்லவோ முடியும் .

ஆனால் இஸ்லாத்தில் ஆண்களைப்போல பெண்களும் இறை ஞானம் பெற முடியும்,பெற்றிருக்கிறார்கள்.ஆண்களைப் போல பெண்களும் சொர்க்கம் செல்வார்கள்.

நிச்சயமாக முஸ்லிமான ஆண்கள்,பெண்கள்,இறை நம்பிக்கை கொண்ட ஆண்கள்,பெண்கள்,கீழ்படியக்கூடிய ஆண்கள்,பெண்கள், பொறுமையுள்ள ஆண்கள்,பெண்கள்,தானதர்மம் புரியும் ஆண்கள், பெண்கள்,நோன்பு நோற்கும் ஆண்கள்,பெண்கள்,தங்களது வெட்கத் தலங்களைப் பாதுகாக்கும் ஆண்கள்,பெண்கள்,அல்லாஹ்வை அதிகம் நினைவு கூறும் ஆண்கள், பெண்கள் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும்,மகத்தான கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான். அல்குர்ஆன் :33 ;35

உங்களில் ஆண்,பெண் யாருடைய நற்செயலையும் வீணாக்க மாட்டேன் என்று அவர்களின் இறைவன் அவர்களுக்கு பதில் கூறினான்.அல்குர்ஆன் :3 ;195

இறை நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் அல்லாஹ் சுவனபதிகளை வாக்களித்துள்ளான். அல்குர்ஆன் :9 ;72

பெண்களை மற்ற மதத்தவர்கள் ஆன்மீகத்தில் தள்ளி வைத்தனர். அவர்கள் ஆன்மீகத்திற்கு ஆகாதவர்கள்.மட்டமல்ல,அவர்களோடு இருந்தால் நம்மையும் ஆகாதவர்களாக, அவர்களோடு சேர்ந்தால் நம்மையும் சேராதவர்களாக ஆக்கி விடுவார்கள்.ஆகவே இறைவனை நெருங்கி, அவனை அடைய இவ்வுலகையும் குறிப்பாக பெண்களையும் துறக்க வேண்டும்,பிரம்ம ஞானம் பெற்று பரம்பொருளைப் பருக பிரம்மச்சாரியமே பிரதானமான வழி என்றெல்லாம் பெண்களை பகைத்துக் கொண்ட மதங்களுக்கு மத்தியில், இஸ்லாம் இந்த விஷயத்திலும் அவர்களை அரவணைத்தது.பெண்களால் அல்லாஹ்வை அடையவும்,ஆண்களை அடைய வைக்கவும் முடியும். மெஞ்ஞானம் பெற சன்னியாசம் அல்ல.சம்சாரமே அதற்கான சிறந்த வழி என்ற புறட்சிகரமான சிந்தனையை இஸ்லாம் இந்த மண்ணிற்குச் சொன்னது.
எவர் பரிசுத்தமான,பரிசுத்தமாக்கப்பட்ட நிலையில் அல்லாஹ்வை தரிசிக்க நாடுவாரோ அவர் ஜபத்தினிகளானஸ சுதந்திர புருஷிகளை கல்யாணம் செய்து கொள்ளட்டும் என்றார்கள் ஏந்தல் நபி ஜஸல்ஸஅவர்கள்.

“நான் ஆயிஷாவின் (ரலி) படுக்கை விரிப்பில் உடன் இருக்கையில் எனக்கு வஹி – வேத வெளிப்பாடு – வந்திருக்கிறது” என்ற நபிகளாரின் அறிவிப்பு அர்த்தமுள்ளதும், அழகானதும், ஆழமானதுமாகும்

மத விவகாரத்தில் பெண்களை ஒதுக்கி வைத்த பிற்போக்கு வாதிகளுக்கு இது பலத்த அடியாகும். பெண்கள் தீண்டத்தகாதவர் களல்ல. அவர்களிடத்தில் தேன் மட்டுமல்ல, தீனும் இருக்கிறது. இறைத்தொடர்பு, தியான கூடத்தில் மட்டுமல்ல, படுக்கை அறையிலும், காட்டில் மட்டுமல்ல, வீட்டிலும், மனைவியை விட்டு தள்ளி இருக்கும் போது மட்டுமல்ல, அவளுடன் சேர்ந்திருக்கும் போதும் கூட உண்டாகும் என்ற உன்னதமான நடுநிலை மார்க்கத்தை கண்ணல் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்தார்கள்.

குடும்பம் எங்கே..?-1

குடும்பம் எங்கே..?-1

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் நெஞ்சில் சாய்ந்து, சேர்ந்திருக்கும் போதுதான் அல்லாஹ்வின் தூதர், “மேலான நண்பனே…. அல்லாஹ்வே உன்னோடு” எனக்கூறி இறைவனடி சேர்ந்தார்கள். ஜமுஅத்தா மாலிக்ஸ
மெஞ்ஞான உலகில் இது ஓரு வினோதமான பயணம். அருமையான ஆன்மீக அனுபவம். இதை நடு நிலை பேணும் போது தான் உணர முடியும்.பெண்கள் தான் நாம் இவ்வுலகிற்கு வருவதற்கான வாசலாக இருந்தார்கள்.அதே பெண்கள் தான் அல்லாஹ்வை அடைவதற்கும், ஆன்மீகத்தில் நுழைவதற்கும் வாசலாக இருக்கிறார்கள் என்பதைத் தான் மெஞ்ஞானத் தூதரின் இறுதிப்பயணம் நமக்கு சொல்லும் செய்தியாகும்.

இப்படி பெண்களுக்கு எல்லா வகையிலும் சமத்துவத்துவத்தையும், மகத்துவத்தையும் வழங்கிய இஸ்லாம், பேச்சுரிமை, எழுத்துரிமை, கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமை,வாரிசுரிமை, கணவரிடமிருந்து விவாகரத்து பெரும் உரிமை,மறுமணம் புரியும் உரிமை,கல்வி கற்கும் உரிமை, சம்பாத்தியம் செய்யும் உரிமை,மஹர் பெரும் உரிமை, இப்படி வாழ்வியலின் அனைத்து உரிமைகளையும் பெண்களுக்கு வழங்கியது.
எல்லா வற்றுக்கும் மேலாக மேற்படி உரிமைகளைப் பெறுவதற்காக முறையாக வெளியே செல்லும் உரிமையையும் வழங்கியது.

Related Post