New Muslims APP

இறந்துபோய்விட்டதா.., இரக்க மனம்..!

-மு.அ.அப்துல் முஸவ்விர்
இறந்துபோய்விட்டதா.., இரக்க மனம்..!இறந்துபோய்விட்டதா.., இரக்க மனம்..!இரக்கம்..!
இரக்கம்..!
மனித ஆன்மா ஒவ்வொன்றின் இயற்கை குணம் தயவு, கருணை எனும் இரக்கமாகும்
மனித ஆன்மா ஒவ்வொன்றின் இயற்கை குணம் தயவு, கருணை எனும் இரக்கமாகும்

மனித ஆன்மா ஒவ்வொன்றின் இயற்கை குணம் தயவு, கருணை எனும் இரக்கமாகும்

அந்தோ, இந்த நவீன யுகத்தில் அந்த ஆன்மா இரக்க குணம் இல்லாமல் அரக்க குணமாக மாறி விட்டதோ என்று அஞ்சத் தோன்றுகின்றது. அதனால்தான் ஆன்மாக்கள் துன்பமும் , துயரமும்,அச்சமும், பயமும் கொண்டு அவதிக்கு உள்ளாகி அலைகின்றன, எந்த அளவுக்கு என்றால், பச்சிளங் குழந்தைகள் மீது விஷவாயுவை வீசச் செய்து கொல்லும் கொடூர போர்ச் சமயங்களில்கூட அந்த இரக்கம் அறவே இல்லாமற் பேர்விட்டது.
ஆம்..!
சிரியாவில் சீரழிக்கப்படும் மக்கள் வாழ்நிலை குறித்துதான் இவ்வாறு அச்சப்பட வேண்டி உள்ளது.
உயிரைக் காப்பாற்ற அன்பும் தயவும், கருணையும், இரக்கமும் அவசியம். அதை யாரும் முறையாக சரியாக புரிந்து செயல்படுவது இல்லை., தனிமனித ரீதியாகவும் சரி, ஒரு சமூகமாகவும் சரியே! அதனால்தான், சிரியாவின் அவலநிலையை உலகம் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது.
சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இராணுவ தாக்குதல் காரணமாக இதுவரை 600 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. 2012ம் ஆண்டில் இருந்தே இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்த போரின் நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் இதயத்தை உருக்கும் வகையில் நிறைய படங்கள், வீடியோக்கள் வெளியாகி இருக்கின்றன. பெற்றோரை இழந்த ஒரு சிறுமியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகச் செய்தததை விடுத்து உலகம் வேறென்ன செய்தது.
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள கவுட்டா என்று பகுதியில் போர் காரணமாக சாலையில் ஓடும் இரத்தம் பார்க்கவே பயமுறுத்தும் அளவிற்கு வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இதில் போரில் இறந்த குழந்தைகள் சடலங்களாக வரிசையாக அடுக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த போரில் குழந்தைகள்தான் அதிகம் இறந்தார்கள் என்று கூறப்படுகிறது.
ஒரு சிறுமி பள்ளியில் இருக்கும் போது தாக்குதல் நடந்து இருக்கிறது. இவருடைய காலில் அடிப்பட்டு உள்ளது. ஆனாலும் என்னுடைய உடையை கிழிக்காதீர், அது புதியது, என்று கண்ணீர் விட்டு இருக்கிறார். ‘உங்கள் ஊரில் குழந்தைகளே இல்லையா? உங்கள் குழந்தைகள் மீது இப்படித்தான் குண்டு போடுவீர்களா? குழந்தைகள் இறக்கிறார்கள், பெண்கள் இறக்கிறார்கள், என் அப்பா என்னுடன் இப்போது இல்லை, என்னால் என்ன சொல்ல முடியும். எங்களை நாங்கள் கடவுளிடம் ஒப்படைத்துவிட்டோம்” என்று பேசும் அந்த சிறுமியின் குமுறல் கல்நெஞ்சையும் கரைக்கச் செய்யும்.
ஆனாலும் உலகம் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது.இறந்துபோய்விட்டதா.., இரக்க மனம்..!இரக்கம்..!
தனி மனித அளவிலும் சக முஸ்லிம்கள் எனும் சகோதரத்துவ வாஞ்சையிலும் அனைத்துக்கும் மேலாக மனிதாபிமான அளவிலும் அவர்களுக்காக இயன்ற உதவிகள் செய்தும் இறைவனிடம் பிரார்த்தித்தும் எங்கள் இரக்க குணத்தை இனியாவது உயிர்ப்பிக்கச் செய்வோம்.
வல்லோன் ஏகன் நிச்சயம் அருள் புரிவான்..!
ஏனெனில்,
“குதா கே கஹ்ர் மே தேர் ஹை., அந்தேர் நஹீ!”
(இறை சந்நிதானத்தில் தாமதம் இருக்கலாம், ஆனால் நிச்சயம் நிராகரித்தல் அறவே இல்லை)
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...

Leave a Reply


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.