நோன்பு அல்லாஹ்வுக்குரியது.

நோன்பு அல்லாஹ்வுக்குரியது.
இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல், உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது.

இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல், உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது.

ரமளான் மாதம் எத்தகையதென்றால், அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், மேலும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது. எனவே இனி உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும். ஆனால் எவரேனும் நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால், அவர் மற்ற நாட்களில் கணக்கிட்டு நோன்பு நோற்றிட வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவை விரும்புகின்றான். அவன் உங்களுக்குக் கஷ்டத்தைத் தர விரும்பவில்லை. (நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் நிறைவு செய்வதற்காகவும், அல்லாஹ் உங்களை நேரிய வழியில் செலுத்தியதற்காக நீங்கள் அவனுடைய மேன்மையைப் போற்றி அவனுக்கு நன்றி பாராட்டுவதற்காகவுமே (இவ்வழி உங்களுக்குக் காண்பிக்கப்படுகிறது!)
இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ”நோன்பு எனக்குரியது. நானே அதற்குப் பிரதிபலன் வழங்குவேன். நோன்பாளி தன் இச்சைகளையும் தன் உணவையும், பானத்தையும் எனக்காகவே விட்டு விடுகிறார்’ என்று அல்லாஹ் கூறுகின்றான். நோன்பு ஒரு கேடயமாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு திறக்கும் வேளையில் கிடைக்கிற ஒரு மகிழ்ச்சியும், மறுமையில் தம் இறைவனை அவர் சந்திக்கும் வேளையில் கிடைக்கிற ஒரு மகிழ்ச்சியும்தான் அவை. நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை கஸ்தூரி வாசனையைவிட அல்லாஹ்விடம் மணம் மிக்கதாகும்” என அபூஹுரைரா(ர) அறிவித்தார்.
(புஹாரி: 7492)
நோன்பு எனக்குரியது என அல்லாஹ் கூறுகின்றான். எல்லா நல்லறங்களும் அல்லாஹ்வுக்குரியதே! அப்படியிருக்கும் போது நோன்பை மட்டும் ஏன் அல்லாஹ் இப்படிக் குறிப்பிட்டுக் கூற வேண்டும் என்ற கேள்வி எழலாம்.
ஒருவர் நோன்பை உண்மையாக நோற்கின்றார் என்றால் அதை அவர் அல்லாஹ்வுக்காகவே செய்கின்றார். ஏனெனில், நோன்பு என்பது தொழுகை, ஸகாத், ஹஜ் போன்ற கூட்டுக் கடமையல்ல தனித்துச் செய்யப்படும் ஒரு இபாதத் ஆகும். ஒருவர் தனிமையில் சாப்பிட நினைத்தால் சாப்பிட்டு விடலாம். ஆனால், அவர் சாப்பிடாமல் இருக்கின்றார் என்றால் அது அல்லாஹ் ஒருவனுக்காக மட்டுமேயாகும். இதனால்தான் ‘அவன் தனது உணவையும், பானத்தையும், இச்சையையும் எனக்காக விடுகின்றான்” என்று கூறப்படுகின்றது.

Related Post